தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – சத்யபிரதா சாஹூ…

தமிழ்நாட்டின் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு மே மாதம் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் ஒரு வாக்குச்சாவடியிலும்,…

கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆயிரம் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,…

79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை… காரணத்தை கேட்டால்…

புனே: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் வருவது போல், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி, பறவைகளுடன் வாழ்ந்து வருகிறார். நவீன காலமாக மாறி போயிருக்கும் இந்த கால கட்டத்தில், சில மணி நேரங்கள் ஃபேன் இல்லாமல் வீட்டில் சிறிது…

மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்? வீடியோவால் பரபரப்பு!

பிரதமர் மோடியை கொல்ல எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 50 கோடி ரூபாய் பேரம் பேசுவது போன்று வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தேஜ்பகதூர் யாதவ் என்பவர் மனுதாக்கல் செய்தார். இவர் எல்லைப்…

குழந்தை விற்பனை… அமுதா உப்பட மூன்றுபேரை காவலில் எடுத்து விசாரிக்க…

ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில்  சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள்…

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி..…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை என்று கூறியுள்ள விசாரணை குழு, அந்த புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரத்தை…

கலப்பு திருமணம்: கதற கதற நெருப்பு வைத்து எரிக்கப்பட்ட புதுமண…

கலப்பு திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் அகமத்நகரைச் சேர்ந்த முகேஷ் ரான்சிங் (வயது 23) என்ற இளைஞர் ருக்மணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர்…

தி.மு.க.வை ஒழித்துவிட்டால் அ.தி.மு.க. ஒழிந்து விடும் -சீமான்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.அகல்யாவை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், முல்லைக்காடு , தங்கபாரதி திரையரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதியம் முத்தூர் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை…

அக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்!

கரூர்: அக்னி வெயில் தாக்கத்தால் சாலைகளில் பயணிக்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை காஞ்சிபுரம், நாகை, கரூர், வேலூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல…

கொலைச்சதிக்கு பயப்படாத பிரதமர் யார் தெரியுமா?

“மேடம் உங்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கோபமாக இருக்கிறார்கள். சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு வைக்க வேண்டாம்” என்று உளவுத்துறை அதிகாரிகள் பிரதமர் இந்திராவிடம் கூறினார்கள். 1984 ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிவரை சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக…

வறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண்ணீர்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்கள் வறண்டுவிட்டதால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் தமிழகத்தில் கோடை காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. கடந்த…

இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் செல்வாக்கு மிகுந்த 25 எம்.பி.க்கள் வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற சலுகையை இந்தியாவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிரம்ப் அரசின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசரை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்தை அளித்து வருகிறது.…

கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய…

கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர்.…

முகம் எல்லாம் வேகுது.. வரலாற்றில் இல்லாத அனல் காற்று.. சென்னை…

சென்னை: சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான அனல் காற்று தற்போது வீசி வருகிறது. ஃபனி புயல் ஒடிசாவில் வீசி, ஒடிசாவை நாசம் செய்தது என்றால், தமிழகத்தில் வீசாமலே நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபனி புயல் தமிழகத்தை ஏமாற்றி இருப்பதால் மிக கடுமையான வறட்சி இந்த…

நீர் மேலாண்மை: ‘கேப்சூல்’ தண்ணீர் கொடுக்க நேரிடும், ஆப்பிரிக்கா நிலைதான்…

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் வீணாகக் கடலில்…

தமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்..…

திருச்சி: தமிழர்களுக்கு வேலை வழங்க கோரி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டு…

சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டது.. குடி தண்ணீருக்கு…

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டதால் புழல் ஏரிக்கு நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு முக்கிய ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக திகழும் வடகிழக்கு பருவமழையே ஆண்டுதோறும் இந்த…

பெப்சிகோ அறிவிப்பு: உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்

தங்களுடைய காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தி சாகுபடி செய்ததாக, குஜராத்தின் நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் கம்பெனியின் பிரபல 'லேஸ்' பிராண்ட் சிப்ஸ் தயாரிப்புக்காக தாங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எஃப் சி 5…

ஓட்டு போடக்கூடாது: பயங்கரவாதிகள் மிரட்டல்

சோபியான் : லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என காஷ்மீரில் கிராம மக்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மே 6 ம் தேதி 3 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில்…

இன்னும் என்ன தயக்கம்.. இறங்கி அடிக்கலாமே கமலும், சீமானும் !

சென்னை: லோக்சபா தேர்தலிலும் போட்டியிடவில்லை, 22 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதோ 4 தொகுதி இடைத் தேர்தலும் வந்து விட்டது. அதிலும் சீமான், கமல் போட்டியிடவில்லை. ஏன் இத்தனை தயக்கம் இவர்களுக்குள். தமிழகம் சமீபகாலத்தில் அதீதமாக உற்றுப் பார்த்த இரு தலைவர்கள் யார் என்றால் அது சீமான்,…

குஜராத் விவசாயிகளிடம் பெப்சிகோ கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்பது ஏன்?

அமெரிக்க நிறுவனமான பெப்சிகோ இந்தியா, குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகள் விதை காப்புரிமையை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் பிரபலமான லேஸ் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு ரகத்திற்கு பிரத்யேக காப்புரிமையை வைத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. தங்களுடைய அனுமதி பெறாமல் இந்திய விவசாயிகள் இந்த ரக உருளைக்கிழங்கை…

மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது…

2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை…

சென்னை: இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது. இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமான எல்லோரையும் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. கடந்த…