புக்கிட் குளுகோரில் வாக்களிப்பு தொடங்கியது

புக்கிட்  குளுகோரில்  இன்று  வாக்களிப்பு. அங்கு  பிஎன்  போட்டியிடவில்லை  என்பதால்  தேர்தல்  பரப்புரை  மிக  அடக்கமாகவே  நடந்தது. இந்த  இடைத்  தேர்தலில்  டிஏபி-இன்  ராம்கர்பாலை  எதிர்த்து  பார்டி  சிந்தா மலேசியா-வின்  ஹுவான்  செங்  குவானும்  சுயேச்சை வேட்பாளர்களான  அபு பக்கார்  சித்திக் முகம்மட் ஸானும்  முகம்மட்  நபி  பக்ஸ் …

தெலோக் இந்தானில் ரிம5 பில்லியன் நெடுஞ்சாலை திட்டத்தை முகைதின் தொடக்கி…

தெலோக்  இந்தானில்,  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலுக்கான  பரப்புரை  இரண்டாவது  வாரத்தில்  அடியெடுத்து  வைத்துள்ள  வேளையில்,  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  ரிம5 பில்லியன்  மேற்குக்கரை  நெடுஞ்சாலையை இன்று  தொடக்கி வைத்தார். அந்த  233 கிலோ  மீட்டர்  நெடுஞ்சாலை  சிலாங்கூரில்  பந்திங்கில்  தொடங்கி  பாகான்  டத்தோ,  தெலோக்  இந்தான்,  லெகிர்,…

அம்பிகா: ரேலா-வுக்கு ஜாஹிட்டின் எச்சரிக்கை தேர்தல் சட்டத்தை மீறுகிறது

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  தொடர்பில்   ரேலா  படையினரிடையே    உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   பேசிய  பேச்சில்  பல   தேர்தல்  சட்ட மீறல்கள்  நிகழ்ந்திருப்பதாக  முன்னாள்  பெர்சே  இணைத் தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்   குறிப்பிட்டுள்ளார். “அவர்களின்  வாக்குகள்  பற்றி  அவருக்கு (ஜாஹிட்) எப்படித்  தெரியும்?  வாக்குகள்  இரகசியமானவை  அன்றோ?…

அன்வார்: 20 அம்னோ சம்செங்கைக் கண்டு பயந்து விடாதீர்

  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்னதாக நேற்றிரவு பக்காத்தான் தலைவர்கள் அங்கு ஒன்றுகூடி தங்களுடைய வலுமையைக் காட்டினர். ஹான் சியாங் கல்லூரி மண்டபத்தில் திரண்டிருந்த சுமார் 3,000 பேர் அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு தலைவரும்…

ஐஜிபி: மலேசியாவில் மேலும் பல போராளிகள் பதுங்கியுள்ளனர்

பயங்கரவாத  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதற்காக  இண்ட்ர்போலால்   தேடப்படும்  அந்நிய போராளிகள்  பலர்  மலேசியாவில்  பதுங்கி  இருப்பதை  போலீசார்  அறிவார்கள். அவர்களின்  நடமாட்டத்தை  போலீஸ்  தொடர்ந்து  கண்காணிப்பதாக  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  பினாங்கில்  கூறினார். “சிலரை  அடையாளம் கண்டு  விட்டோம். பலரைத்  தேடிக்  கொண்டிருக்கிறோம்”, என்று …

மன்னிப்பு கேட்டார் கைரி, ஆனால், டிஏபி அதை ஏற்கத் தயாராக…

அம்னோ  இளைஞர்கள்  டிஏபி  பெயர்  பலகையைச்  சேதப்படுத்தியதற்கு  வருத்தம்  தெரிவித்து  கைரி  ஜமாலுடின்   தனிப்பட்ட  முறையில்  மன்னிப்பு  கேட்டதை  டிஏபி-இன் வியூக இயக்குனர்  ஒங்  கியான்  மிங்  ஏற்கவில்லை. “டிஏபி-இன்  சொத்துக்கள்  சேதப்படுத்தப்பட்டதற்கு  வருத்தம்  தெரிவித்தேன்.......பெயர்ப்  பலகை  உடைக்கப்பட்டதற்கு  மன்னிப்பு  கேட்டேன். அதற்காக  பணம்  கொடுப்பதாகவும்  சொன்னேன்”, என…

மசீச: கைரி அம்னோ இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

மசீச  இளைஞர்  பகுதி,  நேற்று  டிஏபி தலைமையகத்தைத்  தீவைத்துக்  கொளுத்தப்போவதாக  மிரட்டிய   அம்னோ  இளைஞர்களை  அதன்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கட்டுக்குள்  வைத்திருக்க  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டது. “கூட்டரசு  பிரதேச  அம்னோ  இளைஞர்கள்  டிஏபி  தலைமையம்  கொளுத்தப்படும்  என  மிரட்டி  இருப்பதை   மசீச  இளைஞர்  பகுதி  கடுமையாக  கண்டிக்கிறது.…

டிஏபி: அம்னோ இளைஞர்கள் நஜிப்பின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தினர்

அம்னோ  இளைஞர்களின்  நடவடிக்கைகள்  பிரதமரும்  அம்னோ  தலைவருமான  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பலவீனத்தைத்தான்  காண்பிக்கின்றன  என்று  டிஏபி  கூறுகிறது. இந்த  வன்செயல்கள்  அம்னோ  அரசியலையும்  நஜிப்பின்  தலைமைத்துவத்தின்  பலவீனத்தையும்  காண்பிக்கின்றன  என  டிஏபி  தேசிய  சட்டப்  பிரிவுத்  தலைவர்  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார். நேற்று  நடந்தது  பற்றி …

முகைதின்: கொதிப்படைந்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தது இயல்பானதே

நேற்று  டிஏபி  தலைமையகத்துக்கு  வெளியில்  அம்னோ  இளைஞர்கள்  ஆவேசமாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதை “இயல்பான  எதிர்வினை”  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  வருணித்துள்ளார். தங்கள்  கட்சி  களங்கப்படுத்தப்படும்போது  உறுப்பினர்கள்  கொதிப்படைவது  இயல்பானதே  என்று  அம்னோ  துணைத்  தலைவருமான  முகைதின்  கூறினார். ஆனாலும். நாட்டில்  சட்டங்கள்  உண்டு  என்று   கூறிய …

அபு பக்கார் சிஎம்-மை மன்னித்து விட்டாராம்

புக்கிட்  குளுகோர்  சுயேச்சை  வேட்பாளர்  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸான்,  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-கின்  காரின்முன்  விழுந்து  மறியல்  செய்ததில்  காயங்கள்  ஏற்பட்டிருந்தாலும் அதற்காக  சிஎம்-மீது   ஆத்திரம்  கொள்ளவில்லை; வழக்கு  தொடுக்கப்  போவதுமில்லை. அவர்  சிஎம்மை  ‘மன்னித்து’  விட்டாராம்.   “அந்த  நேரத்தில்  ஆத்திரப்…

ஐந்து வழக்குரைஞர்களின் கைது சட்டவிரோதமானது

ஐந்தாண்டுகளுக்குமுன்  பிரிக்பீல்ட்ஸ் போலீஸ்  நிலையத்தில்  மெழுகுதிரி  அஞ்சலியில்  ஈடுபட்ட  14  பேருக்கு  உதவச்  சென்ற  ஐந்து  வழக்குரைஞர்களை  போலீசார்  கைது   செய்தது  சட்டவிரோதமானது  என கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது. அவர்களை  இரவுமுழுவதும்  பிடித்துவைத்ததும்  வழக்குரைஞர்களைச்  சந்திக்க  அனுமதியளிக்க  மறுத்ததும்கூட  சட்டவிரோதமான  செயல்களாகும்  என  நீதிபதி  ஜோன் …

நஜிப்பின் இயக்கம் நடத்திய ஹுடுட் வட்டமேசை

2012-இல் உலக மிதவாதிகள் இயக்கத்தை (Global Movement of Moderates) தோற்றுவித்தவர் மலேசிய பிரதமர் நஜிப் அவர்கள். அவ்வியக்கம்  தோற்றுவிக்கப் பட்டதற்கான முக்கிய காரணம், 2010-இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் நஜிப் ஆற்றிய உரையாகும். அதில், “உண்மையான பிளவு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களும் இடையிலோ அல்லது…

சஞ்சீவன் ‘மலிவு விளம்பரம்’ தேடுகிறார்: போலீஸ் தலைவர் சாடல்

சாபா  போலீஸ்  தலைவர்,  ஹம்சா  தயிப்,  தம்  மகனைப்  பற்றி மைவாட்ச்  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்  கூறுவதெல்லாம் வெறும்  அபாண்டம்  எனவும்  அதன்வழி  அவர்  மலிவு  விளம்பரம்  தேடிக்கொள்ளப்பார்க்கிறார்  எனவும்  குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்  கூறுவதுபோல் தம்  மகன்  முகம்மட்  அஷான்,30, வேலை இல்லாதவர்  அல்லர்  என்றும்  பல  ஆண்டுகளாகவே  அவர் …

‘போலீஸ் உயர் அதிகாரியின் மகனுக்கு வேலை இல்லை ஆனால், பணத்தில்…

 ஒரு  மாநிலப்  போலீஸ்  தலைவரின்  30-வயது  மகனுக்கு  வேலை  இல்லை.  ஆனால், செல்வச்  செழிப்பில்  மிதக்கிறார்  என்று  கூறுகிறார்  குற்றச் செயல் கண்காணிப்பு  அமைப்பான  மைவாட்சின்  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன். வேலையில்லாதிருக்கும்  அந்த  ஆடவர், கடந்த  ஆண்டில்   இரண்டு  ஆடம்பர  கார்களை  வாங்கினாராம். ஒன்று  ஜாகுவார், இன்னொன்று  Audi A5.…

டிஎபி தலைமையகத்தை தீயிட்டுக் கொளுத்தப் போவதாக அம்னோ இளைஞர்கள் மருட்டல்

  கோலாலம்பூரில் டிஎபி தலைமையகத்தின் முன் சுமார் 50 கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அக்கட்டடத்தை தீயிட்டுக் கொளுத்தப் போவதாக மருட்டல் விடுத்தனர். ஆனால், அவர்களை அங்கிருந்த இலகு தாக்குதல் படை மற்றும் போலீஸ் படை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.…

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சீண்டிவிட முயன்றவர் கைது

பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்தில்  இன்று  மீண்டும்  அம்னோ  இளைஞர்கள்  ஆர்ப்பாட்டம்  செய்தனர். அப்போது  ஆர்ப்பாட்டக்காரர்களின்  ஆத்திரத்தைத்  தூண்டிவிட  முயன்ற  ஒரு  ஆடவரை  போலீசார்  கைது  செய்தனர். “அம்னோ  செலாகா”  என்று  கூறிய  ஸ்ரீடெலிமா டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். ராயர்  அதற்காக  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன் …

நஜிப் என்யுசிசி-யைப் பாராட்டுவது இஸ்லாமிய என்ஜிஓ-களை அவமதிப்பதாகும்

தேசிய  ஒருங்கிணைப்புக்காக  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம்(என்யுசிசி)  மேற்கொள்ளும்  முயற்சிகளைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பாராட்டிப்  பேசியது  பெர்காசாவுக்குப்  பிடிக்கவில்லை. பிரதமரின்  பாராட்டு  இஸ்லாமிய, மலாய்  என்ஜிஓ-களைச்  சிறுமைப்படுத்துவதாகும்  என்று  பெர்காசா  தலைமைச்  செயலாளர்  சைட்  ஹசான்  சைட்  அலி  குறிப்பிட்டார். என்யுசிசி-இல்  மலாய்,  முஸ்லிம்  பிரதிநிதிகளின் …

உயிருக்கு அஞ்சுகிறார் ராயர் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்

டிஏபி  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என்.ராயர்  தம் பாதுகாப்பை  எண்ணி  அஞ்சினாலும்  அம்னோ  உறுப்பினர்களிடம்  மன்னிப்பு  கேட்க  தயாராக  இல்லை. அவர்  ‘செலாகா’  என்று  குறிப்பிட்டதற்காக  பினாங்கு  அம்னோ  உறுப்பினர்கள்  அவர்மீது  ஆத்திரம்  கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாம்  அம்னோவை  நோக்கி  அச்சொல்லைப்  பயன்படுத்தவில்லை  என்கிறார்  ராயர்.  அதனால்  அதை …

சுரேந்திரன் இனி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மாட்டார்

பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன், இனி  நாடாளுமன்றத்தில்  கேள்வி  கேட்க  மாட்டார்.  உறுப்பினர்களின்  கேள்விகளுக்குப்  பதிலளிக்க நீண்ட  காலம்  ஆவதால்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  வகையில்  அவர்  இம்முடிவுக்கு  வந்துள்ளார். நாடாளுமன்றத்தின்  அடுத்த  கூட்டம்  ஜூன்  9-இல்  தொடங்கும். எம்பிகள்  மே  19-க்குள்  கேள்விகளைத்  தாக்கல்  செய்ய  வேண்டும் …

ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றத்தில் புகுந்து அட்டகாசம் செய்தனர்

சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என்.  ராயருக்கு  எதிராக  பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்துக்கு  வெளியில் ஆர்ப்பாட்டம்  செய்தவர்களில்  சுமார்  10 பேர், அந்த  ஸ்ரீடெலிமா   சட்டமன்ற  உறுப்பினரைத்  தேடி  சட்டமன்றக்  கட்டிடத்துக்குள்ளேயே  நுழைந்தனர். ஒருவர்  சட்டமன்றத்  தலைவர்  லவ்  சூ  கியாங்கின்  மேசைமீது  ஏறி  நின்று  ராயரைத்  தேடினார். “ராயரின்  இடம்…

18 மாதங்களில் மின்கட்டணம் 39 விழுக்காடு உயரும்?

நீர், எரிபொருள் ஆராய்ச்சி  சங்கம் (ஏவர்),  இன்னும்  18  மாதங்களில்  மின்  கட்டணம்  மேலும்  உயரும்  என  ஆருடம்  கூறியுள்ளது. அது  24-லிருந்து  39 விழுக்காடுவரை  உயருமாம். 2016,  ஜனவரிக்குள்  மின்சாரம்  தயாரிக்கப்  பயன்படும்  இயற்கை  எரிவாயுவின்  விலை  சந்தைவிலையை  அடிப்படையாகக்  கொண்டு  கணக்கிடப்படும்  என்றும்  அப்போது  மின்கட்டணம்…

‘celaka’ என்று கூறிய ராயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அம்னோவை 'celaka' என்று  கூறிவிட்டாராம்  டிஏபி  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என்.  ராயர்.  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  பினாங்கு  மாநிலச்  சட்டமன்றக்  கட்டிடத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டம்  ஒன்று  நிகழ்ந்தது. பினாங்கு   பெர்காசா  இளைஞர்  தலைவர்  ரிஸ்வாட்  அஸுட்டின்  உள்பட,  ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றக்  கட்டிடத்தின்  கதவுகளைப்  பலமாக  தட்டியும்  ராயருக்கு …

வேந்தர்: மாரா பல்கலைக்கழகம் மலாய்க்காரர்களுக்கே

யுனிவர்சிடி  டெக்னலோஜி  மாரா(யுஐடிஎம்)  மலாய்க்காரர்களுக்கு  உயர்க்  கல்வி  வழங்கும்  கல்விக்கழகமாக  தொடர்ந்து  பாதுகாக்கப்பட  வேண்டும்  என  அதன்  இணை- வேந்தர்  டாக்டர்  அப்துல்  ரஹ்மான்  அர்ஷாட்  கூறுகிறார். யுஐடிஎம்,  மலாய்க்காரர்களுக்கும்  மற்ற  பூமிபுத்ராக்களுக்கும்  கல்வி  வாய்ப்புகளை  வழங்குவதற்காக  அரசமைப்பின்  153வது  விதிப்படி  அமைக்கப்பட்டது  என்று  குறிப்பிட்ட  அவர்,  அச்சலுகைகளை …