ஆளுநரை பதவி நீக்கம் செய்ய டெல்லி சட்டசபையில் அதிரடி தீர்மானம்!…

ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இதில் அதிகாரிகள்…

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்கள் – 1100 பேர்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 269 பேர்…

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு

இலங்கையின் கடற்பரப்பில் வருடத்தில் 65 நாட்கள் மீன்பிடிக்க, இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று காலி துறைமுகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். 65 நாட்களல்ல 65 மணித்தியாலங்களை கூட இந்தியாவுக்கு விட்டு தர முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த…

காவிரியில் கழிவுநீர்: ஜூலை 28–ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க கர்நாடகாவுக்கு பசுமை…

சென்னை, மே.26– தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் சுதன் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம் காவிரியில் கழிவுநீர்…

ராஜினாமா கடிதத்தை ரெடியாக வையுங்க “ஜெஜெ” .. சு.சுவாமி கிண்டல்

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர்…

ஆந்திரா, தெலுங்கானாவில் கோரத்தாண்டவம் ஆடும் சூரியன்… பலி 750ஐத் தாண்டியது!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 750ஐத் தாண்டியுள்ளது. கோடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களின் உச்சகட்ட வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உக்கிரம் தாளாமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்…

மோடியின் ஓராண்டு ஆட்சியில் பெரிய முதலீடுகள் எதுவும் இல்லை: சிஐஐ

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சியில், பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் சுமித் மஜும்தார் தெரிவித்தார். மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து தில்லியில் அவர் கூறியதாவது: தொழில் தொடங்க எளிமையான சூழலை உருவாக்கும்…

இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய தமிழர்கள் முதன்முதலாக இன…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது. மாநாட்டில் பேசிய சீமான், இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு  கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம். ஈழம் விடுதலை…

நாடு முழுவதும் வீசும் அனல் காற்று: பலியானோரின் எண்ணிக்கை 335

முசோரி: நாடு முழுவதும் வீசும் அனல் காற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 335ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் மலைவாச தளமான முசோரியில் கூட வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.…

பார்வையற்ற மாணவனின் புதிய சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரை

பழனியை சேர்ந்த பார்வையற்ற மாணவனின் சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (10), பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று அந்த சிறுவனுக்கு மிகுந்த ஆர்வம்…

மற்றவர்களுக்கு பசுவதைக்கு எதிராக பிரசாரம் செய்து விட்டு மிகப் பெரிய…

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சியில் இறைச்சி ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், பிரதமர்…

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை…

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த…

நாம் தமிழர் கட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்: சீமான் பேட்டி

சென்னை, மே 23– நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மாலை மலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கே:– “நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?” ப:– “நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர்…

கர்நாடக அரசு காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்:…

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’கர்நாடக அரசு தினந்தோறும் சராசரியாக 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புகிறது என்றும் குறிப்பாக காவிரியில் மட்டும் 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுகிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர்…

மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தும் அரசு பள்ளி மாணவர்கள்…

சென்னை: மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் வகுப்பறைகள் உள்ள போதிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மதிமுக பொதுச் செலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்…

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள…

ஆந்திராவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்களின் வழக்கில் இனிமேலாவது தமிழக அரசு தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூலில் பதிவு செய்துள்ளார். ’’ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நாளுக்கு நாள்…

தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன்

சென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: சென்னை மடிப்பாகத்தில் இன்று எனது நேர்முக உதவியாளர் வெற்றி செல்வன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி…

திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை…

கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை – ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள்…

வேலூர் மாவட்டம், மாதனூர் அடுத்த ஆசணாம்பட்டு கிராமத்தில் பல சாதியினரும் உள்ளனர். இங்குள்ள ஸ்ரீதேசத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகாலமாக அனைத்து மக்களும் கலந்துக்கொண்ட விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் கலந்துக்கொள்ள கூடாது என…

தொல்.திருமாவளவனின் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன் வெட்டிப் படுகொலை!!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் சென்னையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் வெற்றிச்செல்வன். அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் தனிச்…

நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெ. தப்பித்து இருக்கிறார்: ராஜீவ்…

ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் அவர் கைதாகி இருந்தபோது, அவருக்கு ஜாமின் பெற்று தந்தவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தற்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நீதித்துறையையே…

20 தமிழர்கள் படுகொலை திட்டமிட்ட சதிச் செயல்! அம்பலப் படுத்திய…

20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் கைப்பேசி அழைப்பு விவரங்கள் அம்பலப் படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை கடந்த மாதம் 7ம் திகதியன்று, ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டு கொன்றனர். ஆனால்…

இது இனப்படுகொலையா… இல்லையா? – நெஞ்சை உலுக்கும் ஆவணப்படம்

இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆதாரங்களுடனும் தொகுத்து ‘இது இனப்படுகொலையா? இல்லையா?' என்கிற புதிய ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வ கௌதமன். இந்த ஆவணப்படம் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில், 600 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில்…