எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா, பிரிட்டன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தேம்ஸ் நதியில், ஆயிரம் படகுகளின் பவனி…

சுவரில் எழுதிய பெண்ணுக்கு சிங்கப்பூரில் பிரம்படி தண்டனை

சிங்கப்பூரில், சுவரில் எழுதிய, 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனை அளிக்கப்படும். விரும்பத் தகாத வாசகங்களை, பொது சுவரில் எழுதுவது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகின்றன. அண்மையில் 25 வயது பெண், சுவரில் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை…

திருமணத்தின் போது நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில், திருமணத்தின் போது நடனமாடிய நான்கு பெண்கள், கிராம பஞ்சாயத்தின் உத்தரவுப்படி, கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான், செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில், பண்டோ…

கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியது; 153 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நைஜீரியாவிலுள்ள பெரிய நகரான லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. டானா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் லாகோஸில் இருந்து…

அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

பல்வேறு நாட்டின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, ஸ்வீடன் நாட்டிடம் ஒப்படைக்கும் படி, பிரிட்டன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு இரகசியங்களை 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை…

இலஞ்சம் வாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி நேபாளத்தில் சுட்டு கொலை

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம், (வயது 64). இவர்  மூன்று குற்றவாளிகளை விடுவிக்க இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, இவர் மீது, அந்நாட்டு…

லைபீரியாவின் முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை!

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதற்குக் காரணமான உள்நாட்டுப் போருக்கு உதவிய மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. அண்டை நாடான சியாரா லியோனில் செயல்பட்ட புரட்சிகர ஐக்கிய முன்னணி என்கிற…

சியாச்சினில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சியாச்சின் மலையில், பனிப் பாறையில் சிக்கி பலியான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை சரிந்து,…

இளம் பெண்களுடனான கேளிக்கைக்கு பல கோடியை செலவிட்ட மாஜி பிரதமர்

இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்துக்கு இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, 7 கோடி வெள்ளிக்கு மேல் செலவிட்டுள்ளார். இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர். அவர், செக்ஸ் தொழிலாளர்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காகப் பல கோடி வெள்ளி செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது,…

நியூட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்து இந்திய மாணவன் சாதனை

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான். மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உலகுக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுகளுக்கான புதிர், 350 ஆண்டுகள்…

பேரணியில் சரமாரி துப்பாக்கிச் சூடு 12 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் நடந்த பேரணியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் பரிதாபமாக இறந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்திய  பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு உருது பேசும் மக்கள் பலர் பாகிஸ்தானில் குடியேறினர். இவர்களை உள்ளடக்கிய தனி மாநிலம் வேண்டும் என்று…

இந்து திருமண பதிவு சட்டத்திற்கு பங்களாதேஷ் அமைச்சரவை அங்கீகாரம்

இந்து முறைப்படி நடக்கும் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் குறிப்பாக பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்து திருமண பதிவு சட்டம் 2012 என்ற பெயரில் பங்களாதேஷ் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டதிற்குப் பின் அமைச்சரவை செயலாளர் முஷரப் ஹுசைன்…

பாதுகாவலருக்கு சீட் கேட்டு நடுவானில் விமானத்தில் கிலானி மகன் கலாட்டா

பாகிஸ்தான் தலைமையமைச்சர் யூசுப் ரசா கிலானியின் மகன், நடுவானில் விமானத்தில் தகராறு செய் Read More

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்…

ஆப்கானிஸ்தானில் சமாதான தூதுவர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை அரசுடன் ஒத்துழைக்க செய்ய சமாதான கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூதுவராக இருந்த  அர்சலா ரஹ்மானி நேற்று தலைநகர் காபூலில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்பு தலிபான் தீவிரவாதியாக இருந்த இவர் பின்னர் மனம் திருந்தி ஆப்கான் அரசின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு…

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

ரஷியாவின் புதிய அதிபராக விளாடிமிர் புதின் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் நேற்று தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் குதித்தனர். மக்களின் உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி…

பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பிரிட்டிஷ் இளவரசர்!

பிரிட்டிஷ் ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்நிகழ்வை கொண்டாடும் வகையில் அங்கு பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸ் (வயது 63) அவரது மனைவி கமீலா ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர்.…

சிரியாவில் தொடர் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஐ.நா. சபை தலையிட்டு கடந்த மாதம் 12-ந்தேதி முதல்…

ரஷ்ய விமானம் இந்தோனேஷியாவில் மாயம்

இந்தோனேசியாவில், 44 பேருடன் பறந்த ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் மாயமாகியது. ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம், இதுவரை போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் பயணிகள் விமானங்களை தயாரித்து வருகிறது. இப்படி தயாரிக்கப்பட்ட சுகோய் சூப்பர் ஜெட் விமானங்கள் இந்தோனேசியாவில் சோதனை ரீதியாக…

மூன்றாவது முறை அதிபரானார் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் (வயது 59) நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்சினுக்கு பிறகு கடந்த, 2000-ம் ஆண்டில் அதிபரானார் விளாடிமிர் புடின். 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். ரஷ்ய சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது…

பிரான்சின் புதிய அதிபரானார் ஹோலன்டா

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட்…

வங்கதேசம் : 309 ராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை

வங்கதேசத்தில் இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கலவர வழக்கில் 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்க தேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25,26-ம் தேதிகளில் இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் இராணுவ மேஜர் ஜெனரல்…