தீவிரவாத அச்சுறுத்தலால் பெல்ஜியத்தில் யூதப்பள்ளிகள் மூடல்!

பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, யூதப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பெல்ஜியத்தின் முக்கிய நகரங்களான புரூசல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் பகுதிகளில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள யூத பள்ளிகள் அனைத்தும் தற்காலிமாக மூடப்பட்டன. முன்னதாக, சிரியாவிலிருந்து திரும்பியுள்ள தற்கொலை படை…

பாரிசில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: 3 பேர் சிறைப்பிடிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அஞ்சல் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மூன்று பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாரிசின் வடமேற்கு பகுதியில் உள்ள கொலம்பஸ் பகுதியில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், 3 பேரை…

போகோ ஹராமின் அட்டூழியம்: திகிலூட்டும் காணொளி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட அழிவுகளின் புகைப்படங்களை காண்பிக்கும் காணொளி ஒன்றை ஆம்னஸ்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. நைஜீரியாவில் தனிநாடு கோரி அரசுக்கு எதிராக போராடும் போகோ ஹராம் தீவிரவாதிகள், தொடர்ச்சியாக தற்கொலைப்படை தாக்குதலும், துப்பாக்கிச்சூட்டையும் நிகழ்த்தி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பாகா(Baga) நகரில்…

பெல்ஜியத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! நாடு முழுவதும் உஷார்நிலை

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இரண்டு தீவிரவாதிகளை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இருந்து சுமார் 300 பேர் சிரியா மற்றும் ஈராக் சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். அங்கு பயிற்சி பெற்று நாடு திரும்பிய தீவிரவாதிகள், அதிரடி தாக்குதல் நடத்த…

அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க சதி: ஐஎஸ்ஐஎஸ் நபரை கைது செய்த…

அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அந்த நபர் அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்கும் திட்டத்தோடு வந்தபோது மடக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அவரிடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. -http://world.lankasri.com

கோடாரியால் துண்டு துண்டாய் வெட்டுவோம்: பிரான்ஸ் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்

பிரான்ஸில் உள்ள மற்றொரு பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள், கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பத்திரிக்கை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள்(Cartoonist) உள்பட 12…

ஐ.எஸ்-யின் நடுங்க வைக்கும் காணொளி: 10 வயது சிறுவனின் வெறிச்செயல்!

சிரியாவில் உளவாளிகளை 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லும் காணொளியை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் காணொளி ஒன்றை…

சுவிஸிலும் வலுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு: ரகசிய போராட்டம் நடத்த திட்டம்

ஜேர்மனியில் இஸ்லாமியத்திற்கு எதிராக உருவாகியுள்ள Pegida என்னும் அமைப்பு தற்போது சுவிட்சர்லாந்திலும் ரகசிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம், ஜேர்மனியின் இஸ்லாமியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் Pegida என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பினர் சுவிஸில் அடுத்த மாதம் ரகசிய இடம்…

பால் விலை வீழ்ச்சி: சீனாவில் பசுக்களை கொல்லும் விவசாயிகள்

பெய்ஜிங், ஜன 12– சீனாவில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் அங்கு பால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தியாகும் பாலை கொட்டி வீணாக்கி வருகின்றனர். பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த…

போகோ ஹராம் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: 2,000 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2,000 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போர் புரியும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல் என பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.…

சார்லி ஹெப்டோ கார்டூனை வெளியிட்ட ஜேர்மனி பத்திரிக்கை மீது அதிரடி…

பிரான்ஸ் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தாக்கப்பட்டது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட ஜேர்மனி பத்திரிக்கை அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜேர்மனி பத்திரிக்கை ஒன்று பிரான்ஸ் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தாக்கப்பட்டது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்த பத்திரிக்கை மீது இன்று நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அங்கிருந்த ஊழியர்கள்…

பிரென்சு வரலாற்றில் உணர்வுபூர்வமான நாளாக மாறியது ஜனவரி-11: பலத்த பாதுகாப்புடன்…

பிரென்சு தேசத்தின் வரலாற்றில் ஒர் உணர்வுபூர்வமான பதிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றிருந்த ஒன்றுகூடலின் உச்சமாக தலைநகர் பரிசில் ஒற்றுமைக்கான பேரணியில் 7இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துள்ளனர். பிரென்சு அரச தலைவர் பிரான்சுவா ஓலன்ந் தலைமையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்கல் உட்பட…

நைஜிரியாவில் குண்டுவெடிப்பு – 19 பேர் பலி

நைஜிரியாவின் வட கிழக்கேயுள்ள மைதுகுரி நகரில், சனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் 10 வயது சிறுமியின் உடலில் கட்டிவிடப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த சந்தைப் பகுதி   சந்தையில் கோழிகள் விற்கப்படும் பகுதிக்கு அருகே தன் உடலில் கட்டியிருந்த…

பிரான்ஸின் பாதுகாப்பு குறித்து அவசர அமைச்சரவைக் கூட்டம்

பாரிஸ்- பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த மூன்று நாட்களில் 17 பேர் பலி   பாரிஸ் நகரில் மூன்று நாட்களாக நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்க அமைச்சர்கள் அவசர கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் உச்ச அளவில் பாதுகாப்பு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும்…

இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

பிரான்ஸ் பாணியில் இங்கிலாந்தை தாக்க அல்கொய்தா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் நேற்று முன்தினம் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தையும் தாக்க அல்கொய்தா திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை…

பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்! இரு ஆயுததாரிகள் சுட்டுக்…

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வென்சென் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும்…

நைஜீரியாவில் 100 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்

அபுஜா, ஜன. 9– ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட கிழக்கில் உள்ள போர்னோ மாகாணத்தில் பாகா நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடந்த 2 நாட்களாக இவர்கள் கோரத்தாண்டவம் ஆடினர். சமீபத்தில் இப்பகுதியை ஆக்கிரமித்த அவர்கள் பாகா நகரில்…

ஜேர்மனியில் இஸ்லாம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது! ஜேர்மன் மக்கள் கருத்து

ஜேர்மனியில் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள்…

சற்று முன் பாரீஸ் தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள்: தற்போதைய திரடி தகவல்

நேற்றைய தினம்(07) பாரீசில் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை தீவிரவாதிகள் கொலைசெய்து இருந்தார்கள். பாரீஸ் நகரையே சல்லடை போட்டு தேடிவந்த பொலிசார் அந்த 3 தீவிரவாதிகள் பதுங்கி இருந்த கட்டடத்தை தற்போது சுற்றிவளைத்து விட்டார்கள் என்று அங்கிருந்து அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். அத்தோடு துப்பாக்கிச் சூடு…

பிரான்சில் நடந்தது என்ன ? : இஸ்லாத்தை பழித்ததால் வந்த…

இன்றைய தினம் பிரான்ஸ் பாரீஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அனைத்து நாடுகளும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தால் பாரிஸ் நகரே ஆடிப்போயுள்ளது எனலாம். ஆனால் இச்சம்பவத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதனை வெளியிடுவதில் பல ஊடகங்கள் சற்று…

பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல்: 12 பேர் பலி…ஐஎஸ்யின் வெறிச்செயலா?

பிரான்சில் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இரு மர்ம நபர்கள் பத்திரிகை ஊழியர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர், இதில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர்கள்…

இஸ்லாமை அவமதிப்பதா? நடுரோட்டில் மந்திரவாதியின் தலையை துண்டித்த ஐ.எஸ்

சிரியாவில் மந்திரவாதி ஒருவரை மக்கள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதிகளின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் மந்திரவாதி…

இஸ்லாத்துக்கு எதிராக பிரான்சிலும் போராட்டம்

இஸ்லாத்துக்கு எதிராக ஜேர்மனியில் நடைபெறும் போராட்டத்தை போன்று, பிரான்சிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டங்களை…