அம்பிகா: தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் இசி மாறும்

தேர்தல் சீரமைப்புக்காக பெர்சே 2.0 தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்துள்ளது. ஜூலை 9-இல் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், போலீஸின் கண்ணீர்புகைக் குண்டுகளையும் இராசனம் கலகப்பட்ட நீர் பீரங்கி வண்டிகளிலிருந்து பீய்ச்சி அடிக்கப்பட்டதையும் துச்சமாக எண்ணி பலதுறைகளையும் சேர்ந்த மலேசியர்கள் சுமார் 15,000 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்த…

ஹரப்பான் கம்யூனிட்டி ஜயிஸ் சோதனை மீதான தனது மௌனத்தைக் கலைத்துள்ளது

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பல இன விருந்து மீதான தனது மௌனத்தை ஹரப்பான் கம்யூனிட்டி என்ற சமூக சேவை அமைப்பு கலைத்துள்ளது. கடந்த வாரம் அந்த விருந்து நிகழ்வை ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை சோதனை செய்த பின்னர் அது குறித்த…

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு “ராயா காசாக” ரிம600

பினாங்கு மாநில அரசின் ஊழியர்களுக்கு "ராயா காசாக" குறைந்தபட்சம் ரிம600 வழங்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். பினாங்கில் அரசுத்துறைகளிலும் ஊராட்சி மன்றங்களிலும் அரசுசார்ந்த நிறுவனங்களிலும் சுமார் 7,800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். திருக்குர் ஆன் போதகர்களுக்கும் குறைந்தபட்சம் ரிம 300 வழங்கப்படும் என்று லிம்…

மிஸ்மாவைக் கண்டுபிடுக்கும் நாளேட்டின் முயற்சி பலிக்கவில்லை

நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்து பின்னர் குடியுரிமை வழங்கப்பட்ட  ‘மிஸ்மா’வைத் தேடிக் கண்டுபிடிக்கும் உள்ளூர் நாளேடு ஒன்றின் முயற்சி பயன் அளிக்கவில்லை. மலேசியாகினி, நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்ற ஒருவர் வாக்காளர் ஆனதையும் பின்னர் நான்கு மணி நேரம் கழித்து மலேசிய குடியுரிமை பெற்றவராக மாறினதையும் செய்தியாக வெளியிட்டதை அடுத்து அந்த…

சாட்சிகள் சந்திக்கப்படும்போது அன்வார் உடன் இருக்கலாம், நீதிமன்றம் தீர்ப்பு

சாட்சிகளைச் சந்தித்துப் பேசும்போது அன்வார் இப்ராகிமும் உடன் இருக்கலாம் ஆனால் அவர் சாட்சிகளைக் கேள்வி கேட்கக்கூடாது. இன்று காலை அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா இவ்வாறு தீர்ப்பளித்தார். நேற்று, முன்னாள் தேசிய போலிஸ்படைத் தலைவர் மூசா ஹசனுடனும் முன்னாள்…

வாக்காளர் பட்டியலில் மேலும் பல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு…

முதலில் "ஆவி வாக்காளர்கள்", அடுத்து "நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட வாக்காளர்கள்", இப்போதுபல "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்காளர் பட்டியலில் குறைந்தது ஏழு வாக்காளர்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெயர், பழைய அடையாளக் கார்டு எண்கள் ஒன்றாகவும் ஆனால் மை கார்டு எண்கள்…

ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது

சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக்  கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…