ஸ்டீவன் திரு மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் புதிய தலைவர்

  நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் ஸ்டீவன் திரு அம்மன்றத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய உதவித் தலைவராக ஜியோர்ஜ் வர்கீஸ் தேர்வு செய்யப்பட்டார். கேரன் சியா மற்றும் பாரீட் அப்துல் கபூர் ஆகியோர் முறையே செயலாளராகவும், பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தேச…

பிகேஆர்: கைது செய்வது நீதிமன்றம் தொடர்ந்து அவமதிக்கப்படுவதைக் காட்டுகிறது

  அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி அமைதியான பேரணிகளில் பங்கேற்பவர்களைக் கைது செய்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று பலதரப்பினர் போலீசாரை சாடியுள்ளனர். அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த கித்தா லவான் பேரணியில் பங்கேற்றதற்காக மேலும் மூவர் கைது செய்யப்பட்டதற்காக இன்று காலையில் பிகேஆர் இளைஞர்…

நுருல் நுஹா: அன்வாரின் உடல்நிலை கவலையளிக்கிறது

சுங்கை  பூலோவில்  சிறை  வைக்கப்பட்டுள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  உடல்நிலை  மோசமடைந்துள்ளதாம். அன்வாரின்  இரத்த  அழுத்தம் 87/50 ஆக  உள்ளது  என  அவரின்  இரண்டாவது  மகளான  நுருல்  நுஹா  அன்வார்  கூறினார். ஒரு  மாதத்தில்  தம்  தந்தை  3கிலோ கிராம்  எடை  குறைந்திருப்பதாக அவர்  சொன்னார். “அவரது …

ஜாஹிட்: நுருல்மீது விசாரணையா? ஐஜிபி-தான் பதில் சொல்ல வேண்டும்

லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்மீது  போலீஸ்  விசாரணை  செய்கிறதா  என்று  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி-இடம்  வினவியதற்கு அக்கேள்விக்கு  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்தான்  பதில் சொல்ல  வேண்டும்  என்றார். “அது  போலீஸ்  நடவடிக்கை  பற்றிய  கேள்வி. அதற்குப்  பதில்  சொல்ல  வேண்டியவர்  ஐஜிபி”,…

கித்தா லவான் பேரணி தொடர்பில் டிஏபி இளைஞர் தலைவர் கைது

கடந்த  சனிக்கிழமை  நடைபெற்ற  கித்தா  லவான்  பேரணிக்கு  எதிராக  போலீஸ் மேற்கொண்டுள்ள  நடவடிக்கையில் டிஏபி  இளைஞர்  தலைவர்  தியோ  கொக்  செங்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. சிறை  வைக்கப்பட்டுள்ள  எதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  அப்பேரணி  தொடர்பில்  வாக்குமூலம் பதிவு  செய்ய  தியோ  டாங்  வாங்கி …

1எம்டிபி ஆனந்தாவிடம் கடன் வாங்கவில்லை

1மலேசியா  மேம்பாட்டு நிறுவனம்   அதன்  கடன்களைத்  தீர்ப்பதற்கு  ஆனந்தகிருஷ்ணனிடம்  பணம்  கடன்  வாங்கவில்லை  என  நிதி  அமைச்சு  கூறியது. அது  கடன்  வாங்கியதாகக்  கூறப்படுவது  பற்றி  தியான்  சுவா  கேட்டிருந்த  கேள்விக்கு  நிதி  அமைச்சு  எழுத்துப்பூர்வமாக  இந்தப்  பதிலை  அளித்தது. “1எம்டிபி  கோடீஸ்வரர்  ஆனந்தகிருஷ்ணனிடம்  கடன்  வாங்கியதாகக்  கூறப்படுவது …

மாணவர்களின் மோசமான அடைவுநிலையால் துணைப் பிரதமர் அதிர்ச்சி

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  மலேசிய  மாணவர்கள்  மேம்பாடடைந்த  நாடுகளின்  மாணவர்கள்போல்  திறமையாக  செயல்படுவதில்லை  என  வருத்தப்படுகிறார். 2015 பட்ஜெட்டில்  21 விழுக்காடு கல்விக்கு  ஒதுக்கப்பட்டிருக்கிறது  என்று  கூறிய  துணைப் பிரதமர்,  கல்விக்காக  மிக  அதிகமாக  செலவிடும்  நாடுகளில்  மலேசியாவும்  ஒன்று  என்றார். “கல்விக்காக  பெரும்பணம்  செலவிட்டும்கூட நம் …

தம்மீதான தீர்மானத்துக்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றார் ஷாபி

மூத்த  வழக்குரைஞர்   ஷாபி  அப்துல்லா,  நாளைய  மலேசிய  வழக்குரைஞர்  மன்ற  ஆண்டுக்  கூட்டத்தில்  தம்மீது  தீர்மானம்  கொண்டுவரப்பட்டு  விவாதிக்கப்படுவதைத்  தடைசெய்யும்   நீதிமன்ற  உத்தரவைப்  பெற்றிருக்கிறார். நீதிபதி  அஸ்மாபி, ஷாபியின்  மனுவை  ஏற்று  அவர்  கோரிய  நீதிமன்ற  தடையுத்தரவைப்  பிறப்பித்தார். அம்மனு  மீதான  விசாரணை  மார்ச் 27-இல் நடைபெறும். மலேசிய …

குற்றமிழைத்தவர்களைப் பாராட்டுவதை எதிர்த்து எம்ஏசிசி-க்கு எதிரில் என்ஜிஓ ஆர்ப்பாட்டம் செய்யும்

டிஏபி  உதவியாளர்  தியோ  பெங்   ஹோ-வின்  மரணத்தில்  சம்பந்தப்பட்ட  மூன்று  மலேசிய  ஊழல்-தடுப்பு ஆணைய  (எம்ஏசிசி)  அதிகாரிகளுக்கு  எதிராக  அரசாங்கம்  நடவடிக்கை  எடுக்காததை  ஆட்சேபித்து  ஒரு  என்ஜிஓ  அடுத்த  வாரம்  ஷா ஆலமில் எம்ஏசிசி  தலைமையகத்துக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடும். சம்பந்தப்பட்ட  அதிகாரிகளில்   இருவரின்  செயல்கள்  தியோவின்  மரணத்துக்குக் …

மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் 1எம்டிபியும் ரோஸ்மாவும் பிஎன்னை மூழ்கடிப்பர்

  தீவிரமாகப் பேசப்பட்டு வரும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி) மற்றும் பிரதமர் நஜிப்பின் துணைவியாரான ரோஸ்மாவின் வாழ்க்கை முறை அடுத்த பொதுத்தேர்தலில் பிஎன்னுக்கு பேரிழப்பை ஏற்படுத்தக்கூடும். அம்னோ-தொடர்புடைய வலைத்தள பதிவாளர் ஷாபுடின் ஹுசின் இதனைக் கூறினார். நேற்று அவர் இவ்விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டுடன்…

மகாதிர்: பிரதமரின் மாற்றான் பிள்ளை ஆடம்பர கொண்டோக்கள் வாங்கியது எப்படி?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், அவரின்  குடும்பச்  சொத்து  பற்றி  விளக்கமளிக்க  வேண்டும்  என்று  கோரும்  கூட்டத்தில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  இப்போது  சேர்ந்து  கொண்டிருக்கிறார். இன்று  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  நஜிப்பின்  மாற்றான்  பிள்ளையான  ரிஸா  அசிஸ்  பற்றிக் கேள்வி  எழுப்பி  இருக்கிறார். அசிஸ்,…

வழக்குரைஞர் மன்றத் தீர்மானத்தைத் தடுக்கப் பார்க்கிறார் ஷாபி

மூத்த  வழக்குரைஞரான  ஷாபி  அப்துல்லா,  நாளைய  மலேசிய  வழக்குரைஞர்  மன்ற  ஆண்டுக்  கூட்டத்தில்  தம்  நடத்தைப்  பற்றி  விவாதிக்கக்  கோரும்  தீர்மானத்தைத்  தடைசெய்ய  வேண்டுமென   நீதிமன்றத்தில்  மனுச் செய்திருக்கிறார். வழக்குரைஞர்  மன்றத்தில்  அத்தீர்மானத்தைக்  கொண்டுவந்த முன்னாள்  முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதி  வி.சி. ஜார்ஜ்,  வழக்குரைஞர்  டோமி  தாமஸ்  ஆகியோரை   …

ரிங்கிட்டின் பலவீனத்தால் 1எம்டிபி கடன் மேலும் பெரிதாகலாம்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி),  இவ்வாண்டு  தொடங்கியதிலிருந்து   ரிம2 பில்லியனுக்கு  மேற்பட்ட  அதன்  கடனைத்  திருப்பிச்  செலுத்தி இருக்கலாம்.  ஆனால்,  அதன்  கடன்கள்  பெரும்பாலும்  அமெரிக்க  டாலரில்  இருப்பதால்  கடன்தொகை  மேலும்  பெருகும்  சாத்தியம்தான்  உண்டு  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. டாலருக்கு  எதிராக …

நுருல் இஸ்ஸாவுக்கு எதிராக சுல் நூர்டின் போலீசில் புகார்

கூலிம்  பண்டார்  பாரு முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர்  சுல்கிப்ளி  நூர்டின்,   வெள்ளிக்கிழமை  பிகேஆர்  உதவித்  தலைவர் நுருல்  இஸ்ஸா  அன்வார்  நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  போலீசில்  புகார்  செய்தார். எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  முறையீட்டுக்கு  எதிராக  கூட்டரசு  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பு  குறித்து  நுருல்  இஸ்ஸா  கேள்வி …

மத மாற்ற விவகாரத்தில் சிக்கிய மாணவன் தற்கொலைக்கு முயற்சித்தான்

  இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் சிக்கிய ஒரு 14 வயது மாணவனான தியாகுருடீன் கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான். நேற்று காப்பியில் பாரகுவாட் பூச்சிக்கொல்லியை கலந்து அருந்தியதாக தியாகுருடீன் தம்மிடம் ஒப்புக் கொண்டதாக அம்மாணவனின் தந்தை…

1எம்டிபி: அரசாங்கம் கொடுக்கும் ரிம950 மில்லியன் ஒரு வணிகக் கடனாகும்

நிதி அமைச்சு  அதன் முதலீட்டு  நிறுவனமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு  ஏற்பாடு  செய்துள்ள  ரிம950 மில்லியன் கடன் வசதி  ஒரு  வணிகக்  கடனாகும்  என  1எம்டிபி  தலைவர்  அருள்கண்ட  கந்தசாமி  கூறினார். இரண்டாவது  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா, 1எம்டிபி-க்குக்  கடனளிப்பதற்கு ரிம950 மில்லியன்  ஒதுக்கப்பட்டிருப்பதாக  இன்று  நாடாளுமன்றத்தில் …

முகைதின் பதவி விலக வேண்டும்: ரபிஸி

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினும்  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷியும்  பதவி  விலக  வேண்டும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கோரிக்கை  விடுத்துள்ளார். அரசாங்கம்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  நொடித்துப்  போகாமல்  காப்பாற்றப்படும்  என்று  அறிவித்ததை  அடுத்து  முகைதின்  சொன்னது …

‘சிலாங்கூர் நீர் உடன்பாட்டில் அரசியலுக்கே முன்னுரிமை கொடுக்கிறது’

சிலாங்கூர்  அரசுக்கும் மத்திய  அரசாங்கத்துக்குமிடையிலான  நீர்  உடன்பாடு  கைவிடப்பட்ட  விவகாரத்தில்,  மக்களின்  தேவைகளை  நிறைவேற்றுவதைவிட  அரசியல்  நலன்களுக்கே  முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு  கூறும்  அரசியல்  ஆய்வாளர்கள்,   அஸ்மின்  அலியை மந்திரி  புசாராகக்  கொண்ட  மாநில  அரசு  மக்களின் பிரச்னைகளைத்  தீர்ப்பதற்கு  முயற்சி செய்வதாக  தெரியவில்லை  என்கிறார்கள். அது  கூட்டரசு …

பங்: அம்னோவின் அழிவுக்காக பிரார்த்தனை செய்தீர்கள், அதனால்தான் ஸ்டேடியத்தில் வெள்ளம்…

கோத்தா  பாருவில்  உள்ள  சுல்தான்  முகம்மட் IV விளையாட்டரங்கில்  பாஸ்  சிறிது  காலத்துக்குமுன்  அம்னோவின்  “அழிவுக்காக”  பிரார்த்தனை  செய்ததாம்.  அதனால்தான் “இத்தனை  ஆண்டுகளில்  இல்லாத  வகையில்  முதல்  முறையாக  அங்கு  வெள்ளப்  பெருக்கு”  ஏற்பட்டதாம்.  சர்ச்சைக்குப்  பேர்போன  பிஎன்  எம்பி  பங்  மொக்தார்  ரடின் இப்படி  ஒரு  காரணத்தை …

நீர் உடன்பாடு கைவிடப்பட்டதற்குப் பல தரப்பினர் கண்டனம்

சிலாங்கூர்  அரசுக்கும் மத்திய  அரசாங்கத்துக்குமிடையிலான  நீர்  உடன்பாடு  கைவிடப்பட்டிருப்பதை  அறிந்து  பல  என்ஜிஓ-கள்  ஆத்திரமடைந்துள்ளன. இரு  அரசுகள்  மீண்டும்  பேச்சுகளுக்குத்  திரும்பி  சிலாங்கூர்  நீர்  விநியோகத்  தொழிலைச்  சீரமைக்கும்  பணியை  இவ்வாண்டுக்குள்  பூர்த்தி  செய்ய  வேண்டும்  என அவை  கேட்டுக்கொண்டன. “சிலாங்கூர்  நீர்  தொழில்  சீரமைப்புக்காக  இரு  அரசாங்கங்களும் …

ஜாஹிட்: புவா கடிதத்துக்காக சல்லிக் காசு பெற்றதில்லை

உள்துறை  அமைச்சர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,  அமெரிக்காவில்  சூதாட்டக்  குற்றத்துக்காகக்  கைது  செய்யப்பட்ட  பால்  புவா  வெய்  சாங்-குக்கு  ஆதரவாகக்  கடிதம்  எழுதியதன்  தொடர்பில் தம்மைப் பற்றிப்  பலவாறாகப்  பேசப்படுவதை  அறிந்தே  இருப்பதாகக்  குறிப்பிட்டார். “எது  ஹலால்  எது  ஹராம்  என்பது  எனக்குத்  தெரியும். ஒரு கடிதத்துக்காக  என்னவெல்லாமோ …

ஜாஹிட்: சாபா, சரவாக் செல்லத் தடை செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிடுவதற்கில்லை

தீவகற்ப  மலேசியாவிலிருந்து  சாபா, சரவாவுக்குள்  நுழைய  தடை  செய்யப்பட்டவர்களின்  பட்டியல்  அதிகாரத்துவ இரகசியச் ச் சட்டத்தின்கீழ்  வருவது  என்பதால்  அதை  வெளியிட  முடியாது   என  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். அம்மாநிலங்களில் கால்வைக்க  முடியாதவர்களின்  பெயர்களைத்  தெரிவிக்குமாறு  திரேசா  கொக்  கேட்டதற்கு  அமைச்சர்  இவ்வாறு  பதிலளித்தார்.…

‘அவசரப்பட்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்’, ஐஜிபிமீது குற்றச்சாட்டு

மலாய்க்காரர்களைக்  கண்டு  அச்சமில்லை  என்று  முகநூலில்  பதிவிட்ட  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமி மீது  விசாரணை  நடத்துமாறு  பினாங்கு  போலீசுக்கு  உத்தரவிட்டதில் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்   அவசரப்பட்டு  நடந்து  கொண்டிருப்பதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார். காலிட்  சுட்டிக்காட்டும்  அந்த  முகநூல்  பதிவு  பிஎன் கணினிப்படையினரின்  “கைவேலை” …