முன்னாள் நீதிபதி: அரசாங்கம் பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறித்து விட்டது

மலாயாப்  பல்கலைக்கழகத்தில் 1960-களில்  இருந்த  நிலை  இன்றில்லையே  என்று  வருத்தப்படுகிறார்  முறையீட்டு  நீதிமன்ற  முன்னாள்  நீதிபதி  முகம்மட்  அரிப்  முகம்மட்  யூசுப். அவர் மலாயாப்  பல்கலைக்கழகத்தில்    10 ஆண்டுகள்  சட்ட  விரிவுரையாளராக  பணியாற்றியவர்  என்பது  குறிப்பிடத்தக்கது. அரசாங்கம்  பல்கலைக்கழகங்களின்  கல்விச்  சுதந்திரத்தை  வெகுவாகக்  கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இதனால்  பல்கலைக்கழகங்களின் …

பத்து மலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பத்து  மலை தைப்பூசத்  திருவிழாவுக்கு  வருகை  புரிந்தார். காலை  மணி  10.30க்கு  கோயில்  வளாகம்  வந்தடைந்த  பிரதமரையும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும்  மஇகா தலைவர்  ஜி.பழனிவேலும்  ஆலயத் தலைவர்களும் வரவேற்றனர். பத்து  மலையில்  சுமார்  1.6மில்லியன் பக்தர்கள்  பக்திப்  பரவசத்துடன்  தைப்பூசத்தைக்…

விமானி இருக்கையைவிட்டு அப்பால் சென்றார் என்பதற்கு ஆதாரமில்லை

QZ8501 ஏர்  ஏசியா  விமான  விபத்து  பற்றி  விசாரணை  நடத்தும்  இந்தோனேசிய   அதிகாரிகள்,   விமானி  தம்  இருக்கையைவிட்டு  அப்பால்  சென்றார்  என்பதற்கோ தானியக்கக்  கட்டுப்பாட்டு  முறைக்கான  மின் தொடர்பு  துண்டிக்கப்பட்டது என்பதற்கோ  எந்த  ஆதாரமும்  இதுவரை  இல்லை  என்கிறார்கள். விசாரணையாளர்களுக்கு  அணுக்கமான  இரு  வட்டாரங்கள்  கேப்டன்  இரியாந்தோ தம் …

இஸ்மாயில் சப்ரியின் கருத்துகள் நிந்தனைக்குரியவை

விவசாயம், விவசாயம்  சார்ந்த  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி, தாம்  கூறியதை  மீட்டுக்கொண்டு சீன  வர்த்தகர்களுக்கு எதிராக எதிராக சுமத்திய  ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளுக்காக  மன்னிப்பும்  கேட்க  வேண்டும்  எனப்  பிரதமர்   உத்தரவிட  வேண்டும். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   அவ்வாறு செய்யவில்லையென்றால்  அவர்  அவரது  1மலேசியா  சுலோகத்தைத்  தூக்கிக்  குப்பைத் …

நேற்றிரவு பத்துமலை இருளில் மூழ்கியது

  நேற்றிரவு மணி 8.53 லிருந்து நள்ளிரவு தாண்டியும் பத்துமலை இருளில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. தைப்பூச திருவிழாவைக் கொண்ட பத்துமலையில் குழுமியிருந்த பக்தர்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது அவர்கள் சற்றும் எதிர்பாராததாகும். தெனகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக பத்துமலை கோயில் குழு…

மந்திரி சாப்ரி: நான் குறிப்பிட்டது எதற்கும் மசியாத சீனர்களைத்தான்

  பொருள்களின் விலையைக் குறைப்பதற்கு மலாய் பயனீட்டாளர்கள் சீன வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் விடுத்திருந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து வழக்கம் போல் அவர் தாம் அனைத்து சீனர் வணிகர்களையும் குறிப்பிடவில்லை என்று…

சீனர் கடைகளைப் புறக்கணிக்க மலாய்க்காரர்களிடம் வலியுறுத்து

விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப், மலாய்க்காரர்கள்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என  வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான்  அவர்கள்  விலைகளைக்  குறைப்பார்கள். இஸ்மாயில்  சப்ரி  முகநூலில்  இவ்வாறு  கூறினார். ஆனால், அந்த  முகநூல் பக்கத்தை  எல்லாராலும் பார்க்க  இயலாது. ஆனால், அது  அப்படியே  பிரதியெடுக்கப்பட்டு …

தொழிற்சங்க தலைவர் ஒவ்வொருநாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

  இந்நாட்டு முதலாளிகள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கும் கடமையை மறந்து விட்டனர் என்பதைகெரித்தாப்பி தானா மலாயு பெர்ஹாட்டின் (கேடிஎம்பி) தலைவர் எலியாஸ் காடிர் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஆர்யுஎம்) தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் அவரிடம் ஒவ்வொரு நாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று…

வலைப்பதிவர்: என்னைப் பிடித்த போலீசார் உத்துசானைப் பிடிக்காதது ஏன்?

ஆள்பார்த்துத்தான்  வழக்கு  தொடுக்கப்படுகிறது  என்கிறார்  ‘மிலோசுவாம்’ என்ற  பெயரில்  பதிவிடும்  யூசுப் அல்- சித்திக்.  2013  லாஹாட்  டத்து  ஊடுருவல் தொடர்பாக  பதிவிட்டிருந்ததற்காகக்  கைது  செய்யப்பட்டு  ஈராண்டுச்  சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டது  பற்றி  அவர்  இவ்வாறு  கூறினார். தாம்  பதிவிட்டதற்கு  மூன்று  நாள்களுக்கு  முன்பு உத்துசான்  மலேசியாவும்  அதன் …

அன்வார்: சிறைக்கு அஞ்சித் தப்பியோட மாட்டேன்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  குதப்புணர்ச்சி  வழக்கில்  விடுவிக்கப்படலாம்  என்ற  நம்பிக்கையுடன்  இருக்கிறார். அதேவேளை  சிறைக்குச்  செல்லவும்  அவர்  அஞ்சவில்லை. சிறைக்கு  அஞ்சித்  தப்பியோடப்போவதில்லை  என்றும்  அவர்  உறுதி  கூறினார். பிப்ரவரி  10-இல், கூட்டரசு  நீதிமன்றம் குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டுக்கு  எதிரான அவரது  மேல்முறையீடுமீது  தீர்ப்பளிக்கவுள்ளது. பிரபல  இஸ்லாமிய  கல்விமான் …

டத்தோ பட்டத்துக்கு ஜேக்கி சான் பொருத்தமானவரே

ஹாங்காங்  சூப்பர் ஸ்டார்  ஜேக்கி  சான் அவரது  ‘போலீஸ்  ஸ்டோரி’படத்தின்  படப்பிடிப்பைக்  கோலாலும்பூரில்  நடத்தியதுதான்  அவருக்கு  டத்தோ  பட்டத்தைப்  பெற்றுக் கொடுத்திருக்கிறது  என்கிறார்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். “மலேசியாவில்  நிறைய  ரசிகர்களைக்  கொண்டுள்ள  ஜேக்கி  சான் மலேசியாவுக்கு  அதிலும்  கோலாலும்பூருக்கு  நல்ல  விளம்பரத்தைத் …

ஸுனார் மலேசியாவின் சிறந்த படைப்பாளி: உலகக் கேலிச்சித்திர அமைப்பு புகழாரம்

அரசியல்  கேலிச்சித்திரக்காரர்  ஸுனாரை  மலேசியாவின்  சிறந்த  படைப்பாளி  எனப்  போற்றி  பாராட்ட  வேண்டுமே  தவிர  அவரின்  கருத்துச்சொல்லும்  உரிமையைக்  கட்டுப்படுத்தக்கூடாது. உலகக்  கேலிச்சித்திர  அமைப்பு  ஒன்று,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  இவ்வாறு  வேண்டுகோள்  விடுத்துள்ளது. ஜனவரி  31-இல்,  நஜிப்புக்கு  எழுதிய  கடிதமொன்றில்  Cartoonists Rights Network International…

பாஸ் எம்பி: தேர்தலைப் போற்றுவதை நிறுத்துவீர்

  பாஸ் ஊராட்சி மன்ற தேர்தலை ஆதரிக்கவில்லை ஏனென்றால் அது நீதிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று பாஸ் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் அப்துல் நிக் மாட் கூறுகிறார். ஊராட்சி மன்ற தேர்தல் பற்றிய டிஎபி மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான சர்ச்சையில் சேர்ந்து கொண்ட அவர் இது…

கோபிந்த் சிங்: அல்தான்துயா கொலை பற்றி நஜிப் விளக்கம் அளிக்க…

  அல்தான்துயா கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது தெரியாதிருக்கும் நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குறித்து பிரதமர் நஜி ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கோரிக்கை விடுத்துள்ளார். "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பிரதமர் இப்போது நடவடிக்கையில்…

அன்வார்: ரசாக் பஹிண்டா கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

  மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை வழக்கு முடிவுற்ற பின்னர் வெளியில் மீண்டும் காணப்படும் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஹிண்டா ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். அல்தான்துயா வழக்கு முடிவுற்ற பின்னர், முதன்முறையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற…

அன்வார்: டிஎபியும் பாஸ்சும் சச்சரவை நிறுத்த வேண்டும்

  தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்துமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கேட்டுக் கொண்டார். ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக பாஸ் கட்சியும் டிஎபியும் வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…

விலைகள் ஏற்றம்: டிஎன்பி, நஜிப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பொருள்களின் விலையைக் குறைக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் அந்நடவடிக்கையை முதலில் டிஎன்பி மற்றும் பிரதமர் நஜிப்புடன் தொடங்க வேண்டும் என்று டிஎபி கேட்டுக் கொண்டுள்ளது. "நான் அவரின் அறிக்கையை…

எரிபொருள் விலை குறைக்கப்படுகிறது

  பெப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து ரோன்95 இன் விலை ஒரு லீட்டருக்கு 21 சென்னும், டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 23 சென்னும் குறைக்கப்படும். நள்ளிரவு மணி 12 லிருந்து ரோன்95 மற்றும் டீசல் ஆகிய இரண்டும் ஒரு லீட்டர் ரிம1.70 க்கு விற்கப்படும். ரோன்97லின் விலை…

ஜோகூர் ஐபிகே திட்டம் கைவிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்க வேண்டும்

ரிம  103  மில்லியன்  செலவில்  தொடங்கப்பட்ட  ஜோகூர்  போலீஸ்  தலைமையகத்  திட்டம்  இன்று   “கைவிடப்பட்ட”  நிலையில்  இருப்பது பற்றி  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  விளக்க  வேண்டும்   எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பிகேஆர் தலைவர்கள்  புக்கிட்  பத்து  சட்டமன்ற  உறுப்பினர்  ஜிம்மி  புவாவும், National Oversight and Whistleblowers…

எம்பி: 1எம்டிபி ஆனந்தாவிடம் பணம் வாங்குவதா? வெட்கக்கேடு

கடன்  தொல்லைகளை  எதிர்நோக்கும் 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) நாட்டின்  இரண்டாவது  மிகப்  பெரிய  பணக்காரரான  ஆனந்தகிருஷ்ணனிடம்  கடன்  வாங்க  முற்பட்டிருப்பது “வெட்கக்கேடான விசயம்”  என எதிரணி  எம்பி  ஒருவர்  கூறினார். அந்நிறுவனம் கேய்மென்  தீவிலிருந்து  அதன்  ரிம3.9பில்லியன்  முதலீட்டை  மீட்டுக்கொண்டிருப்பதாகக்  கூறிய பின்னரும்  இந்நிலை ஏற்பட்டுள்ளது  என …

அம்பிகா: நஜிப்பின் இந்தியர்கள் “இம்மண்ணின் மகன்கள், மகள்கள்” என்ற பேச்சு…

  நஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பிளவு பெரும்பாலும் இன மற்றும் சமய அடிப்படையில் ஆனதாகும். பிரதமர் நஜிப் சொல்வது…

ரபிஸி: பிப்ரவரியில் ரோன்95-இன் விலை ரிம1.62ஆகக் குறைய வேண்டும்

புத்ரா  ஜெயா  பிப்ரவரி  மாதம் ரோன்95-இன்  விலையை  லிட்டருக்கு ரிம1.62  என  நிர்ணயம்  செய்ய  வேண்டும்  என்று  கூறுகிறார்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி. இந்த  விலை  ரோன்95-இன்  சந்தை  விலையைப்  பிரதிபலிப்பதாக  ரபிஸி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார். “உதவித்  தொகை  வழங்கப்படுமானால்  அதன்  விலை…

துப்பாக்கியும் துணை அமைச்சரும்

இளைஞர், விளையாட்டு துணை  அமைச்சர்  எம்.சரவணன்  இடுப்பில்  துப்பாக்கி  செருகியிருக்கும்  படம்  முகநூலில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது. புதன்கிழமை, கோலாலும்பூர்  மஇகா  தலைமையகத்தில்  சரவணன்  பதற்றமிக்க  சூழலில்  செய்தியாளர்  கூட்டம்  நடத்தியபோது அப்படம்  பிடிக்கப்பட்டிருக்கிறது. அது  பற்றி  மலேசியாகினியிடம்  பேசிய  சரவணன்,  துப்பாக்கி  வைத்திருக்க உரிமம்  பெற்றிருப்பதாகக்  கூறினார்.…