14 மணி நேரம் பணியாற்றும் மோடி!

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவருடைய அலுவலகம் அமைந்துள்ள, சவுத் பிளாக்கிற்கு, அவர் அடிக்கடி வரமாட்டார். அப்படியே வந்தாலும், காலை 9:00 மணிக்கெல்லாம் வரும் வழக்கமில்லை. இந்த பழக்கத்தில் ஊறிப்போன அதிகாரிகள், தற்போது படாதபாடு படுகின்றனர். காலை 8:30 மணிக்கே தன் அலுவலகத்திற்கு வந்து விடுகிறார் பிரதமர்…

தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார். அருண் செல்வராஜனிடம் தேசியப் புலனாய்வுப் பிரிவு…

நரேந்தர் மோடியின் நூறு நாள் ஆட்சியும், சுப்ரமணிய (ஆ) சாமியும்!-…

இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர். பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்காகவோ, தேர்தல் விஞ்ஞாபனத்துக்காகவோ அந்த வெற்றி அல்ல. மாறாக நரேந்திர…

கல்லூரிகளில் இந்தி கட்டாயம் என்ற முடிவை கைவிட வேண்டும் :…

கல்லூரிகளில் இந்தி பாடம் கட்டாயம் என்ற முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அத்துறையின்…

சிறார் திருமணம்: இரண்டாவது இடத்தில் இந்தியா

உலகிலேயே அதிக சிறார் திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18…

தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே குறித்த படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். தற்போது இலங்கையின்…

தமிழக அரசு தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக சுப்பிரமணிய சாமி கருத்து!…

  பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தமிழக அரசு, தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் நினைவு தினம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதை குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்ததால்தான்,…

உளவாளி அருண் விமான தாக்குதலுக்கு திட்டமிட்டான்?: விமான பயிற்சி பெற்றது…

பாகிஸ்தான் உளவாளியாக மட்டுமல்லாமல், நாளடைவில் அருணே ஒரு பெரிய தீவிரவாதியாக மாற வாய்ப்பு உருவானதாக கருதப்படுகிறது. அவனது செயல்பாடுகளும் இதை உறுதிபடுத்துகின்றன. சமீபத்தில் அவன் சென்னையில் விமானம் ஓட்ட பயிற்சி பெறுவதற்கு தன் பெயரை பதிவு செய்து இருந்தான். ஓரிரு முறை அவன் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றதும்…

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் கனிம குவாரிகள் ஆய்வு: உயர்…

தமிழகம் முழுவதும் செயல்படும் கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள்…

பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்துக்கு கடைசி இடம் : விஜயகாந்த் காட்டம்

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது சம்பந்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. மத்திய அரசின் புள்ளியியல் துறை 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை…

கேரளாவில் இன்று முதல் மது விலக்கு அமல்

கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் அறிவித்த மது விலக்கு கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு படி அடுத்த…

பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக,…

வெள்ளத்தில் சீர்குலைந்த காஷ்மீர்; நிஜ ஹீரோக்கள் ராணுவ வீரர்களே !

ஸ்ரீநகர்: தங்களது உயிரையும் துச்சமென மதித்து, காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் செய்து வரும் மீட்புப்பணிகள் அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வரை விரோதிகளாக பார்க்கப்பட்டு வந்த இந்திய ராணுவத்தினர், தற்போது காஷ்மீர் மக்களால் ஹீரோக்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 60 ஆண்டுகளில் பார்த்திராத கனமழை…

ஒபாமாவை இரு நாள்கள் சந்திக்கிறார் மோடி

"அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் வரும் 29,30ஆம் தேதிகளில் சந்திக்கவுள்ளார்' என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் தனது அமெரிக்கப் பயணத்தில் அதிபர் ஒபாமாவை இரு முறை சந்திக்க உள்ளது அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு…

கந்து வட்டித் தொழில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு…

கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி பிரச்னையால் மக்கள்படும் சிரமம் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம்…

டில்லியில் ஆட்சியை பிடிக்க ரூ.4 கோடி லஞ்சம்!

புதுடில்லி:புதுடில்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.ஆனால் சில நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நீண்ட…

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: மத்திய…

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்தியில் புதிய அரசு அமைந்து கடந்த 2ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, வர்த்தகம்,தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லியில் திங்கள்கிழமை…

திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாட நாடாளுமன்றக் குழு பரிசீலனை

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின்  முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழுக்காக குரல் எழுப்பும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் உள்ளிட்டோர். திருவள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்…

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடியுங்கள்! மாநில…

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.   மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த…

குழந்தை திருமணம் கற்பழிப்பை விட கொடுமையானது: டில்லி கோர்ட் கடும்…

புதுடில்லி: 'சிறார்களுக்கு திருமணம் செய்து வைப்பது, கற்பழிப்பு குற்றத்தை விட கொடுமையானது; கேவலமானது' என, டில்லி கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியை சேர்ந்த பெற்றோர், தங்கள் மகளின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள், வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தங்கள் மகளை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை: இந்த…

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில்…

ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது. பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள்.…

காஷ்மீர் பேரழிவு : ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம்…

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை கொட்டியது. சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ஜீனாப், தாவி நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு…

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

தில்லி ஜாமா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்.) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் அஜாஸ் ஷேக்கை, தில்லி தனிப்பிரிவு காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப்பிரிவு சிறப்பு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா…