ஹிம்புனான் ஹிஜாவிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என வோங் தாக்-கிற்கு வேண்டுகோள்

பெந்தோங் தொகுதியில் டிஏபி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக், ஹிம்புனான் ஹிஜாவ் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினரான கிளிமெண்ட் சின் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அரசு சாரா அமைப்பு எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதாக…

‘லஹாட் டத்துவில் வேவுத் துறை முழுத் தோல்வி’

சபா லஹாட் டத்துவில் 'அரச சுலு இராணுவம்' மேற்கொண்ட ஊடுருவலைக் கண்டு பிடிப்பதில் 'வேவுத் துறை மொத்தமாகவும் முழுமையாகவும் தோல்வி கண்டுள்ளது'. இராணுவத்தின் வேவுத் துறை தனது வலிமையை இழந்து விட்டதே அதற்குக் காரணமாகும். அந்தக் குற்றச்சாட்டை ஒய்வு பெற்ற இராணுவத் தலைமைத் தளபதி  லெப்டினட் ஜெனரல் அப்துல்…

பாஸ்: முட்டைகளை நாங்கள் வீசவில்லை, எங்கள் மீது எறியப்பட்டன

கடந்த திங்கிட்கிழமையன்று நெகிரி செம்பிலான் ஜெலுபு பாஸ் தொகுதி உறுப்பினர்கள் பெல்கிரா ஆயர் ஹித்தாமில் நிகழ்ந்த பிஎன் செராமா ஒன்றில் சொற்பொழிவாளர் மீது முட்டைகளை எறிந்ததாக வெளியான செய்திகளை அந்தத் தொகுதி மறுத்துள்ளது. உத்துசான் மலேசியாவில் வெளியான அந்தச் செய்தியை மறுத்த ஜெலுபு பாஸ் துணைத் தலைவர் நோர்…

அஸ்ஸிமுடி நடவடிக்கை பகுதியில்தான் இருப்பார் என போலீஸ் நம்புகிறது

‘அரச சூலு இராணுவம்’ எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதக் கும்பலின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம், லாஹாட் டத்துவில் பெல்டா சஹாபாட்டைச் சுற்றிலும் மலேசிய பாதுகாப்புப் படைகள்  ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டுள்ள பகுதியில்தான் இருப்பார் என நம்பப்படுகிறது. சூலு ‘சுல்தான்’ மூன்றாம் ஜமாலுல் கிராமின் தம்பியான அஸ்ஸிமுடி நடவடிக்கை…

மூசா ஹீத்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது

13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்டால் நாடு நொடித்துப் போகும் எனக் கருதுவது நியாயமாகாது என முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகிறார். அதற்குப் பதில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தான் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அது…

‘நான் அதற்குள் செத்துப்போவதை அல்டான்துன்யா விரும்பவில்லை’

பாலாவுடன் நேர்காணல் இறையருள்தான் தம்மைக் காப்பாற்றியதாக நம்புகிறார் முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியம் என்ற பாலா. பாலா, 53, இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மார்ச் 3-இல், சிலாங்கூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த தாம் இரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் செத்திருக்கலாம்.…

ஹிண்ட்ராப் வேதமூர்த்தி உண்ணா விரதம்

-வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப்,  துணைத் தலைவர். மார்ச் 12, 2013. ஹிண்ட்ராப் தலைவர்  வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை  மீறல்களுக்கு முற்றி புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொண்டிருக்கும்   உண்ணாவிரத பிரார்த்தனையை  2 ஆம் நாளாக  தொடர்கிறார். ரவாங் , ஜாலான்  டெம்ப்லர் 17 1/2…

சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP…

சபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP சொல்கிறது. சபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை புத்ராஜெயாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு…

முட்டைகளை எறியத் தெரியும் ஆனால் எழுத்துக் கூட்டத் தெரியாது

"ஊடுருவல்காரர்களை 'பயங்கரவாதிகள்' எனச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. நமது வீரமிக்க போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்கள் 'சகோதரர்கள்' என அவர்கள் அழைத்தார்கள். பிஎன் ஆதரவுக் கும்பல்கள் பிகேஆர் ஆதரவாளர்கள் மீது முட்டைகளையும் கம்புகளையும் வீசினர் பங்குன்லா மலேசியா: எதிர்ப்பைக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்…

அஸ்ருல்: பக்காத்தான் வெற்றி சந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் வரம்புக்கு…

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் என தாம் கூறிய ஆரூடம் மெய்யானால் அது தொடக்கத்தில் நாட்டின் பொருளாதாரம் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அதனால் ஏற்படும் தாக்கம் வரம்புக்கு உட்பட்டிருக்கும் என்றும் பாங்க் இஸ்லாம் வேலை நீக்கம் செய்துள்ள பொருளாதார வல்லுநர் அஸ்ருல் அஸ்வார்…

பிஎன் 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் கூறுகிறார்

பாரிசான் நேசனல்(பிஎன்), எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் 160 நாடாளுமன்ற இடங்களை வென்று மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், 2008 பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சிகளிடம் இழந்த மாநிலங்களைத் திரும்பக் கைப்பற்றும் ஆற்றலும் அதற்குண்டு…

‘கறை படிந்த’ வேட்பாளர்களை கைவிடுமாறு நஜிப்புக்குச் சவால்

ஊழலுக்காக விசாரிக்கப்படும் கட்சி உயர் அதிகாரிகளை பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றுமாறு பிகேஆர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குச் சவால் விடுத்துள்ளது. அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், சபா முதலமைச்சர் மூசா அமான், சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், நெகிரி…

சூலு பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்

  இன்று காலை லாஹாட் டத்துவில் சுங்கை ஞாமோக்கில் பாதுகாப்புப் படைகளுக்கும்  ‘சூலு அரச இராணுவம்’ எனச்  சுய-பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதம்தாங்கிய கும்பலுக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுதப்படை வீரர் ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படையினர், தஞ்சோங் பத்து-க்கு அருகில் சுங்கை ஞாமோக்கைச் சுற்றிலும் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது…

செம்பூர்னாவில் ஆறு சந்தேகப் பேர்வழிகள் கைது

செம்பூர்னா, கம்போங் பங்காவ்-பங்காவ்-இல் போலீஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில், தென் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சூலு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரால் மிகவும் தேடப்படும் ஒரு நபராவார். வாட் 69 மின்னல் படையினரும் பொது நடவடிக்கை படையினரும் சந்தேகப் பேர்வழிகள்…

போலீஸின் இரட்டை நியாயத்தைச் சாடுகிறார் ரபிஸி

பிகேஆர்,  போலீஸ் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிப்பதாகக் குறைகூறியுள்ளது.  நேற்று, அதன் தலைமையகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முட்டைகள், குச்சிகள் முதலிவற்றை வீசி எறிந்ததை போலீசார் வேடிக்கை பார்த்தனரே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றது கூறியது. அப்படிச் செய்தவர்களில் சிலர் அம்னோ, பிஎன் உறுப்பினர்கள் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி…

பிகேஆர்: சம்பள உயர்வு கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை

அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார். பிஎன் கூட்டரசு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு தவணைக் காலம் மார்ச் 8ம் தேதி முடிந்து விட்டதாக அவர் சொன்னார். உண்மையில்…

இரத்தக்குழாய் அடைப்பால் பரப்புரை செய்வதிலிருந்து ஒதுங்கி இருப்பார் பாலா

முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியத்துக்கு இருதய இரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் முதல் நாள், கோத்தா பாருவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது முதன்முதலாக அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது.  அதைத்…

தடுப்புக் காவல் மரணம்: சடலத்தை குடும்பத்தினர் சோதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை

கம்பார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த எம் ரகு-வின் சடலத்தை தாங்கள் சோதனை செய்யவும்  தங்கள் கண்டுபிடிப்புக்களை கேமிராவில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்படாததால் ஏதோ தவறு நிகழ்வதாக அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். சடலத்தை சோதனை செய்வதற்கு கம்பார் மருத்துவமனை சவக் கிடங்கிற்கு தாம்…

முன்னாள் MNLF தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது

கடந்த வாரம் பாதுகாப்புப் படைகள் கொன்ற சுலு 'ஜெனரல்' மோரோ தேசிய விடுதலை முன்னணியின் (MNLF) முன்னாள் தளபதி ஹாஜி மூசா என்பதை சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். "தஞ்சோங் பத்துவில் பாதுகாப்புப் படைகள் ஹாஜி மூசா எனப் பெயருடைய 'ஜெனரல்' ஒருவரை சுட்டுக்…

சபாவில் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்து பிலிப்பினோக்கள் வெளியேறுகின்றனர்

சபா செம்போர்ணாவிலிருந்து பிள்ளைகள் உட்பட 57 பிலிப்பினோக்கள்  சிறிய படகுகள் மூலம் நேற்று பிலிப்பின்ஸில் உள்ள தாவி தாவி தீவுகளைச் சென்றடைந்தனர். மலேசியப் பாதுகாப்புப் படைகள் தங்களை விரட்டியதாக அவர்கள் கூறிக் கொண்டனர். ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி வாக்கில் தாங்கள் செம்போர்ணாவிலிருந்து புறப்பட்டதாகவும் ஒர் இரவு…

உள்துறை அமைச்சர் அவர்களே, அவர்கள் இப்போது பயங்கரவாதிகளா ?

'உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ? ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை புத்ராஜெயா ஏற்றுக் கொள்கிறது சின்ன அரக்கன்: லஹாட் டத்து 'ஊடுருவல்காரர்களை' 'பயங்கரவாதிகள்' என அதிகாரப்பூர்வமாக அழைப்பதற்கு…

ஒப்ஸ் டவுலாட்டின் ஏழாம் நாள்: இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

சாபாவில் ஒப்ஸ் டவுலாட் தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ‘அரச சூலு இராணுவம்’ என்று சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருப்போருடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாக சாபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தாயிப் (இடம்) கூறினார். “தேசிய…

சுலு ஊடுருவல்காரர்கள் “விலகிக் கொள்வது” பற்றி சிந்திக்கின்றனர்

சபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய தமது ஆதரவாளர்கள் சண்டையிலிருந்து 'விலகிக் கொள்வது' மீது பிலிப்பின்ஸ் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த சுலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் தமது பேராளர்களை அனுப்பியுள்ளார். ஜமாலுல் கிராமின் இளைய சகோதரர் இரண்டாவது சுல்தான் பாந்திலான் எஸ்மாயில் கிராமும்…