துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
நமது பல்கலைக்கழகங்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சமமானவையா?
மலேசியாவின் உயர்க்கல்வி இப்போது மேம்பாடடைந்துள்ள நாடுகளுக்கு, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, சமமானதாக இருக்கிறது. இதனை இந்நாட்டின் உயர்நிலைக் கல்வி நிலையங்களில் 135,000 வெளிநாட்டு மாணவர்கள், மொத்த மாணவர்களில் 10 விழுக்காட்டினர், கல்வி பயில்வது உறுதிப்படுத்துகிறது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ கூறியதாக…
கிளந்தான் ஹுடுட் சட்ட மசோதா மார்ச் 18 இல் தாக்கல்…
கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் கிளந்தான் மாநில அரசு அதன் ஹூடுட் சட்ட திருத்த மசோதாவை மார்ச் 18 இல் தாக்கல் செய்கிறது. துணை மந்திரி புசார் முகமட் அமர் நிக் அப்துல்லா இதனை நேற்று உள்ளூர் சீன மன்றங்களின் தலைவர்கள் அளித்த சீன…
சிருல் அனைத்தையும் கூற ஆஸ்திரேலியா அனுமதிக்கக்கூடும்
அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் அது பற்றிய அனைத்தையும் தொலைக்காட்சி நேர்காணலில் கூற அனுமதிக்கக் கூடிய சாத்தியத்தை ஆஸ்திரேய குடிநுழைவுத்துறை நிராகரிக்கவில்லை. ஆனால், அதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியது. "பொதுவாக நேர்காணல்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின்…
அருட்செல்வம் விடுவிக்கப்பட்டார்
நேற்றிரவு கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று பின்னேரத்தில் விடுவிக்கப்பட்டார். போலீசார் அவரை மேற்கொண்டு தடுத்து வைக்க முன்வைத்த கோரிக்கையை இன்று காலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. போலீசார் அவரை விசாரிக்க இன்று மாலை மணி 7.00 வரையில்…
சிருல் கூற்றைத் தள்ளுபடி செய்த ஐஜிபி-க்கு மாபூஸ் கண்டனம்
பாஸ் தகவல் தலைவர் மாபூஸ், அல்டான்துன்யாவை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய நேர்காணலில் தனக்கிடப்பட்ட உத்தரவுப்படி நடந்துகொண்டதாகக் கூறியிருப்பதைத் தள்ளுபடி செய்த இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரைக் கடிந்து கொண்டிருக்கிறார். “சிருல் அப்படி ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கும்போது அவர் அப்படி…
அருட்செல்வம் இன்று விடுவிக்கப்படலாம்
நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருட்செல்வத்தை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தேவைப் படும் நீதிமன்ற தடுப்புக்காவல் உத்தரவை வழங்க நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. மஜிஸ்திரேட் முஸ்லினா முகம்மட் ஜமி…
அருட்செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி தெரிவித்த கருத்திற்காக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவம் தேச நிந்தனைக்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று மாலை சுமார் 10 போலீஸ்காரர்கள் காஜாங்கில் அருட்செல்வத்தின் வீட்டை திடீர்ச்சோதனை செய்து அவரின் கணினியை…
ஐஜிபி: கேள்விப்பட்ட செய்தியை வைத்து டிஏபி புகார் செய்துள்ளது
ஒரு புகார்மீது விசாரணை நடத்த போலீசுக்குப் “போதுமான ஆதாரங்கள்’ தேவை என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் கூறுகிறார். குற்றவியல் நடைமுறை விதி, பிரிவு 110(1) (பி) அதை வலியுறுத்துகிறது- என்றாரவர். “வெறுமனே குற்றம் கூறுவது மட்டும் போதாது. ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாக வைத்து டிஏபி புகார் …
சிருலின் கூற்றை விசாரிப்பீர்: டிஏபி போலீசில் புகார்
முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்ஹார் உமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார். தாமும் அதிரடிப் பிரிவின் இன்னொரு வீரரான அஸிலா ஹட்ரியும் தங்களுக்கு இடப்பட்ட நடந்துகொண்டதாகக் கூறியிருப்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாங் வாங்கி …
நஜிப்: ‘சொன்னபடி நடந்தேன்’ என்ற சிருல் கூற்று ‘சுத்த மடத்தனம்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்கார் உமர் உத்தரவுப்படி நடந்துகொண்டிருப்பதாக கூறியிருப்பதை “சுத்த மடத்தனம்” என்று கூறினார். இன்று கோலாலும்பூரில் மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய …
சிருல்: சொன்னதைச் செய்தேன், அதன் பலனை அனுபவிக்கிறேன்
பெரும் மனக்குழப்பத்திலிருக்கும் முன்னாள் போலீஸ் காமாண்டோ சிருல் அஸார் ஒமார் நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றியதாக விடாப்பிடியாக கூறிக்கொண்டிருக்கிறார். சொன்னதைச் செய்ததற்காக சிருல் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். "நான் இன்று இறந்தால், எனக்கு நிம்மதி கிடைக்காது, ஏனென்றால் என்னிடம்…
ஐஜிபி: சிருல் பேசும் வரையில் அல்தான்துயா பற்றிய புதிய விசாணை…
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமாண்டோ சிருல் அஸாகர் ஒமார் அல்தான்துயா வழக்கு சம்பந்தமாக புதிய தகவலை வெளியிடும் வரையில் போலீஸ் விசாரணையை மீண்டும் தொடங்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. "சில தரப்பினர் தூண்டிவிடுகிறார்கள் என்பதற்காக இந்த வழக்கில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான காரணம் ஏதும் இல்லை. "முதலில்…
“மசீச இஸ்மாயில் சாப்ரியை சுலபமாக தப்பிக்க விட்டு விட்டது”
சீன சமூகத்தின் சில தரப்பினரை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கூறி பெரும் சர்சையைக் கிளப்பி விட்ட அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியை சுலபமாகத் தப்பிக்க விட்டது குறித்து மசீசவில் சில தரப்பினர் அதன் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மசீச அடித்தள உறுப்பினர்களின் மனச்சாட்சி குழு என்று…
ஹிசாம்: அனைத்தையும் கூறும் உரிமை சிருலுக்கு உண்டு
அல்தான்துயா கொலை சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெளியிட அக்கொலை சம்பந்தமாக மரண தண்டனை பெற்றுள்ள சிருல் அஸார் ஒமார் விரும்பினால் அது அவருடைய உரிமை என்று தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிசாமுடின் ஹுசேன் இன்று கூறினார். "அது அவரது உரிமை", என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.…
அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: பாக்கத்தான் பங்காளிகளுக்கு எதுவும் தெரியாதாம்
அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்தார் என்பதை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், பாக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் அது குறித்து வேறுபட்ட பதிலை கூறுகின்றனர். தொடர்பு கொண்ட போது, டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…
அல்தான்துயா கொலை: எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா, யோசிக்கிறார் சிருல்
அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான சிருல் அஸார் ஒமர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சிருல் அந்தான்துயா கொலை சம்பந்தமாக நடந்த அனைத்தையும் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் சிருல் அனைத்தையும் வெளியிடும்…
அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி கொடுக்க நஜிப் முன்வந்ததை ரபிஸி…
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தினார். துணைப் பிரதமர் பதவியுடன் நான்கு பிகேஆர் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது அதில் அடங்கும் என்று ரபிளி கூறிக்கொண்டார்.…
நிக் அசிசை மதிப்பதாக இருந்தால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டது ஏன்?
அம்னோ, பாஸின் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட்டை உண்மையிலேயே மதித்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலி செம்பகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டிருக்காது என பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹட்டா ரம்லி கூறினார். அம்னோ, நிக் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் செம்பகா இடைத் தேர்தலில்…
நீதித் துறையைக் களங்கப்படுத்துவோர்மீது நடவடிக்கை
தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா, நீதித் துறையின் நம்பகத்தன்மையைக் கெடுக்க முயல்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் நீதித் துறைக்கு எதிராக “ஆதாரமற்ற குறைகூறல்களை”ச் சுமத்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். “தேவையற்ற விமர்சனங்கள் நீதித் துறைக்குக் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளன. “இப்படிப்பட்ட செயல்களை- அவை …
கிடெக்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டது
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கின்ராரா- டமன்சாரா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிடெக்ஸ் திட்டத்துக்கான குத்தகையைப் பெற்ற நிறுவனம் மாநில அரசு விதித்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அஸ்மின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாக்கம் சமூகத் தாக்கம்,…
அன்வாருக்கு இணைய வசதி கிடையாது, சிறைத்துறை திட்டவட்டம்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சுங்கை பூலோ சிறையில் இணைய வசதி கிடையாது என்று சிறைத்துறை டிவிட்டரில் அறிவித்துள்ளது. சிறையிலிடப்பட்ட பிறகும் அன்வாரின் முகநூல், டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து அது இவ்வாறு அறிவித்துள்ளது. “சிறையில் அன்வார் இப்ராகிமுக்கு இணைய வசதி இல்லை. வெளியில் …
நாளை அன்வார் வெளிவரும்போது பிகேஆர் ஆதரவுப்-பேரணி நடத்தும்
அன்வார் இப்ராகிம் அவதூறு வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நாளை ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகம் வரும்போது பிகேஆர் அவரை ஆதரித்து பேரணி ஒன்றை நடத்தும். “காலை மணி 8.30க்கு நடைபெறும் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானுக்கு எதிரான வழக்கில் பொதுமக்கள் அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்”, என பிகேஆர் …
போலீஸ் பேருந்தின்மீதான நாசவேலைகளுக்கு ‘கித்தா லவான்’ பொறுப்பல்ல
புதிதாக உருவாகியுள்ள அன்வார்-ஆதரவு இளைஞர் இயக்கமான கித்தா லவான், சனிக்கிழமை ஜாலான் புடுவில் அன்வார் இப்ராகிம்- ஆதரவு பேரணி நிகழ்ந்தபோது நடந்ததாகக் கூறப்படும் காலித்தனத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறது. போலீஸ் பேருந்திலும் ஒரு வங்கியின் பெயர்ப்பலகையிலும் அசிங்கமான சொற்களை எழுதியது கித்தா லவான் அல்ல என அதில் …


