பினாங்கில் குவான் எங்-தெங் போட்டி இல்லை

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார். தெங் “சர்க்கஸ் கோமாளி”போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று லிம் கூறினார். எனவே, “இனியும் இந்த ஆட்டத்தில் ஈடுபட ஆர்வமில்லை”, என்றாரவர்.…

உண்ணா விரதம் முடிந்தது, ஹிண்ட்ராப்புக்கு எந்த மாற்றமும் இல்லை!

உங்கள் கருத்து : 'வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த உண்ணா விரதம் அவருடைய ஆரோக்கியதைப் பாதித்திருக்காது என நான் நம்புகிறேன். ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் நல்ல   எண்ணத்துடன் மீண்டும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்' "வேதமூர்த்தி மயங்கி விழுந்தார் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்" சின்ன…

டிஏபி, நஜிப்பின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரை ரவூப்பில் நிறுத்துகிறது

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் உள் வட்டாரத்தில் ஒர் உறுப்பினராக இருந்த முகமட் அரிப் சாப்ரி  அப்துல் அஜிஸை டிஏபி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகின்றது. டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று ரவூப்பில் செராமா ஒன்றின் போது அந்தத் தகவலை  அறிவித்தார். 2004…

கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டாக்டர் மகாதீருக்கு கிட் சியாங் சவால்

யாருடைய 'அரசியல் புதைகுழி' என்பதை முடிவு செய்ய கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டிஏபி  நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சவால்  விடுத்துள்ளார். கேலாங் பாத்தாவில் அம்னோ/பிஎன் பக்காத்தான் ராக்யாட்டுடன் மோதுவதில் உதவுவதற்காக வந்துள்ள அந்த  முன்னாள் பிரதமர், டிஏபி…

கிட் சியாங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட மாட்டார்

எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் தாம் போட்டியிடப் போவதில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் இன்று அறிவித்துள்ளார். வரும் பொதுத் தேர்தலில் தாம் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்தப் போவதாக  அவர் சொன்னார். தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிட எப்போது…

‘ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாயை மூடிக் கொண்டிருங்கள்’-ஹுஸ்னிக்கு பிகேஆர் பதிலடி

பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குறைசொல்லும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி ஹனட்ஸ்லா வெறுமனே குறைசொல்லுதல் போதாது அதற்கான ஆதாரங்களை முன்வைக்கத் தயாரா என மாற்றரசுக் கட்சியான பிகேஆர் சவால் விடுத்துள்ளது. “புள்ளிவிவரங்களை முன்வைத்து அலசி ஆராயத் தயாரா என்று அவருக்குச் சவால் விடுக்கிறோம்”, என்று…

பக்காத்தான், கார்களைத் தொடர்ந்து மலிவான மோட்டார் சைக்கிள்களுக்கும் வாக்குறுதி அளிக்கிறது

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் கார்களுக்கான கலால் வரியைக் குறைக்கப் போவதாக அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. இப்போது மோட்டார் சைக்கிள்களுக்கான கலால் வரியைக் குறைப்பதாகவும் அது உறுதி அளித்துள்ளது. "மலேசியாவில் வேலை செய்யும் வர்க்கத்தினர் கார்களை வாங்குவதை விரும்புவதால் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிள்களை நம்பியிருக்கின்றவர்கள்…

முடிவு கட்டுங்கள் : ஜோகூர் வாக்காளர்களுக்கு மகாதீர் வேண்டுகோள்

13வது பொதுத் தேர்தல் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதை  உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜோகூரில் உள்ள பல்வேறு சமூகங்களைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் Parti Keadilan Rakyat என்ற பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம்,…

மசீச: குளுவாங்கில் எங்கள் கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கப் பார்க்கிறார் குவான்…

மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு, குளுவாங்கில் டிஏபி-இன் லியு சின் தொங்கை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என்று தமக்குச் சவால் விடுக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதன்வழி மசீசவில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார் எனச் சாடியுள்ளார். அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை…

‘சுலு சுல்தானுடன்’ தொடர்புடைய மனிதர் போலீசாரிடம் சரணடைந்தார்

'சுலு சுல்தான்' குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட ஒருவர் போலீசாரிடம்  சரணடைந்துள்ளார். அவர் பினாங்கில் இஸ்லாமிய நலன் சங்கம் ஒன்றுக்குத் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். முகமட் ரிட்வான் சுலைமான் என அடையாளம் கூறப்பட்ட அந்த மனிதர் சரணடைந்த பின்னர் பாதுகாப்புக்   குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ்…

குவான் எங் -உடன் மோதுவதற்கு இடத்தை தாம் தேர்வு செய்ய…

வரும் தேர்தலில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராகப் போட்டியிடும் தொகுதியை தாம் முடிவு செய்ய  வேண்டும் என்பதில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயூ பிடிவாதமாக இருக்கிறார். "இடத்தை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முதலமைச்சர் என்பதால் எந்த…

அரசியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிஷாமுக்கு எதிராகக்…

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா,  கடந்த ஓராண்டுக் காலமாக அரசியல் வன்செயல்கள் குறித்து புகார்கள் செய்துள்ள போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம் தெரிவித்தார். மார்ச் மாதம் மட்டும் லெம்பா பந்தாயில் தம் தேர்தல் பணியாளர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்செயல்கள் குறித்து நான்கு போலீஸ் புகார்களைச் செய்ததாக…

இந்தியர்களுக்கான டிஏபியின் 14-அம்சத் திட்டம்

டிஏபி இந்தியர்களின் சமுதாய-பொருளாதார நிலையை உயர்த்த 14-அம்சத் திட்டமொன்றைக் கொண்டு வந்துள்ளது. ‘கேலாங் பாத்தா’ பிரகடனம் என்று அழைக்கப்படும் இத்திட்டம் நேற்று ஜோகூர் பாருவில் அறிவிக்கப்பட்டது. டிஏபி கொண்டுவந்துள்ள  இத்திட்டம், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால், நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே…

தேர்தல் ஆணையம் புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் நுருல் இஸ்ஸா…

லெம்பாய் பந்தாய் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் குறித்த தமது அதிகாரத்துவப் புகாரை தேர்தல்  ஆணையம் (இசி) பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத்தை அந்தத் தொகுதி எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் காட்டியுள்ளார். மார்ச் 4ம் தேதி தமது வழக்குரைஞர்களான சூய் அண்ட் கம்பெனி புகார் கடிதங்களை அனுப்பியதாகவும் பின்னர் தமது தொகுதியில்…

13வது பொதுத் தேர்தலில் குழப்பமா ? அம்னோ குண்டர்கள் பற்றி…

"பஸ்களில் கொண்டு வரப்படும் 'திடீர்' அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்றவர்கள் எத்தகைய  இடையூறுமின்றி வாக்களிப்பதற்கு ஹிஷாமுடின் அடித்தளம் போடுகிறாரா ?" 13வது பொதுத் தேர்தலில் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சிகள் குறித்து போலீஸ் விசாரிக்கும் பெர்ட் தான்: எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலின் போது குழப்பத்தை ஏற்படுத்த முயலும் எனத் தெரிவதாக…

வேதமூர்த்தி உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்

மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி இன்று இரவு மணி 8.45 க்கு அவரது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியும் இன்னொரு சிறுமி வேதஸ்ரியும் கொடுத்த சோயாபீன் நீரை பருகி அவர் கடந்த 22 நாள்களாக மேற்கொண்டிருந்த அவரது உண்ணாவிரதத்தை…

வேதமூர்த்தி மயங்கி விழுந்த பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

ரவாங் கோயில் ஒன்றில் கடந்த மூன்று வாரங்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி இன்று மாலை மயங்கி விழுந்தததைத் தொடர்ந்து கோலாலம்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில்  சேர்க்கப்பட்டுள்ளார். "வேதமூர்த்தி இன்று மாலை 4 மணி அளவில் குளியலறைக்குச் செல்ல முயன்ற போது மயங்கி விழுந்தார்,"…

இந்துக்களை அவமானப்படுத்திய எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

இந்துக்களை அவமானப்படுத்தியதற்காக கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டினுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்காதது குறித்த தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதற்காக எட்டு அரசு சாரா அமைப்புக்கள்,  பிகேஆர் ஆகியவற்றின் பேராளர்கள் இன்று சிறிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர் கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் பல போலீஸ் நிலையங்களில்…

நோர் முகமட்: பிஎன் பெரும்பாலான எதிர்க்கட்சி மாநிலங்களை மீண்டும் கைப்பற்ற…

13வது பொதுத் தேர்தலில் பினாங்கு உட்பட எதிர்த்தரப்பு வசமுள்ள பெரும்பாலான மாநிலங்களை மீண்டும்  கைப்பற்றும் ஆற்றலை பிஎன் பெற்றுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் கூறியிருக்கிறார். நாட்டின் உருமாற்றத் திட்டங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவு அடிப்படையிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மக்கள் புரிந்து கொண்டுள்ளதின்…

பக்காத்தான் ராக்யாட் பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தை அமைக்கிறது

தேசியப் பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) செய்யத் தவறியதைச் சரி செய்வதற்கு பாதுகாப்பு ஆலோசனை மன்றம்  (எஸ்ஏசி) ஒன்றை பக்காத்தான் ராக்யாட் அமைத்துள்ளது. "நாட்டின் பாதுகாப்பை நிலை நிறுத்த வேண்டிய தனது அடிப்படைப் பணியிலிருந்து என்எஸ்சி திசை மாறிச் சென்று விட்டதால் எங்கள் எஸ்ஏசி அமைக்கப்படுவது அவசியமாகியுள்ளது," என அது…

குவான் எங், சாங் இயூ விடுத்த சவாலை ஏற்றுக் கொள்கிறார்

வரும் பொதுத் தேர்தலில் பாடாங் கோத்தா-வில் தெங் தம்முடன் மோதினால் தாம் சட்டமன்றத் தொகுதி  ஒன்றுக்கு மட்டுமே போட்டியிட வேண்டும் என தெங் சாங் இயாவ் விடுத்த சவால்களில் ஒன்றை ஏற்றுக்  கொள்வதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். அந்த மாநில பிஎன் தலைவர் மூன்று…

மலேசிய வாக்காளர்களுக்கு எதிராக ‘கிளர்ச்சிக்காரர்கள்’ போர் தொடுக்கின்றனர்

"பெர்சே அந்த "உள்நாட்டில் உருவான அந்த பயங்கரவாதிகளுக்கு" எதிராக போராடி வருகின்றது. விரைவில்  சுங்கை பூலோ சிறைச்சாலை மலேசியாவின் குவாண்டனாமோ ஆகும்." 'வாக்காளர் பதிவு மோசடியில் அம்னோ ஆள் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்' பெர்ட் தான்: வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள்- ஒப்புதல் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பில் கிள்ளான் எம்பி…

இன்னொரு ‘வடக்கத்திக்காரர்’ டிஏபி-யின் தெற்கத்திய போராட்டத்தில் களம் இறங்குகிறார்

பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங், ஜோகூரில் உள்ள குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிடுவார் என்பதை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த தென் மாநிலத்தில் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் ஈப்போ…