திரெங்கானு சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்துக

திரெங்கானுவில்  முன்னாள்  மந்திரி  புசார்  அஹமட்  சைட்  உள்பட  மூன்று  சட்டமன்ற  உறுப்பினர்கள்  அம்னோவிலிருந்து  விலயதைத்  தொடர்ந்து  பிஎன்  சிறுபான்மை  அரசாகியுள்ளதால்  மாநிலச்  சட்டமன்றம்  கலைக்கப்பட  வேண்டும்  என்று  அரசமைப்புச் சட்ட வல்லுனர்  ஒருவர்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசமைப்புப்படி  பிஎன்  அங்கு  தொடர்ந்து  ஆட்சி  செய்வது  இயலாது  என   அப்துல் …

திரெங்கானுவில் பிஎன் சிறுபான்மை அரசானது

புக்கிட்  பீசி பிரதிநிதி ரோஸ்லி  டாவுட்,  அம்னோவிலிருந்து  விலகிய  மூன்றாவது  மாநில  சட்டமன்ற  உறுப்பினராவார். அவரது  விலகலைத்  தொடர்ந்து  திரெங்கானு  மாநிலச்  சட்டமன்றத்தில்  பிஎன்    சிறுபான்மை  அரசாகியுள்ளது. முன்னாள்  திரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்டும்  அஜில்  சட்டமன்ற  உறுப்பினரும்  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினருமான  கசாலி  தயிப்பும்  அம்னோவிலிருந்து …

திராங்கானுவில் பின் பெரும்பான்மையை இழந்தது

  திரங்கானு புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டாவுட் அம்னோவிலிருந்து விலகிய மூன்றாவது பிரதிநிதியாவார். அவரது விலகலுடன் திராங்கானு சட்டமன்றத்தில் பிஎன் சிறுபான்மை கட்சியாகி விட்டது. இன்று ரோஸ்லி பெர்னாமாவுக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில் தாம் கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்துள்ளார். திரங்கானு மந்திரி புசார்…

இஸ்மா: வாயை அடக்கவே இனவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள்

ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா), தன்  “வாயைப்   பூட்டிவைப்பதற்காகவே” தன்னை  இனவாத  அமைப்பு  என்றும்  தீவிரவாத  அமைப்பு  என்றும்  குற்றம் சாட்டுகிறார்கள்  எனக்  கூறியுள்ளது. இன்று,  மலாய்  முஸ்லிம்களுக்கு   திறந்த  மடல்  எழுதிய  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  ஜேய்க்  அப்துல்  ரஹ்மான்,  நாட்டில்  இஸ்லாத்துக்குக்  குழிபறிக்க “யூதர்களும்”  “யூத …

கோலாலும்பூரில் மீண்டும் திடீர் வெள்ளம்

இன்று  பிற்பகல்  சுமார்  2.30க்கு  கன மழை  பெய்ததைத்  தொடர்ந்து  கோலாலும்பூரில்  பல  பகுதிகளில்  திடீர்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. ஜாலான்  பங்சார்,  ஜாலான்  சான்  சவ்  லின்,  ஜாலான்  செமாந்தான்  உள்பட  பல  சாலைகளில்  நீர் தேங்கி  நின்றதாக கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற  போக்குவரத்து  தகவல்  கட்டமைப்பு (ஐடிஸ்)…

திரெங்கானு எம்பி அஹ்மட் சைட் பதவி விலகினார்

திரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  பதவி  துறந்தார்.  ப்திய  மந்திரி  புசாராக  செபராங்  தகிர்  சட்டமன்ற  உறுப்பினர்  அப்துல்  ரசிப்  அப்துல்  ரஹ்மான்  இன்றிரவு இஷ்யா  தொழுகைக்குப்  பின்னர்  பதவி  ஏற்பார்  எனத்  தெரிகிறது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  செய்துகொள்ளப்பட்ட  ஓர்  உடன்பாட்டின்படி  அஹ்மட்  சைட் …

தாம் பாஸ் உறுப்பினர்தான் என அடம் பிடிக்கிறார் முகம்மட் நபி…

புக்கிட்  குளுகோர்  “நான்  பாஸ்  உறுப்பினர்தான். நான்  அரசியலில்  ஈடுபட்ட  காலம்  தொட்டே  கட்சியின்  உயர்த்  தலைவர்கள் பலருக்கும்  என்னைத்  தெரியும்”. புக்கிட்  குளுகோர்  நாடாளூமன்ற  இடைத்  தேர்தலில்  சுயேச்சையாக  போட்டியிடும்  முகம்மட்  நபி  பக்ஸ்  முகம்மட்  நபி  அப்துல்  சத்தார்  இவ்வாறு  கூறினார். பாஸ்  தலைவர்கள்  அவரை …

‘பார்டி சாரி மாகான்’பிஎன்னுக்காக போட்டியிடுகிறதாம்: அஸ்மின் கூறுகிறார்

புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  பிஎன்  போட்டியிடவில்லை  என்றாலும்,  தனக்குப்  பதிலாக  வேறொரு  கட்சியை  அது  களமுறக்கி  இருப்பதாக  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின் அலி  கூறினார். பார்டி சிந்தா  மலேசியா(பிசிஏ)-வைத்தான்  அவர்  குறிப்பிட்டார். அதை  “பார்டி  சாரி  மாகான் (Parti Cari Makan)”  என்றும்  கேலி  செய்தார்.…

ஹுடுட் மசோதா மீட்டுக்கொள்ளப்படுவதை முஸ்லிம் என்ஜிஓ வரவேற்கிறது

 முஸ்லிம்  என்ஜிஓ-வான  இக்ராம், அடுத்த  நாடாளுமன்றக்  கூட்டத்தில் ஹுடுட்  சட்டமுன்வரைவைத் தாக்கல்  செய்வதில்லை  என்ற  பாஸின்  முடிவை  வரவேற்றுள்ளது. இஸ்லாமிய  சட்டத்தைச்  செயல்படுத்துவதற்குமுன் “அனவருக்கும்  நியாயம்  கிடைப்பதையும்  நல்வாழ்வு  அமைவதையும்  உறுதிப்படுத்த வேண்டும்”,  என  இக்ராம்  தலைவர்  முகம்மட் பாரிட்  ஷேக்  ஓர்  அறிக்கையில்  கூறினார். கிளந்தானில்  இஸ்லாமிய …

சிலாங்கூரில் பிகேஆர் தேர்தல் தாமதப்படுத்தப்படுவது அஸ்மினைத் தோற்கடிக்கும் முயற்சியா?

சிலாங்கூரில்  கட்சித்  தேர்தலின்போது  நிகழ்ந்த  ரகளையால்  வாக்களிப்பு  இரத்துச்  செய்யப்பட்டது எதிர்பார்க்கப்பட்டதுதான்  என்று  கூறிய  பிகேஆர்  நடப்புத்  துணைத்  தலவர்  முகம்மட்  அஸ்மின்  அலி,  அதிகாரப்பூர்வ  விளக்கத்துக்காகக்  காத்திருப்பதாகத்  தெரிவித்தார். அவர்  அது  பற்றி  மேலும்  விவரிக்கவில்லை. ஆனால்,   கட்சி  வட்டாரங்கள்  சில,  அஸ்மின்  திரும்பவும்  தேர்ந்தெடுக்கப்படுவதைத்  தடுக்கும்  …

புக்கிட் குளுகோரில் நால்வர் போட்டி

புக்கிட்  குளுகோர்  இடைத் தேர்தலில் டிஏபி-இன்  ராம்கர்பால்  சிங்  சுயேச்சைகளான  ஹுவான் செங்  குவான் , முகம்மட்  நபி  பக்ஸ்,  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸான்  ஆகிய  நால்வர்  போட்டியிடுவார்கள். வேட்புமனு  தாக்கல்  செய்யும் நடைமுறை  சுமூகமாக  நடைபெற்றது  எனத்  தேர்தல்  ஆணையத்  தலைவர்  அப்துல்  அசீஸ் …

புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல்: நால்வர் போட்டியிடுகின்றனர்

  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளான இன்று பினாங்கு தேவான் ஸ்ரீ பினாங்கில் வேட்பாளர் நியமன நடவடிக்கை காலை மணி 9.00 க்கு தொடங்கியது. காலஞ்சென்ற கர்பால் சிங் இத்தொகுதியை மூன்று தவணைக்கு தம் வசம் வைத்திருந்தார். காலியான இத்தொகுதியில் போட்டியிட ஐவர் விருப்பம்…

உத்துசான் மலேசியா: தாய்மொழிப்பள்ளிகள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே … “இனம்” என்ற…

  அரசாங்க பாரங்களில் "இனம்" என்ன என்பதைக் குறிப்பதற்கான பகுதி அகற்றப்படுவதை அம்னோவின் குரலான உத்துசான் மலேசியா ஆதரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை அது முன்வைத்துள்ளது: இந்நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகள் அழிக்கப்பட வேண்டும். அந்நாளிதழின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதன் தலையங்கத்தை புனைப் பெயரில் எழுதும் அவாங்…

புக்கிட் குளுகோரில் பிஎன் போட்டியிடாது

  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மசீச போட்டியிட தயாராக இல்லாத நிலையில், பாரிசான் எந்த ஒரு வேட்பாளரயும் களமிறக்காது என்று பின் தலைவர் நஜி ரசாக் கூறினார். ஆனால், பெர்னாமா செய்தியின்படி, சுயேட்சை வேட்பாளர்களை போட்டியில் இறக்குவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. "பங்காளித்துவ கட்சிகளிலிருந்து அல்ல.…

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்

-அணா பாக்கியநாதன், மே 11, 2014.  கோல்பீல்ட்ஸ் தோட்டத்தில்  சிலாங்கூர் அரசால் கட்டப்படும்  மாணவர் தங்கும் விடுதி மற்றும் பள்ளிக்கு  உடனடியாக டெண்டர் சமர்ப்பிக்க வேண்டிய பணிகளைச்  செய்யச் சிலாங்கூர் மந்திரி புசார்  காலிட்  பின் இப்ராஹிம்  ஜே.கே .ஆர் என்னும்  பொதுப்பணி துறைக்குக் கட்டளையிட்டார். சுமார் 500…

பாஸ் ஹுடுட் சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யாது

பாஸ்,  கிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமல்படுத்த  வகைசெய்யும்  சட்ட  முன்வரைவை  ஜூன்  மாத  நாடாளுமன்றக்  கூட்டத்தில் தாக்கல்  செய்யப்போவதில்லை. ஹுடுட்  பற்றி  ஆராய  புதிதாக  கூட்டுத்  தொழில்நுட்பக்  குழு  அமைக்கப்படவிருப்பதை  அடுத்து  இம்முடிவு  செய்யப்பட்டுள்ளது. “தொழில்நுட்பக்  குழு  பரிந்துரைகள்  செய்யவும்  மேல்நடவடிக்கை  எடுக்கவும்  இடமளிக்க  அவ்வாறு  முடிவு செய்யப்பட்டது”,…

நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் உதவ வேண்டும்

மலாயாப்  பல்கலைக்கழகம்  அதன்   மாணவர்கள்  நால்வருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதைத்  தடுக்க  அமெரிக்கத்  தூதரகம்  தலையிட  வேண்டும்  என  பிகேஆரின்  தேஜா  சட்டமன்ற  உறுப்பினர்  சான்  லி  காங்  வலியுறுத்தினார். ஏப்ரல்  27-இல்,  அமெரிக்க  அதிபர் பராக்  ஒபாமா, அப்பல்கலைக்கழகத்தில்,  தென்கிழக்காசிய  இளம்  தலைவர்களைச்  சந்திக்கும்  கூட்டத்தில்  ஆர்ப்பாட்டத்தில் …

பாஸ்: புக்கிட் குளுகோர் வேட்பாளர் அம்னோ உறுப்பினர்

புக்கிட்  குளுகோரில்  போட்டியிடப்போவதாக  அறிவித்திருக்கும்  முகம்மட்  நபி  பக்ஸ்,   பாஸ்  கட்சி  உறுப்பினர்  அல்லர். இதனைக் குறிப்பிட்ட  பாஸ்  தகவல்  தலைவர் மாபுஸ் ஒமார்,  தம்மை  பாஸ்  உறுப்பினர்  என்று  கூறிக்கொள்ளும்  அவர்  உண்மையில்  அம்னோ  ஆள்  என்று  தெரிவித்தார். “அவர்  பாஸ்  உறுப்பினர்  என்று  கூறிக்கொள்வது  ஒரு …

டிஏபி: இஸ்மாவுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை

மலேசிய  சீனர்களை  “வந்தேறிகள்”  என்று  வருணித்த  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)வுக்கு  எதிராக  தேச நிந்தனைச்  சட்டம் பயன்படுத்தப்படுவதை  டிஏபி- இன்  செகாம்புட்  எம்பி  லி லிப்  எங்  எதிர்க்கிறார். “இஸ்மாவை  1948  தேச  நிந்தனைச் சட்டத்தின்கீழ்  விசாரிப்பது  சரியல்ல. அது, பேச்சுரிமையையும்  கருத்துரிமையையும்,  அரசியல்  எதிர்ப்பாளர்களையும்  அடக்கிவைக்க …

அரசாங்க ஊழியர், ஆமாம் சாமி போடனும்! அதுதான் புரட்சிக்கு வழியாகும்!

தமிழினி. மே, முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணி உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்…

புக்கிட் குளுகோர்: ராம்கோபால் சிங் டிஎபியின் வேட்பாளர்

  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிஎபியின் வேட்பாளராக ராம்கோபால் சிங் போட்டியிடுவார் என்பதை டிஎபி இன்று உறுதிப்படுத்தியது. ராம்கோபால், 38, ஒரு வழக்குரைஞர். காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது மகனாவார். கர்பால் சிங், டிஎபியின் முன்னாள் தேசியத் தலைவர், 2004 ஆம் ஆண்டிலிருந்து புக்கிட் குளுகோர் தொகுதியிலிருந்து…

குலா: மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற மகாதீரின் பிரகடனத்தை…

எதிர்வரும் புக்கிட் குளுகோர் மற்றும் தெலுக் இந்தான் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற டிஎபி கடுமையாக உழைக்கும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார். மலேசியா ஒரு ஜனநாயக மற்றும் சமய சார்பற்ற நாடாக தொடர வேண்டும் என்பதில் டிஎபி மிகத் திடமான நிலைப்பாட்டை கடைபிடித்து…

புக்கிட் குளுகோரில் பாஸ் உறுப்பினர் போட்டி?

பாஸ்  உறுப்பினரான  முகம்மட்  நபி  புக்ஸ்  முகம்மட்  நபி  சத்தார்,  புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  போட்டியிட  விரும்புவதாக   அறிவித்துள்ளார். முகம்மட்  நபி,63, அங்கு  போட்டியிடப்போவதாக  அறிவித்துள்ள  இரண்டாவது  வேட்பாளராவார்.  ஏற்கனவே, அங்கு  போட்டியிடப்போவதை  அறிவித்த பார்டி  சிந்தா  மலேசியா  உதவித்  தலைவர்  ஹுவான்  செங்  குவான்,  ஆயர் …