பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சுதந்திர இந்தியாவில் பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்:…
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார். இது தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி மேலும் கூறியதாவது: மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன்…
திமுக கூட்டணியில் இணைய கட்சிகளுக்கு கருணாநிதி நிபந்தனை
சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மட்டுமே தமது கட்சித் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று திருச்சி மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10-வது மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய கருணாநிதி பேசியது: "நான் எத்தனையோ மாநாடுகளில் பங்குபெற்று பேசியிருக்கிறேன்.…
பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது: வைகோ
பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது என தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை நிறுவினால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட மாட்டாது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இதனை உறுதி…
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்துடன் இந்திய விண்வெளி வீரர்கள்:இஸ்ரோ அடுத்தகட்ட முயற்சி
புதுடில்லி:செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளிவீரர்களை விண்கலத்துடன் அனுப்பும் அடுத்த கட்ட திட்டத்திற்கு இஸ்ரோ தயாராக உள்ளது. முன்னதாக, செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது சாதனை செய்த இந்தியா,அதன் அடுத்தகட்ட முயற்சியாக விண்கலத்துடன் இந்திய விண்வெளிவீரர்களையும் அனுப்பி ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளது. இது மே அல்லது ஜூன்…
விஜயகாந்த் முதல்வரானாலே எல்லா பிரச்னையும் சரியாயிடும்! பிரதமர் மன்மோகன்சிங்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் தமிழகத்தின் முதல்வரானால் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது, இந்நிலையில் பிரதமரை சந்திக்க போவதாக கூறி விஜயகாந்த் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே நேற்று…
முதலமைச்சர் பதவியை துறந்தார் கேஜ்ரிவால்
ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49-வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலகினர். அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமா…
இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 29 பேர் சிறை…
மண்டபம் : கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சிறை பிடித்தனர்.ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் காலை விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இரவு…
தெலுங்கானா – ஜன்லோக்பால் ; பார்லி., – டில்லி சட்டசபையில்…
புதுடில்லி : பெரும் பரபரப்பை எதிர்பார்த்த அரசியல் இன்று நாடு முழுவதும் பெரும் சூடு பிடித்துள்ளது. பார்லி.,யில் இது வரை நடக்காத வன்முறை நிகழ்வு நடந்தது. லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்ப்பு தெரிவிீத்த ஆந்திர எம்.பி.,க்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வீசி எறிந்தனர். இதனையடுத்து…
இ -கவர்னன்ஸ் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னை தீரும் :…
ஆமதாபாத்: இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்க முடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாஸ்காம் கார்ப்பரேட் நிறுவன அதிபர்களிடம் பேசுகையில் தனது ஆவலை தெரிவித்தார். நாஸ்காம் (தகவல் தொழில்…
மதம் மாறிய விவகாரம்: யுவன் சங்கர் ராஜா டுவிட்டரை விட்டு…
ஏ.ஆர். ரகுமானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள்,…
வெளிநாடுகளி் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க அதிரடிப்படை
பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார். அந்தப் பணத்தில் 5 முதல் 10 சதவீதத் தொகை, முறையாக வரி செலுத்தி வருவோருக்கு வரிச் சலுகையாக அளிக்கப்படும்…
என் இதயத்தில் இரத்தம் கசிந்து விட்டது: மன்மோகன் சிங்
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட ரகளையை பார்த்து என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது என்று கூறியுள்ளார் மன்மோகன்சிங். பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது ஆந்திர எம்.பி.க்களுடன் சேர்ந்து 4 மத்திய மந்திரிகளும் கோஷம் எழுப்பினார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர்…
அமளியால் அடங்கிப்போன லோக்சபா செயல்பாடுகள்:அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : தற்போது நடைபெற்று வரும் 15வது லோக்சபா 62 சதவீதம் மட்டுமே இயங்கி உள்ளது. திட்டமிடப்பட்ட 356 அமர்வுகளில் 345 அமர்வுகள் மட்டுமே அவை இயங்கி உள்ளது. 15வது லோக்சபாவின் மொத்த பார்லி., நேரம் 2017 மணிநேரம் ஆகும். ஆனால் இவற்றில் பார்லி., இயங்கியது 1330.9 மணி…
போலியோ ஒழிப்பு: இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு…
போலியோ தடுப்பு விசயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையில் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்ல வேண்டும். என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நேற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த போலியோ ஒழிப்பு கொண்டாட்ட…
மோடியை உற்றுநோக்கும் 1 கோடி ரசிகர்கள்
பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு பேஸ்புக்கில் 1 கோடிக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் தலைவர்களில் ஒருவர். அவர் தான் அந்த நிமிடத்தில் என்ன செய்கிறோம், அன்று எந்த நிகழ்ச்சியில் கலந்து…
உருக வைத்த ஈழத்தமிழர் படுகொலை காட்சிகள்: திருநங்கைகளின் அசத்தல் நடிப்பு
சேலத்தில் திருநங்கைகள் நடத்திய அழகிப் போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 மற்றும் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அழகிப் போட்டிக்கு நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார். இந்த…
மீனவர் பிரச்சினையால் இந்திய நாடாளுமன்றில் அமளி
இலங்கை அரசினால் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றில் எம்பிக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.பிக்கள் துணைத்தலைவர் இருக்கை அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், ஆவேசமுற்ற அ.தி.மு.க. எம்.பி.மைத்ரேயன் துணைத்தலைவர் முன் பொருத்தப்பட்டிருந்த மைக்கை உடைக்க முயற்சித்தார். இதனால் அவை…
இலங்கை மீனவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு மாத காலம் கடலுக்கு செல்வதில்லை…
இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த மாதம் 13ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-…
அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகளுக்கானது: நரேந்திர மோடி
அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார். கேரள மாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த விழாவில் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப் பார்த்து, அடுத்த 10…
ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் ராஜிநாமா!
தில்லி சட்டப்பேரவையில் ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் முதல்வர் பதவியைத் துறக்கவும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: தில்லியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு அளித்தால் மட்டுமே காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொண்டு ஆட்சியில் அமருவோம் என்று…
தெலங்கானா உருவானால் காங்கிரஸ் அழிந்துவிடும்
ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவினால் வெற்றி வாய்ப்பை இழந்து, காங்கிரஸ் அழிந்துவிடும் என்று மாநில முதல்வரான கிரண் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தெலங்கானா தனி மாநில முடிவு, ஆந்திரத்தில் காங்கிரஸýக்கு நீண்ட காலத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.…
மதுக்கடைகளை மூடி மக்களைக் காப்பாற்றுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்
தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி இப்போது தான்…
வைகோவின் கோரிக்கையை ஏற்றார் மோடி
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்” என்று வைகோ கூறியதற்கு, அப்படியே செய்வோம்” என்றார் மோடி. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை (08.02.2014)…
