எகிப்து: மீண்டும் ராணுவ புரட்சி ; வீட்டுச் சிறையி்ல் அதிபர்…

கெய்ரோ: எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்‌ந்து அந்நாட்டு அதிபர் மோர்ஸி யை ராணுவம் அதிரடியாக அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டி்ன அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னிமுபாரக்கைபதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது.…

பாகிஸ்தான் நினைத்தால் ஆப்கான் போர் முடிவுக்கு வரும் என்கிறார் ஆப்கன்…

தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது கரிமி, கூறுகிறார். பாகிஸ்தான் தாலிபான்களுக்கு புகலிடம் தருவதுடன் அவர்களைக் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறது என்று பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில்…

எகிப்து : இராணுவத்தின் காலக்கெடுவை நிராகரித்த அதிபர் மோர்சி

எகிப்தில் நிலவுகின்ற நெருக்கடியை 48 மணிநேரத்துக்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்று இராணுவம் கொடுத்த காலக்கெடுவை நிராகரித்துள்ள அந்த நாட்டின் அதிபர் முஹமட் மோர்சி அவர்கள், இராணுவத்தின் இந்தக் காலக்கெடு குழப்பத்தை மாத்திரமே ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அதிபர் மோர்சி தனது நல்லிணக்கத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று…

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் : இணையத்தின் மூலம் பார்ப்போர் எண்ணிக்கை…

வளர்ந்துவரும் நாடுகளில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேரடியாக வெப்கம் மூலம் பார்க்கும் மேலை நாட்டவரின் எண்ணிக்கை அதிரித்து வருவதாக சிறார் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இணையத்தில் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.…

அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர்,…

எகிப்து அதிபர் மொர்ஸி பதவிவிலக எதிர்ப்பாளர்கள் காலக்கெடு

எகிப்தில் அதிபர் மொஹமட் மொர்ஸி பதவி விலகுவதற்கு எதிரணிப் போராட்டக்காரர்கள் நாளை செவ்வாய்க்கிமை வரை காலக்கெடு விதித்துள்ளனர். தமது கோரிக்கைக்கு ஆதரவாக 22 மில்லியன் பேரின் (2 கோடி- 20 லட்சம் பேர்) கையொப்பம் திரட்டப்பட்டுள்ளதாக எதிரணி இயக்கமொன்று அறிவித்துள்ளது. 'மொர்ஸி பதவி விலகி தேர்தல் நடக்க இடமளிக்காவிட்டால்…

அழகிய மாணவியால் ஸ்தம்பித்த பல்கலைகழக இணைய தளம்

பீஜிங்:சீனாவில், பட்டதாரி பெண்ணின் படத்தை பார்ப்பதற்காக, ஒரே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இணையதளம் ஸ்தம்பித்தது. சீனாவில் உள்ள, ரேன்மின் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, கெயிங் கெயிங் என்ற மாணவி, பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு…

ஹெச்.ஐ.வி.: புதிய சிகிச்சை முறை பரிந்துரைக்கிறது உலக சுகாதாரக் கழகம்

ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின்…

சீனாவில் போலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஷின்ஜியாங்கில் மோட்டார் சைக்கிள்களில் பட்டாக் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமானோர் அங்குள்ள ஒரு போலிஸ் நிலையத்தைத் தாக்கியதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இலகுவில் சென்றடைய முடியாத ஹோடன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் தொடரும் வன்செயல்களில் இறுதியாக நடந்திருப்பதாகும்.…

தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி

தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இராணுவ ட்ரக் வண்டி முழுமையாக சேதமடைந்துவிட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறினார். வாகனத்திலிருந்த 10…

சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்

சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில் அவர் அரச படையினரிடம் சரணடைந்துள்ளார். அல் ஷபாப் இயக்கத்துக்குள்ளேயே கடந்த வார இறுதியில்…

மூன்று பேரின் மரபணுக்கள் கலந்து குழந்தை உருவாக்க பிரிட்டன் அனுமதி

மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப் தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐவிஃஎப் என்பது பெண்ணின் கரு முட்டையையும் ஆணின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே கருக்கட்டச் செய்து பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரச்செய்கின்ற தொழிநுட்பம். இந்த தொழிநுட்பத்தில் மூன்றுபேரின் மரபணுக்களைச்…

இரண்டரை வயதில் ஷேக்ஸ்பியர் இலக்கியத்தை படிக்கும் அதிசய குழந்தை: அறிவு…

பிரிட்டனில், இரண்டரை வயது குழந்தை, அறிவு ஜீவிகள் குழுவில் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, டீன் மற்றும் கெர்ரி ஆன் தம்பதியின் மகன், ஆடம் கிர்பி. இரண்டரை வயது நிரம்பிய இந்தக் குழந்தை, தன் திறமையை வெளிப்படுத்துதற்கான, அறிவு ஜீவி போட்டியில் சமீபத்தில் பங்கேற்றது. ஷேக்ஸ்பியர்…

சீனாவில் தொழிலாளர்களால் பணயம் வைக்கப்பட்ட வணிகர் விடுதலை

சீனாவில் தனது சொந்த தொழிற்சாலையின் பணியாளர்களால் கடந்த 7 நாட்களாகப் பிடித்துப் பணயம் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க வணிகர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது பணியாளர்களுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்ட பின்னரே சிப் ஸ்டேர்ன்ஸ் என்ற அந்த வணிகர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலுவையில் இருக்கும் தமது இரு…

அமெரிக்க ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில், 2017க்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க ராணுவ தளபதி, ரேமான்ட் ஓடிர்னோ கூறியதாவது: அமெரிக்காவில், நியூயார்க் உலக வர்த்தக கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு,…

சட்டபூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு

சட்டபூர்வமான போதை மருத்துக்களின் பாவனை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதாக போதை மருந்து மற்றும் குற்றங்கள் குறித்த ஐநாவின் அலுவலகம் எச்சரித்துள்ளது. ஹெரோயின் மற்றும் கொக்கெயின் போன்ற பாரம்பரிய போதை மருந்துகளின் பயன்பாடு உலக மட்டத்தில் ஸ்திரமாக இருக்கின்ற அதேவேளை, புதிய போதைப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக்…

பிரிட்டன் விசா : புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ''பாண்ட்'' பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில் பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையை கண்டித்திருந்த நைஜீரியாவின் செனட் சபை, இதற்கு பதிலடியாக…

ஆப்கானிஸ்தான்: அதிபர் மாளிகையில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள அதிபர் மாளிகை மீது இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். காபூல் நகரின் மத்தியில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இதன் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட நடத்தினர். அப்போது அங்கு இருந்த அதிபரின் பாதுகாவலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். அதிபர் மாளிகைக்கு அருகில்…

திமிங்கலங்கள் மூச்சடக்குவது எப்படி?: விடை கண்டனர் விஞ்ஞானிகள்

திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ்…

முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு: நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டும் என்று புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். நாடு கடந்து வாழ்ந்துவந்த பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப் இந்த ஆண்டின் முற்பகுதியில் சொந்த நாட்டுக்குத் திரும்பியிருந்தார். 'அவரது குற்றங்களுக்காக அவர் நீதிமன்றத்தின் முன்னால்…

ஹிரோஷிமா அணுகுண்டை போல் நான்கு மடங்கு பூமியின் வெப்பம் அதிகரிப்பு!

ஒவ்வொரு வினாடியும், பூமி மீது, அதிகப்படியான வெப்பம் திணிக்கப்படுகிறது. இது ஜப்பானின், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல, நான்கு மடங்கு அதிகம்' என, ஆஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார். இதுகுறித்து, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த ஜான் குக், மேலும் கூறியதாவது:பூமி மீது, முன் எப்போதும் இல்லாத…

மண்டேலாவின் உடல் நிலை மோசமானதால் மக்கள் சோகம்

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை மோசமடைந்துள்ள செய்தியால் அந்நாட்டு மக்கள் வருத்தத்துடன் இன்றைய நாளைத் தொடங்கியுள்ளனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று ஞாயிறு இரவு அறிவித்தனர். 94 வயதான மண்டேலா, கடந்த 16 நாட்களாக ப்ரிட்டோரியா நகரின் மருத்துவமனை…

கால்கள் செயலிழந்த பெண் கடலில் நீந்தி சாதனை

லண்டன்: இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்தன.எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின், தான்…