துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
1எம்டிபி: ஆனந்தா ரிம2 பில்லியன் கொடுத்துதவினார் என்பது ‘வெறும் ஊகமே’
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), அந்நிறுவனத்தின் கடனைத் தீர்க்க கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் அந்நிறுவனத்துக்கு ரிம2 பில்லியன் கொடுத்து உதவினார் என்பதை மறுக்கிறது. அது “வெறும் ஊகம்” என்றது கூறிற்று. “ஆனந்தா அவர்களே அதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இது மூன்றாம் தரப்புகள் கட்டிவிட்ட கதை”, என அந்நிறுவனத்தின் தலைமை …
ஷாபி: அம்பிகாமீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட வேண்டும்
முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்ட வேண்டும் என வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். “அன்வார் இப்ராகிமைச் சிறைக்கு அனுப்பியது பிஎன் செய்த மிகப் பெரிய தவறு எனக் கதை சொல்கிறார் அம்பிகா. நீதிமன்றங்கள் பிஎன் சார்ந்தவையா? “நீதிமன்றங்கள் பிஎன் சார்ந்தவை …
சுப்ரா மஇகா தலைவர் பதவிக்குப் போட்டி
மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கட்சி மறுதேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார். செந்தூலில், ஈராயிரத்துக்கு மேற்பட்ட மஇகா உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் சுப்ரமணியம் அந்த அறிவிப்பைச் செய்தார். கட்சி உதவித் தலைவர் எம்.சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ், மகளிர் பிரிவுத் …
அம்பிகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும், ஷாபி…
அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு 2இல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட ஷாபி அப்துல்லா இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மீது தமது கவனத்தைத் திருப்பினார். அன்வாருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்காக சட்டத்துறை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட ஷாபி, அன்வாரை சிறையில் அடைத்ததின் மூலம் பிஎன்…
“அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க முன்வந்தார் நஜிப்”
கடந்த 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் 52 விழுக்காடு மக்கள் வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கு நஜிப் முன்வந்தார் என்று அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா கூறிக்கொண்டார். தமது தந்தைக்கு அப்பதவியை வழங்க முன்வந்தது பிரதமர் நஜி…
1எம்டிபி-க்கு உதவுவதால் ஆனந்தாவுக்கு என்ன இலாபம்?
1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின்(1எம்டிபி) ரிம2 பில்லியன் கடனைத் தீர்க்க முன்வந்துள்ளார் ஆனந்தகிருஷ்ணன். இதனால் ஆனந்தகிருஷ்ணனுக்கு என்ன இலாபம் என வினவுகிறார் டிஏபி-இன் டோனி புவா. 1எம்டிபி அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் என்பதால் அதில் என்ன நடந்தாலும் அது வரிசெலுத்துவோரைப் பாதிக்கும். அதனால், கடன் தொடர்பில் ஆனந்தாவும் 1எம்டிபி-யும் செய்துகொண்டுள்ள …
ஆர்ஓஎஸ்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பழனிவேல் உத்தேசம்
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) மீது வெறுப்படைந்துள்ள மஇகா தலைவர் ஜி.பழனிவேல், அது கட்சிக்கு “அநீதி இழைத்திருப்பதாக”க் குற்றம்சாட்டி அதற்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பழனிவேல், ஆர்ஓஎஸ் 2014 டிசம். 5, 2014 டிசம். 31, 2015…
லாக்-அப்பில் ஸுனாரின் அந்த மூன்று நாள்கள்
மூன்று நாள்களை லாக்-அப்பில் கழித்து திரும்பி இருக்கிறார் ஸுனார் என்ற புனைபெயரில் பிரபலமாக விளங்கும் கேலிச்சித்திரக்காரர் சுல்கிப்ளி எஸ்.எம். அன்வார் உல்ஹாஹ். அந்த மூன்று நாள்களும் நினைத்தாலே இனிக்கும் சுகமான நாள்களல்ல. படுப்பதற்கு மெத்தையுமில்லை; பாயுமில்லை. பலகைதான். “லாக்-அப்பின் கடைசி நாளில்தான் ‘குட்மார்னிங்’ துண்டு, பல்பசை போன்றவற்றைக்க் கொடுத்தார்கள்”,…
ரோஸ்சுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை, பழனிவேலு
சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) மஇகா தேர்தல் விவகாரம் குறித்து மஇகாவுக்கு அனுப்பியுள்ள அனைத்து கடிதங்களையும் (டிசம்பர் 5, 2014, டிசம்பர் 31, 2014 மற்றும் பெப்ரவரி 6, 2015 தேதியிட்ட கடிதங்கள்) திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஇகா…
பினாங்கில் அன்வார்-ஆதரவு பக்கத்தான் பேரணி திட்டப்படி நடக்கும்
பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் காலமானார் என்றாலும், பினாங்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு நாளை இரவு திட்டமிட்டபடி நடக்கும். “மக்களின் சுதந்திரம்” என்ற தலைப்புக் கொண்ட அந்நிகழ்வு செபராங் பிறையில் இரவு மணி 9-க்கு நடைபெறும் என மாநில …
நுருல் நுஹா: நாங்கள் தந்தைக்கு ‘விஐபி’ சலுகை கேட்கவில்லையே
சிறையில் அன்வார் இப்ராகிமின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்பதுதான் அவரது குடும்பத்தாரின் கவலையாகும். மற்றபடி அவருக்குத் தனிச் சலுகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை நன்றாக இல்லை என்கிற நிலையில் அவர் சிறை அறையில் வைக்கப்பட்டிருப்பதையும் ஒரு சிறிய மெத்தையில் தரையில் படுக்க வேண்டியிருப்பதையும் நினைத்து குடும்பத்தார் கவலை …
இஸ்மாயில் வருத்தப்படுகிறார் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்
சீன வர்த்தகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு மன்னிப்புக் கேட்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி. ஆனால், தம் கருத்துக்கு இனச் சாயம் பூசப்பட்டு இன விவகாரமாகப் பார்க்கப்படுவதை எண்ணி அவர் “வருத்தம்” தெரிவித்தார். இந்த “வருத்தம்” மன்னிப்பு எனப் …
கேலிச்சித்திரக்காரர் ஸுனார் போலீஸ் பிணையில் விடுதலை
தேச நிந்தனைக்காக விசாரணையை எதிர்நோக்கியுள்ள அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனார் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்குரைஞர்களில் ஒருவரான மெலிஸ்ஸா சசிதரன், காலை மணி 10.40க்கு மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினார். “டாங் வாங்கி போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் பிணையில் சற்று நேரத்துக்குமுன்னர்தான் அவர் விடுவிக்கப்பட்டார்”, என்றாரவர். ஸுனார், எதிரணித் தலைவர் …
நிக் அசிஸ் காலமானார்
பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசாருமான நிக் அசிஸ் நிக் மாட் முதுமையின் காரணமாக நேற்று காலமானார். அவர் கிளந்தான் மாநில மந்திரி புசாராக 23 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள மசூதியில் அவரது ஈமச் சடங்கு காலை…
தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் குற்றமாக்க வேண்டும்
அரசாங்கச் சேவையில் ஊழலை ஒழிக்க அரசாங்க அதிகாரிகளிடையே நிகழும் ஒழுக்கக்கேடுகளைக் குற்றச்செயல்களாக்க வேண்டும் என்கிறது மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி). அப்படிச் செய்வது தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், அரசாங்கச் செலவுகளில் ஏற்படும் தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் தடுக்கும் என எம்ஏசிசி-இன் நடவடிக்கை மீளாய்வு வாரிய(ஓபிஆர்) தலைவர் ஹடினான் …
எம்பி: அன்வார் அரச மன்னிப்பை நாட மாட்டார்
தம்மீது சுமத்தப்பட்டது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று அன்வார் இப்ராகிம் கூறிக்கொண்டிருப்பதால் அவர் அரச மன்னிப்பை நாட மாட்டார் என்கிறார் பாஸ் எம்பி காலிட் சமட். இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொன்னார். “அன்வார் அதற்கு மனுச் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன் அப்படிச் செய்வது …
பிகேஆர்: அன்வார்-ஆதரவு ஆர்ப்பாட்டம் பற்றி அறியோம்
வார இறுதியில், அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் சோகோ, டட்டாரான் மெர்டேகா வட்டாரத்தில் ஒன்றுதிரண்டு அவர் சிறையிடப்பட்டதை எதிர்த்து பேரணி நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது என போலீசார் கூறுகிறார்கள். எப்படிப்பட்ட பேரணியையும் சமாளிக்க போலீஸ் ஆயத்தமாக உள்ளது என போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் குறிப்பிட்டதாக …
இஸ்மாயில் சப்ரியுடன் சேர்ந்து கூட்டறிக்கையா? லியோ மறுப்பு
அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, சீன வர்த்தகர்களைக் குறைகூறியது பற்றி விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது, மசீச தலைவருடன் சேர்ந்து வெளியிடப்படும் கூட்டறிக்கை என்றும் கூறியிருந்ததை லியோ தியோங் லாய் உடனடியாக மறுத்தார். முகநூலில் அவ்வறிக்கை பதிவான 30வது நிமிடத்தில் லியோவின் மறுப்பு டிவிட்டரில் வெளியானது. . “இஸ்மாயில் …
சிறையில் அன்வார்
குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராகிம் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு மற்ற கைதிகளும் இப்படித் தனி அறைகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார் கூறினார். “ஒரு தனி சிறை அறை அவருக்கு மட்டுமே. உணவு, உடை,…
ஜாஹிட்: கைதி அன்வாருக்கு ‘விஐபி’ சலுகை கிடையாது
அன்வார் இப்ராகிம் அம்னோவில் இருந்தபோது அவரும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்கலாம். அதற்காக அவர் சிறையில் தனிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் ஜாஹிட் கூறினார். “சிறைச்சாலை எல்லாக் கைதிகளையும் சட்டப்படி எப்படி நடத்த வேண்டுமோ அப்படியே நடத்தும்”,என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் …
எம்ஏஎஸ்-ஸுக்குக் கண்டனம் தெரிவிக்க வருகிறார்கள் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள்
காணாமல்போன் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் ஒரு குழுவாக சீனாவிலிருந்து மலேசியா வந்துள்ளனர். எம்எச்370 “விபத்து” காரணமாகக் காணாமல்போனதாக மலேசிய அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள். 15-பேரடங்கிய அக்குழுவினர், எம்ஏஎஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து (டிசிஏ) அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எம்ஏஎஸ் தலைமையகத்தின்முன் …
மகாதிர்: நான் பிரதமராக இருந்தால் பதவி விலகுவேன்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பிரதமராக இருந்தால் பதவியைவிட்டு விலகிச் சென்று விடுவாராம். ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமராக இருப்பவரால் திறமையாக செயல்பட முடியாதபோது பதவி விலகுவதே நல்லது என்றார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறி வைத்துத்தான் அவர் இவ்வாறு கூறினார் என்பது …
சிறைச்சாலைக்குமுன் திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அவரின் ஆதரவாளர்கள் அவரைக் கைவிடவில்லை. நேற்றிரவு அவரின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவிக்க சுங்கை பூலோ சிறைச்சாலைக்குமுன் ஒன்று திரண்டனர். பதாதைகளையும் மெழுகுதிரிகளையும் கையில் ஏந்தியிருந்த அவர்கள், உரத்த குரலில் “ரீபோர்மாசி”, “பேபாஸ் அன்வார்(அன்வாரை விடுவிப்பீர்)” என உற்சாகமாக முழக்கமிட்டனர்.…


