புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர்…

விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் நேற்று வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர். மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் கும்பாரப்பட்டியில் உள்ள பச்சைபாலமலை வனப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி…

குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை: அரசு…

புதுடில்லி : குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான போக்கை கையாள…

இந்தியா-பாகிஸ்தான் நதிநீர் பேச்சுவார்த்தை: தீர்வு எட்டப்படாமல் முடிவடைந்தது

இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே 3 நாள்கள் நடைபெற்ற நதிநீர் பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்தது. எனினும், இதுதொடர்பாக அடுத்த மாதம் தில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே கிஷன் கங்கா அணை வடிவமைப்பு, ஜீலம், செனாப்…

குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைச்சராக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

இந்திய உச்சநீதிமன்றம் குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்க இந்திய பிரதமருக்கோ அல்லது மாநில முதல்வர்களுக்கோ தடை விதிக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேசமயம் நாட்டின் அரசியல் சட்டத்தின் தார்மீக நெறிகள் மற்றும் நம்பகத்தன்மையை காக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், குற்றவியல் வழக்குகளையும்…

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது:…

புதுடெல்லி : கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது. பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்கள்…

தமிழகத்தில் 186 இடங்களில் ஜாதி பிரச்னைகள் : விழிப்புணர்வு ஏற்படுத்த…

தமிழகத்தில், 186 இடங்களில், ஜாதி ஈடுபாடு அதிகமாக உள்ளதால், இந்த இடங்களில், அதிகளவில் ஜாதி பிரச்னைகள் ஏற்படுவதாக, போலீஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், 186 இடங்களில், 'சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' என்ற தலைப்பில், தொடர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைக்கிறார்.…

1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்.; இந்தியா கடும்…

புதுடில்லி/ஜம்மு: கடந்த 1971ம் ஆண்டுநடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இன்று நடந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான போன் மூலம் நடந்தபேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான…

முல்லை பெரியாறு அணை பிரச்னை: மனம் மாறிய கேரள அரசியல்வாதிகள்!

தேனி : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை வீண் பிடிவாதம் காட்டி பிரச்னையை கிளப்பி வந்த கேரள அரசியல்வாதிகள் உண்மை நிலையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றிகொண்டுள்ளனர். இதனால் தேனி- , இடுக்கி மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். முல்லை பெரியாறு அணை பிரச்னையை பொறுத்தவரை ஆரம்பம் முதல்…

நாளுக்கு நாள் தாக்குதலை விரிவுபடுத்தும் பாக்., படை

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டிய, இந்திய ராணுவத்தினரின், 40 நிலைகள் மற்றும் 24 கிராமங்கள் மீது, பாகிஸ்தான் படையினர், நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று பேர் காயமடைந்தனர். அத்துமீறி தாக்குதல் : இந்தியா பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம்…

இந்தியாவில் அதிவேக ரயில்கள் மார்க்கெட்டை பிடிக்க ஜப்பான், சீனா போட்டி

புதுடில்லி: இந்தியாவில் அதிவேக ரயில் நெட்வொர்க் மார்க்கெட் பிடிக்க ஜப்பானும் சீனாவும் மீண்டும் போட்டியில் குதித்துள்ளன. அகமதாபாத்-மும்பை நடைபாதையில் ஷின்கான்சென் நெட்வொர்க் ஆய்வு பணியை ஜப்பான் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளது.பணியின் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வார இறுதியில் ஜப்பான் செல்லும் போது அவருடன் பகிர்ந்து கொள்ள ஜப்பான்…

காஷ்மீரில் ஆட்சி பிடிக்கும் கனவு ? அமித்ஷா தேர்தல் பணி…

ஜம்மு: எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தி, பல்வேறு பிரச்னைகள், நாள்தோறும் மோதல்கள், பயங்கரவாத தாக்குதல் என ரத்தக்களறியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கனவுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று பிள்ளையார் சுழி போடுகிறார். அகில இந்திய பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின்னர்…

இந்தியாவா, பிரிவினைவாதிகளா? பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும்

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்பதை பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுதொடர்பாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆட்சிக்கு…

உயர் கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி

"சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலம், ஹெüரா மாவட்டத்தில் உள்ள ஷிவ்பூரில், நாட்டின் முதல் இந்திய பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.இ.எஸ்.டி) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. அதன் தொடக்க…

தமிழ்வழி கல்வி வலியுறுத்தி குமரி அனந்தன் தலைமையில் திருச்சியில் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்ட தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. குமரி அனந்தன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத் தை அருட்தந்தை அமுதன் அடிகள் துவக்கி வைத்தார். தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளை முழுமையாக வழங்க வேண்டும். தொடக்கக்…

குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்: பெண்களின் ஹீரோவான தமிழர்

கோவை, ஆக. 24- தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ எடுத்து செல்வதைப்…

தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்!- நல்லகண்ணு

ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின்…

மது குடிப்பது எங்கள் கலாச்சாரம்: கோவா பா.ஜ. துணைத்தலைவர் பேச்சு

பானாஜி: மது குடிப்பது கோவா மாநில கலாச்சாரம் அதற்காக நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என கோவா மாநில பா.ஜ. மூத்த தலைவர் பேசியுள்ளார். கேரள அரசின் அதிரடி முடிவு : கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில்…

எல்லையில் வாடிக்கையாகி போன பாகிஸ்தானின் அத்துமீறல்

ஜம்மு : இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதில் நேற்று (ஆகஸ்ட் 22)நள்ளிரவு முதல் நடைபெற்று வரும் பயங்கர தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சர்வதேச…

முல்லைப் பெரியாறு: 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா…

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் வெ.கிருஷ்ணமூர்த்தி, இரா.அருள்பிரகாசம், எம்.மதுரைவீரன், பனையூர் அ.அழகு சேர்வை, ஆலாத்தூர் கே.கோவிந்தன் உள்ளிட்டோர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்…

தெலுங்கானா அதிகாரம் ஆக்கிரமிப்பா? ராஜ்நாத் விளக்கம்

புதுடில்லி:''சட்டம், ஒழுங்கு விவகாரங்களில், தெலுங்கானா மாநிலத்தின் அதிகாரங்களை ஆக்கிரமிக்க, மத்திய அரசு முற்படுகிறது என்ற அச்சம் தேவையற்றது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தையே, மத்திய அரசு அமல்படுத்துகிறது,'' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, பொதுவான தலைநகராக தற்போது, ஐதராபாத் உள்ளது.…

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்: மோடி

அனைத்து மாநிலங்களும் ஒரே சீராக வளர்ச்சியடைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, ராஞ்சி நகருக்கு வியாழக்கிழமை மோடி…

இந்திய விவசாயிகள் மேம்பட்ட முறைகளைக் கையாள வேண்டும் : ஐ…

இந்திய விவசாயிகள் தமது தொழில்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஐ நாவின் ஒரு அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டாப் பகுதியில் இருக்கும் விவசாயிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்குபெற்றுள்ளனர். விவசாய நிலங்கள் குறைந்து வருவது,…

மன்மோகன் மீது வழக்கு தொடர அனுமதி

வாஷிங்டன்: 'பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலகட்டத்தில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாத அளவிற்கு தடையாணை இருந்தது. அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்திற்கு அத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது' என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 1980ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீக்கிய தீவிரவாதம்…