தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில்…

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள்…

நான் சொல்லித்தான் இந்தியக் கப்பல்களை ராஜபக்‌ஷே பிடித்து வைத்திருக்கிறார்! சீண்டும்…

சேர்ந்தே இருப்பது சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது. மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு வெச்சுக்குங்கோ. கப்பல் முதலாளிகளின் கட்டாயத்தினால் வரும் மீனவர்களை விடுதலை செஞ்சுருங்கோ…

விலைவாசி உயர்வால் மக்கள் துன்புறும்போது ஜப்பானில் முரசு வாசிக்கிறார் மோடி:…

""மின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் முரசு வாசித்துக் கொண்டிருக்கிறார்'' என்று பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசினார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள்…

ரயில்வே அமைச்சரின் மகனுக்கு பிடி ஆணை

பாலியல் பலாத்கார வழக்கில் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவின் மகன் கார்த்திக் கெளடாவை கைது செய்ய பெங்களூரு மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. கார்த்திக் கெளடா மீது கன்னட நடிகை மைத்ரி கெளடா பெங்களூரு ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார்.…

தாக்குதல் நடத்த இந்தியாவில் புதிய அமைப்பு: அல்-காய்தா அறிவிப்பால் நாடு…

இந்தியாவில் ஜிஹாத் (புனிதப் போர் என்ற பெயரிலான தாக்குதல்கள்) நடத்த,"காய்தாத் அல் ஜிஹாத்' என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக "அல்-காய்தா' பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிரி பேசிய விடியோ காட்சி, அல்-காய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான "அஸ் சஸாப்…

நக்ஸலைட்டுகளை ஒடுக்க புதிய திட்டம்: ராஜ்நாத் சிங்

நக்ஸலைட்டுகளை ஒடுக்க விரிவான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில காவல்துறை பயிற்சி அகாதெமி தலைவர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தீவிரவாதத்தாலும், மாவோயிஸ்டுகளாலும், கிளர்ச்சியாளர்களாலும் பல்வேறு சவால்கள் ஏற்பட்டு வருகின்றன.…

கங்கை தூய்மையாவது எப்போது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தலைமுறையில் இது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த நிலை வாரியான செயல் திட்டத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு…

மோடி ராஜ்ஜியத்தின் முதல் நூறு நாட்கள்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மோடியின் தலைமையிலான அரசே தனிப் பெரும் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ளது. திறன் மிக்க பேச்சாளரும், சமூக வலை தளங்களை மிக நேர்த்தியாக கையாண்டவருமான மோடி இந்தியாவுக்கு நல்ல காலத்தை கொண்டுவருவேன்…

ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரத்தில் 38 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், மீனவரின் படகை, தங்களது கப்பலால் மோதி மூழ்கடித்த இலங்கை கடற்படையினர், 15 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்…

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா…

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்ää இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானதுää…

கோயிலில் பலி கொடுக்க இமாச்சலப் பிரதேத்தில் தடை

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் இந்துக் கோயில்களில் ஆடுகளை பலியிட விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அனுசரிக்கப்படும் உயிர்பலி நிகழ்வுகளை, காட்டுமிராண்டித்தனமானது என்று சாடியுள்ள நீதிபதிகள், மாநிலத்தில் உள்ள கோயில்களில் உயிர்பலி கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். கோயில்களில்…

சுப்பிரமணிய சுவாமியை கைது செய்ய வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை –…

மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக ஒப்புக்கொண்ட சுப்பிரமணிய சுவாமியைக் கைது செய்யுமாறு மீனவர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாகவும், அப்போது, எல்லை தாண்டிய…

சுப்பிரமணிய சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான்…

தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில், சுப்பிரமணிய சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆழம் பார்க்கிறாரா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி…

மரணதண்டனை மறு ஆய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்

இந்தியாவில் அரிதாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மரண தண்டனை மறுஆய்வு செய்யக் கோரும் வழக்குகள் இனிமேல் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5…

ஜப்பானோடு இணைந்து செயல்பட்டால் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல…

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று 2வது நாளில் டோக்கியோ சென்றுள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர், அந்நாட்டு பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். டோக்கியோவில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டும் நரேந்திர மோடி பேசினார். நரேந்திர மோடி பேசுகையில், 2020ல் தொழில்திறனில் மேம்பட தற்போதிருந்தே…

இந்தியாவில் வீடு விற்பனை விலை கடும் வீழ்ச்சி : ஐஎம்எப்…

உலக நாடுகளில் நடைபெறும் ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு, மனை வாங்கி விற்கும் தொழிலில் வீடுகளின் விற்பனை விலை இந்தியாவில் தான் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியச் சந்தைகளில் விற்பனையாகும் வீடுகளின் விலை 9.1 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.…

பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயுடன், பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் திங்கள்கிழமை (செப்டம்பர் 1) முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகளிடையேயும், பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி…

வாராணசியை தூய்மையாக்க திட்டம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்

கியோட்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே முன்னிலையில், ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட  ஜப்பானுக்கான இந்தியத் தூதர் தீபா வாத்வா, கியோட்டோ நகர மேயர் டாய்சாகு கடோகாவா. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியைத் தூய்மையான நகரமாக…

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை: அருண் ஜேட்லி

"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்கள் ஆத்திரமூட்டக் கூடியவை. இரு நாடுகள் இடையிலான நல்லுறவுக்கு அவை பாதகமான சூழலை உருவாக்கி விட்டன' என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டுக்…

சுப்பிரமணியம் சுவாமி இந்தியாவின் பிரதிநிதி அல்ல!- இந்திய வெளிவிவகார அமைச்சு

பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம்…

பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேசியதால் இந்தியா ஏமாற்றம்

""காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா ஏமாற்றமடைந்தது. அதனால்தான், இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் சனிக்கிழமை ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டு ஊடகத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, கடந்த 25ஆம்…

ரூ.6,000 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தப்புள்ளி ரத்து: பாதுகாப்புத் துறை அமைச்சகம்…

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ரூ.6,000 கோடி மதிப்பீட்டிலான 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் 400 இலகு ரக ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சக…

20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு : ஐ.நா.,வில் நடிகை…

இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். இந்த கொடுமையை பெண்களால் தடுத்து நிறுத்த முடியாது; ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் தடுக்க முடியும், என, பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை, மல்லிகா ஷெராவத், ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின்…