பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர்…
மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஓ,பன்னீர் செல்வம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், முதல்வர்கள்…
நடுவர்மன்றங்களின் செயல்பாட்டில் அதிருப்தி
மாநாட்டில் சட்ட சொற்களுக்கான அகராதியை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெüடா (வலது). நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நீண்ட காலமாவதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி,…
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல!…
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம் துவங்கியது. முதல் அமர்வு காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அதில் ‘ஈழ விடுதலையும், அனைத்துலக…
இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்: தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள், சர்வதேச கடல்…
யோகாசனம் ஹிந்து மதத்தை பரப்பவில்லை: அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்கப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் யோகாசனம், மாணவர்களிடையே ஹிந்து மதத்தைப் பரப்பவில்லை என அந்த நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்கா முழுதும், பல்வேறு பள்ளிகளில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் சான் டியேகோ நகரப் பள்ளியில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுவது, கிறிஸ்தவ மாணவர்களிடம் ஹிந்து மதத்தைத் திணிக்கும் செயல்…
அணு ஆயுதங்களாலும் தாக்க முடியாத நகரமாக மாறும் டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியை அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு டெல்லியை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பு ஒன்றினை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார்…
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய…
மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிரிரு இரானி இரண்டு நாள் விடுமுறைக்காக குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அவர் கோவாவில் ஒரு துணிக் கடைக்கு சென்று ஷொப்பிங் செய்தபோது,…
சர்வதேச கீதை போட்டி: முதல் பரிசு பெற்று சாதனை படைத்த…
மும்பையில் மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கலந்து கொள்ள மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பள்ளி ஒன்றின்…
மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு: 21 ம் நூற்றாண்டின் மிக பெரிய…
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர் பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்…
கிரானைட் குவாரிகளில் நடுங்க வைக்கும் நரபலிகள்… சுழலும் சகாயத்தின் சாட்டை!!
மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றி விசாரணை மேற்கெண்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பத்தாவது கட்ட விசாரணையில் தனக்கு வந்த நரபலி புகார்களை விசாரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ஒடிசா, பீகார், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த…
எங்களை தாக்கவந்த போர்விமானத்தை இந்திய வீரர்கள் விரட்டினர்; ஏமனில் இருந்து…
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்தனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர்களை மீட்பதற்காக…
ஏழைகளுக்கு கடன் வழங்குவதில் பரிவு காட்டுங்கள்: மோடி அறிவுரை
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி. ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை…
கொத்துக் கொத்தாய் மடிந்துவிழும் மகாராஷ்டிரா குழந்தைகள் – காரணம் “ஊட்டச்சத்து…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் வித்யா தாக்கூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் 197 குழந்தைகள் மரணம் அதிகரித்து காணப்படுகிறது.…
தாலி அகற்றும் விழாவை தடுத்து நிறுத்த கொ.ம.க, பா.ஜ.க, கட்சியினர்…
கோவையை அடுத்துள்ள சூலூர் கலங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் சுயமரியாதை கலைப்பண்பாட்டு கழகம் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாட்டுக்கறி உணவு மற்றும் தாலி அகற்றும் விழா நடைபெறுவுள்ளது. திராவிடர் விடுதலை கழக தலைவர்…
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்பட 30 நாடுகள் கூட்டணி
தீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட 30 நாடுகள் இணைந்து, ஐ.நா.வில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளன. "தீவிரவாத்துக்கு எதிரான நண்பர்கள் குழு' என்ற இந்தக் குழுவானது, ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதாக, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 5 நிரந்தர…
புகையிலை பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை: அறிக்கையால்…
புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்று எவ்வித இந்திய ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பது சர்ச்சை எழுந்துள்ளது. புகையிலை பொருட்களில் அபாய எச்சரிக்கையை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த…
மேகதாது அணைக்கு அனுமதியா?
"காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கோரிக்கை ஏதும் வரவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி, புதிய அணையை கட்டுவது, சாத்தியமில்லாத ஒன்று,” என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். கர்நாடகாவில் உள்ள, மேகதாது என்ற இடத்தில்,…
ஏமனில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்
புதுடில்லி: ஏமனில் சிக்கியுள்ள 4 ஆயிரம் இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 இந்தியர்கள் கடல் மார்க்கமாக மீட்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய அதிபர் அபெட்ரபோ மன்சூரின் ஹாதி…
ரயில்கள் ஏன் தாமதமாகவே வருகிறது? ரயில்வே அமைச்சகத்திற்கு பிரதமர் கேள்வி
புதுடில்லி : ரயில்கள் தாமதமாக இயக்குப்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு குவிந்த புகார்களை அடுத்து, ரயில்கள் ஏன் தாமதமாகவே வருவது? எப்போது சரியான நேரத்திற்கு இயக்குவீர்கள்? என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். விளக்கம் கேட்ட மோடி : ரயில்கள் தாமதமாக…
மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு அலட்சியம் காட்டி வருவதால், தெலுங்கானா மாநிலத்திற்கு…
காற்றாலை மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், மின் வாரியம் மூலமாகவே, தெலுங்கானா மாநிலத்திற்கு விற்பனை செய்ய, காற்றாலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 10 ஆயிரம்…
மேக்கேதாட்டு அணை திட்டம்: பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு…
மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிடுவதற்காக அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியது: கோலார், சிக்பளாப்பூர், தும்கூரு, பெங்களூரு ஊரக மாவட்டங்களில்…
பசுக்களை கொல்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்க நடவடிக்கை: ராஜ்நாத்…
போபால், மார்ச் 30- பசுக்களை கொல்வதை நாடு முழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், அரியானா, ஜார்க்கண்ட் என்று அக்கட்சி ஆளும் பல மாநிலங்களிலும்…
கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான…
மதுரை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், காவல்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேடு…
