ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
சரவாக்கின் பாத்தாங் சாடோங் தொகுதியை பிகேஆர் இரத்துச் செய்தது
சரவாக்கின் பாத்தாங் சாடோங் தொகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்திருப்பதால் பிகேஆரின் மத்திய தேர்தல் குழு(ஜேபிபி) அத்தொகுதியை இரத்துச் செய்துள்ளது. மேலும், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதித் தலைவர் உள்பட, கட்சியின் தலைமைப் பொறுப்புகளுக்கு வெற்றிபெற்றவர்களை கட்சிநீக்கம் செய்யவும் அக்குழுவின் தலைவர் ஜொஹரி …
எம்எச்370 காணாமல் போனதை அடுத்து குழப்பம் நிலவியதாக அறிக்கை தெரிவிக்கிறது
நேற்று, மலேசியா, எம்எச்370 காணாமல் போனபின்னர் நடந்தவற்றை விவரமாக விளக்கும் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கை, பாதையை விட்டு விலகிய விமானம் சென்றிருக்கக் கூடிய திசையை விவரித்ததுடன் விமானம் காணாமல் தெரிந்ததும் குழப்பம் நிலவியதாகவும் குறிப்பிட்டது. விமானம் காணமல் போனதற்கும், தேடும்பணியைத் தொடங்க முடிவெடுப்பதற்குமிடையில் நான்கு மணி நேரம் கடந்து…
தியன் சுவா: ஹூடுட் சட்டத்திற்கு டிஎபி ஒப்புதல் அளித்தது என்று…
"பொய்" உரைத்தார் என்ற டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் கடுமையான சாடாலுக்கு ஆளான ஒரு நாளுக்குப் பின்னர், இன்று பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவதற்கு டிஎபி ஒப்புக்கொண்டது என்று தாம் தெரிவித்ததாக கூறப்படுவதை மறுத்தார். "அது (ஹூடுட்)…
மாட் சாபு: அன்வார் பேசும் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்
இன்றைய ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பேரணி முடியும்வரை மக்கள் கலைந்துபோகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். “நிகழ்வு முடிவதற்குமுன் போய் விடாதீர்கள்.....அன்வார் இப்ராகிம் பேசும்வரை காத்திருங்கள். இதுவே அவர் பேசுவதைக் கேட்கும் கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்”. மழையைப் பற்றிக் கவலை வேண்டாம் …
ஜிஎஸ்டியில் கலந்துகொண்ட ‘துரோகிகள்’மீது நடவடிக்கை: கியுபெக்ஸ் எச்சரிக்கை
பொருள், சேவை வரி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், அரசாங்கத்தில் வேலை செய்ய அருகதையற்ற துரோகிகளாகக் கருதப்படுவர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸின் தலைவர் அஸே மூடா எச்சரித்துள்ளார். பேரணியில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், Akujanji(விசுவாசப் பிரமாணம்) மற்றும் Ikrar Perkhidmatan(நன்னடத்தை …
தெலோக் இந்தான் டிஏபி எம்பி காலமானார்
தெலோக் இந்தானின் டிஏபி எம்பியான சியா லியோங் பெங், புற்று நோயால் காலமானார். இன்று காலை மணி 7.30க்கு யுனிவர்சிடி மலாயா மருத்துவ மையத்தில் சியா காலமானார் என பெர்னாமா அறிவித்தது. சியாவின் உடல் இன்று பிற்பகல் தெலோக் இந்தானில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்து சேரும் என …
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணிக்கு மக்கள் திரள்கின்றனர்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு எதிர்ப்புத் தெரிவிக்க 89 என்ஜிஓ-கள் ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் 10,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தில் நடைபெறும் இப்பேரணியில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. டாட்டாரான் மெர்டேகாவை ஒட்டியுள்ள ஜாலான் ராஜாவில் பிற்பகல் …
அன்வார்: ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தானுக்கு எதுவும் ஆகிவிடாது
ஹுடுட் விவகாரம் தொடர்பில் பாஸ், டிஏபி கட்சிகள் சர்ச்சையிட்டுக் கொண்டாலும் அதனால் பக்காதான் ரக்யாட்டுக்கு ஆபத்தில்லை என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். “அவர்கள் தொடர்ந்து விவாதிக்க விட்டுவிடுவது நல்லது. நேற்றுகூட (செவ்வாய்க்கிழமை) அவ்விவகாரம் பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம்”, என்றவர் சொன்னார். கருத்துவேறுபாடுகள் நிலவினாலும் …
முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரம் குறித்து குடையப்பட்டனர்
மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா) உபகாரச் சம்பளத்திற்கு மனு செய்திருந்த முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து குடையப்பட்டனர். இந்த விவகாரம் சரவாக் அரசியல்வாதிகளின் சினத்தை தூண்டியுள்ளது. நேர்காணலின் போது, ஹூடுட் சட்டம் பற்றியும் முஸ்லிம் தொழுகை குறித்த அவர்களின் அறிவு குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டதாக மாணவர்கள்…
குளுகோரில் போட்டியிடுவது பற்றி மசீச இன்னும் முடிவு செய்யவில்லை
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி மசீச இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை அதன் துணைத் தலைவர் வீ கா சியோங் தெளிவுபடுத்தியுள்ளார். “நேற்று கட்சி போட்டியிடுவது பற்றி மனம்விட்டுப் பேசினோம். போட்டியிடுவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டன”, என்றாரவர். இறுதி முடிவைக் கட்சித் தலைவரும்,…
ஹுடுட்டால் பக்காத்தானில் பிளவு விரிவடைகிறது
இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பாஸ் பிடிவாதமாக இருந்தால், பின்னர் எதிரணியில் அதற்கு இடமில்லை என்று கடுமையாக எச்சரித்துள்ளார் டிஏபி இடைக்கால தலைவர் டான் கொக் வாய். இஸ்லாமிய அரசை அமைப்பது பற்றி பாஸ் வேண்டுமானால் தொடர்ந்து “கனவு காணலாம்” ஆனால், டிஏபி அதற்கு உடன்படாது என்று கட்சித்…
காலிட்: நீர்ப்பங்கீடு நாளை முடிவுறும்
கிள்ளான் பள்ளத்தாக்குக் குடியிருப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். அங்கு நீர்ப் பங்கீடு நாளை முடிவுக்கு வருவதாக மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் அப்துல் காலிட் இதனை அறிவித்தார். முன்னதாக காலையில், பெர்லிஸில், நீர்ச் சேவை ஆணையத்தின் தலைவர் …
மே தினம்: ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸ்…
அதிகாரத்தினருடன் நடத்தப்பட்ட ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பொருள்கள் மற்றும் சேவை வரிகளுக்கு (ஜிஎஸ்டி) எதிரான பேரணி ஒன்றை நாளை நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறிகொள்கின்றனர். அப்பேரணியில் பங்கேற்பவர்கள் நாளை டாத்தாரான் மெர்தேக்காவின் எதிர்புறத்திலுள்ள ஜாலான் ராஜாவில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவர். ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரான பாஸ்…
ஹுடுட் பக்காத்தானை அழித்துவிடும்
பாஸ், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த வகைசெய்யும் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியைத் தொடருமானால், பக்காத்தான் ரக்யாட் வருங்காலத்தில் வாக்குகளை இழக்க நேரும் என எட்டு பெளத்த சங்கங்களின் கூட்டணி எச்சரித்துள்ளது. அக்கூட்டணி, மலேசிய கிறிஸ்துவ இளைஞர் சங்கத்துடனும் சமயச் சார்பற்ற இதர ஆறு இளைஞர் அமைப்புகளுடனும் …
எம்எச்370: தேடும்பணியில் புதிய கட்டம்
காணாமல்போன மலேசிய விமானத்தைத் தேடும்பணி ஒரு புதிய கட்டத்தை அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலடியில் தேடும்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறிய ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி), மற்றவகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்வரை, சிறுரக நீர்மூழ்கிக் கலமான புளுபின் 21 கடலடித் தேடலைத் தொடரும் என்று குறிப்பிட்டது. “பிங்கர் ஒலிகள் …
மகாதிர்: சீனர்கள் பணக்காரர்களாகவும் இந்தியர்கள் வழக்குரைஞர்களாகவும் உள்ளனர்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கூற்றை மறுத்த டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியாவில் சீனர்களும் இந்தியர்களும் செல்வச் செழிப்புடன் வாழ்வதாகக் கூறினார். “மலேசியாவில், எங்களின் கொள்கைகள் எப்படி இருப்பினும், எங்காவது சீன ஏழைகளைப் பார்க்கிறீர்களா? இந்தியர்கள் மருத்துவர்களாக, வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முஸ்லிம்-அல்லாதாருக்குச் சமவாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை …
ஹூடுட் திட்டங்கள் குறித்து பிகேஆருக்கும் டிஎபிக்கும் பாஸ் விளக்கம் அளித்தது
இன்று பாஸ் பிரதிநிதிகள் பிகேஆர் மற்றும் டிஎபி தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II சட்டம் 1993 ஐ அமல்படுத்தும் அதன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பாஸ் தரப்பில் கிளந்தான் மந்திரிபுசார் அஹமட் யாக்கோப், துணை மந்திரி புசார் முகமட் நிக்…
நீர்ப்பங்கீடு இவ்வாரம் முடிவுக்கு வரலாம்
சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் (எம்டிஇஎஸ்), இரண்டு மாதங்களாக இருந்துவரும் நீர்ப் பங்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. அது பற்றி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. நேற்று, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற எம்டிஇஎஸ் கூட்டத்தில் அம்முடிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த …
டிபிகேஎல் வழக்குரைஞர் மன்றப் பதாகைகளை அகற்றியது தப்பு
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மலேசிய வழக்குரைஞர் மன்றம் தொங்க விட்டிருந்த பதாகைகளை அகற்றியது ஒரு அத்துமீறல், சட்டவிரோத செயல் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இன்று முறையீட்டு நீதிமன்றத்தில் நிலைநிறுத்தப்பட்டது. ஏழாண்டுகளுக்குமுன் வழக்குரைஞர் மன்றம், ஜாலான் லெபோ பசாரில் உள்ள அதன் கட்டிடத்தில் அந்தப் பதாகைகளைத் தொங்க …
நாட்டின் உண்மையான எதிரிகள்: மகாதிருக்குப் பாடம் நடத்துகிறார் அம்பிகா
“ஊழல், அதிகார அத்துமீறல், அடிப்படை நிறுவனங்களின் அழிவு, மனித உரிமைகள் பறிக்கப்பட்டது, இனவாதம், தீவிரவாதம்.......போதுமா இன்னும் சொல்லட்டுமா?”, என்று வினவினார் எஸ்.அம்பிகா. நாடு நிலைகுலைந்து போவதற்கு இவைதாம் காரணமே தவிர தெரு ஆர்ப்பாட்டங்கள் அல்ல என்றாரவர். “மலேசியாவைப் பொருத்தவரை இவைதாம் நாட்டை நிலைகுலைய வைத்தன, வைத்துக் கொண்டிருக்கின்றன”. டாக்டர் …
ஹுடுட் : முடிவெடுக்க பக்காத்தானுக்குக் கூடுதல் அவகாசம் தேவை
கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் தனி சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யும் பாஸின் முயற்சி குறித்து பக்காத்தான் ரக்யாட் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்குமுன் கலந்து பேச வேண்டும் என்றும் அதற்குக் “கூடுதல் அவகாசம் தேவை” என்றும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அவ்விவகாரம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் பேசிய …
ஜாஹிட்டுக்குப் பாராட்டு, நஜிப்புக்குக் குட்டு
முஸ்லிம்- அல்லாதாருக்குச் சமவாய்ப்புகள் வழங்காவிட்டால் மலேசியாவால் வெற்றிபெற இயலாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை விடுத்த உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் தலைமை செய்திஆசிரியர் ஏ.காடிர் ஜாசின் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபரின் கூற்று மலேசிய …
மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்களால் தீமையே
தெரு ஆர்ப்பாட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டவை என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “இதுவரை மலேசியாவை நிலைகுலைய வைக்கும் அளவுக்குப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதில்லை. ஆனால், நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆர்ப்பாட்டங்கள்வழி கவிழ்க்க விரும்பும் மலேசியர்களும் இருக்கிறார்கள் என்பது …


