போலீஸ்: சுலு தலைவர் தடுத்து வைக்கப்பட்டார், ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது

பாதுகாப்புப் படைகள் லஹாட் டத்துவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகளின் இராணுவத் தளபதியை சிறைப்  பிடித்துள்ளன. அவர் இன்று அதிகாலையில் செம்போர்ணாவில் கைது செய்யப்பட்டார். அந்த விவரங்கள் தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் வெளியிட்டார். 40 வயதான அந்த ஆடவர் தமது மனைவியுடன் சதுப்பு…

கிட் சியாங்: பாஸ் சின்னத்தின் கீழ் நான் போட்டியிடலாம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த குளறுபடிக்காக அந்தக் கட்சியின்  பதிவை சங்கப் பதிவதிகாரி ரத்துச் செய்தால் தாம் வரும் தேர்தலில் பாஸ் சின்னத்தின் கீழ் போட்டியிடலாம்  என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார். சங்கப் பதிவதிகாரி டிஏபி-யை…

பாப்பாகோமோவின் ஆவிப் பதிவை இசி நீக்கியது

அம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோவின் இரட்டை வாக்காளர் பதிவு எனக் கூறப்பட்டதை இசி  என்ற தேர்தல் ஆணையம் (இசி) நீக்கியுள்ளது. அந்த நடவடிக்கை 'ஆவி வாக்காளர்கள்' உள்ளனர் என  பிகேஆர் சொல்வதை மெய்பிப்பதாக அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். போலீஸ் அடையாளக் கார்டையும் சிவிலியன் அடையாளக்…

அல்டான்துயா கொலைமீது மறுவிசாரணை நடத்த போலீசுக்கு வலியுறுத்து

பிகேஆர் இளைஞர் பகுதியினர், தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணம் தொடர்பில் கடந்த வாரம் வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில் வழக்குரைஞர் அமெரிக் சித்து தெரிவித்த புதிய தகவலை அடிப்படையாக வைத்து  அல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று போலீசில் பதிவு செய்தனர். டாங்…

அம்பிகா: ஆர்சிஐ பற்றி விவாதிப்பது இடையூறு செய்வதாக இருக்காது

சபாவில் 'வாக்குகளுக்காக குடியுரிமை' என்னும் குற்றச்சாட்டுக்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை  ஆணையம் குறித்து விவாதிப்பதை சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு செய்வதற்கு (‘sub judice’) ஒப்பாகும்  எனக் கூறிக் கொண்டு அதன் தொடர்பில் பொதுமக்கள் விவாதம் நடத்துவதை கட்டுப்படுத்த முடியாது என  பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன்…

இணைய ‘பொய்த் தகவல்களை’ முறியடிக்கப் போலீஸ் 500 ஆயிரம் ரிங்கிட்டை…

இணையத்தின் வழியாக பரப்பப்படும் 'பொய்யான தகவல்களை' முறியடிக்க ஆறு மாதங்களில் போலீஸ் படை   500,000 ரிங்கிட்டை செலவு செய்துள்ளது. "போலீஸ் படையின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் போன்ற இணையத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை முறியடிக்கும் பொருட்டு நமது  போலீஸ் அதிகாரிகளின் ஆற்றலை மேம்படுத்த…

ஜோகூர் பிகேஆர் இன்னமும் சுவாவின் பொறுப்பில்தான் உள்ளது

ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், கேளாங் பாத்தா-வில் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் களமிறக்கப்படுவதால் ஆத்திரத்துடன் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அம்மாநிலத்தில் கட்சியின் தேர்தல் பணிகளை எல்லாம் அவர்தாம் முன்னின்று கவனித்துக்கொள்வதாக தெரிகிறது. பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேளாங் பாத்தாவை…

ஹலோ, வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்ய இசி ஆர்சிஐ-க்காக காத்திருக்க…

"நீங்கள் உண்மையாகவும் கௌரவமாகவும் உங்கள் வேலையை செய்தால் ஆர்சிஐ முடிவுகளுக்குக் காத்திருக்க  வேண்டிய தேவை இல்லை" இசி: ஆர்சிஐ நிறைவு பெறுவதற்கு முன்னர் பொதுத் தேர்தல் வந்தால் அது துரதிர்ஷ்டமானது தோலு: தேர்தல் ஆணையத் (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அவர்களே, சபா ஆர்சிஐ…

உங்கள் சட்டைப் பை 41 விழுக்காடு பெருத்து விட்டதா ?…

அது 41 விழுக்காடாக அல்லது 49 விழுக்காடாக இருந்தாலும் 2012ம் ஆண்டுக்கான பொருளாதார உருமாற்றத் திட்டம் மீதான ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கை நமக்கு உணர்த்துவது இது தான் - 2020ல் மலேசிய உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாகத் திகழும். அந்த நேரத்தில் சாதாரண மலேசியருடைய சராசரி வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 48,000…

ஐஜிபி: ‘புதிய ஆதாரம் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப்…

புதிய ஆதாரம் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், பொய்யான சத்தியப்  பிரமாணத்தை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் எனக் கூறப்படுவது மீது போலீஸ் புலனாய்வுகளை  மீண்டும் தொடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் கூறுகிறார். அந்த விவகாரம் இன்னொரு வழியில் மறுபதிப்பாக வெளியானாலும்…

அன்வாருடைய தோற்றத்தைக் கெடுப்பதற்காக ஜோகூர் பாருவில் பதாதைகள்

முத்தமிட்டுக் கொள்ளும் ஆடவர்களைக் காட்டும் இரண்டு பதாதைகள் ஜோகூர் பாரு குடியிருப்புப் பகுதி  ஒன்றில் திடீரென தொங்க விடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தது  என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமான் மெகா…

அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கு மலேசியா உடந்தையாவதா?

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா…

அங்காசாபுரிக்குள் நுழைய முயன்ற மாணவர் போராளிகளை போலீஸ் கைது செய்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை  தெரிவிக்கும் பொருட்டு ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி நிர்வாகத்தைச் சந்திக்க அங்காசாபுரி வளாகத்துக்குள் நுழைய முயன்ற மூன்று மாணவர் போராளிகள் இன்று கைது  செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரில் SMM என்ற Solidariti…

தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டித்தது ‘பாக் லா செய்த பெரிய…

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி செய்த 'பெரிய பாவம்' 2008 ம் ஆண்டு 12வது பொதுத்  தேர்தலில் பிரச்சார காலத்தை 13 நாட்களாக நீட்டித்தது என கல்வியாளர் ஒருவர் சொல்கிறார். தேர்தல் பிரச்சார காலம் நீட்டிக்கப்பட்டதால் நாட்டில் அரசியல் 'சுனாமி' ஏற்பட்டது. பிஎன் தனது பாரம்பரிய மூன்றில்…

பாப்பாகோமோ ஒர் ‘ஆவி வாக்காளர்’ என பிகேஆர் சொல்கிறது

அம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ ஒர் ஆவி வாக்காளர் என்றும் அவர் அம்பாங்கிலும் வாங்சா மாஜுவிலும்  வாக்களிக்க முடியும் என்றும் பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. பாப்பாகோமோ அல்லது வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ்-ன் அடையாளக் கார்டு எண்களைப் பயன்படுத்தி தேர்தல் ஆணை (இசி) இணையத்தளத்தில் தேடிய போது…

பக்காத்தானில் சேருங்கள்: ஒங் தி கியாட்டுக்கு ரபிஸி அழைப்பு

கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வர்த்தக மண்டல ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த முன்னாள் மசீச தலைவர் ஒங் தி இயாட்டின் துணிச்சலைப் போற்றுவதாகக் கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர் இன்னொரு அடியையும் துணிச்சலாக எடுத்து வைக்க வேண்டும் என்றார். அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மாற்றத்தை…

‘பிரிம் மதில்மேல் பூனையாக இருந்தோரின் மனதை மாற்றியுள்ளது’

அரசாங்கம் 1மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) கொடுப்பது ஒரு தேர்தல் தந்திரம் , வாக்காளரைக் கவரும் நோக்கில் அது கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது, மதில்மேல் பூனையாக இருந்தோரின் மனதை மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறார் கல்வியாளர் ஒருவர். மலாயாப் பல்கலைக்கழக (யுஎம்) விரிவுரையாளர் டாக்டர் முகம்மட்…

அன்வார் பயந்துபோய் பெர்மாத்தாங் பாவைவிட்டு ஓடுகிறாராம்; நையாண்டி செய்கிறார் மகாதிர்

மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தம் நடப்பு நாடாளுமன்றத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் நின்றால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது, அதனால்தான் அதைவிட்டு “ஓடுகிறார்” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “அவர் பெர்மாத்தாங் பாவைவிட்டு ஓடிப்போக விரும்புகிறார்... இது சுதந்திர நாடு. அவர்…

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற போட்டாபோட்டி தொடர்கிறது

நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற நிலை இருந்தாலும், 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிஎன் வேட்பாளர் பட்டியல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. “இன்னமும்கூட வேட்பாளர்கள் நியமனம் பற்றிய பேச்சுகளும் வேட்பாளராவதற்கு ஆதரவுதேடும் முயற்சிகளும் தொடர்கின்றன”, என்று மாநில பிஎன் தலைவர் தெங் சாங்…

‘ஜெனீவா தீர்மானத்தில் மலேசியாவின் நடுநிலைமை ஏமாற்றமளிக்கிறது’

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை  தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவளித்த வேளையில் மலேசிய சற்றும் தயக்கமற்ற நிலையில் நடுநிலை வகித்தது மலேசிய தமிழர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட…

குற்றம் சாட்டப்பட்டவர்: லாஹாட் டத்துவில் சண்டையிட பணம் கொடுக்கப்பட்டது

தாவாவ் உயர் நீதிமன்றத்தில் சாபாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அதற்காக தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் ஒருவரான ஹூலாண்ட் கல்பி, பாஜாவ் மொழியில் பேசினார். அவர் சொன்னதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்த்துக் கூறினார். தான் செய்தது முட்டாள்தனம்…

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது; மலேசியா நழுவல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13…

பெமாண்டு தனி நபர் வருமான அதிகரிப்பை 41 விழுக்காடாக குறைத்துள்ளது

2009க்கும் 2012க்கும் இடையில் தனி நபர் வருமானம் 49 விழுக்காடாக அதிகரித்துள்ளது என முன்பு  கூறப்பட்டதை 41 விழுக்காடாக பெமாண்டு என்ற நிர்வாக அடைவு நிலை பட்டுவாடாப் பிரிவு குறைத்துள்ளது. புதிய கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டதால் 49 விழுக்காடு பெறப்பட்டது என்றும் எண்களைப் பெருக்கிக் காட்டும் நோக்கம் இல்லை…