தமிழகத்தில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள்?

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்தியாவில் தொழில்துறையில் முன்னேறியுள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் மூன்று இடங்களுக்குள் நிரந்தரமான இடம் உள்ளது. 50% மேல் நகர்மயமான மாநிலம் நமது. இதுவரை வளர்ச்சியின் குறியீடுகளாக இவையனைத்தும்…

காவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக…

பெங்களூர்: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.…

“எங்கள் வேலை போனாலும், ஆலையை மூடியதில் மகிழ்ச்சி”: ஸ்டெர்லைட் ஊழியர்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்…

வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்?திருமாவளவன்

வேல்முருகன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக! என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:  ’’தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது. இந்நிலையில் அவர்மீது…

எல்லை தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்; பாகிஸ்தானை நம்ப…

ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. எல்லையில் அமைதியின்மை நேரிட்ட நிலையில் கடந்த வாரம் இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான்…

ஆட்டிப் படைக்கும் நிபா வைரஸ்.. டாக்டர்கள், நர்சுகளை கூட லீவில்…

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் அச்சம் காரணமாக பலாச்சேரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களை விடுப்பில் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளத்தில் வேகமாக பரவி வருகிறது நிபா வைரஸ். இந்த வைரஸ் வௌவாலில் இருந்து பரவுகிறது. அந்த உயிரினம் உட்கார்த பழத்தை மனிதர்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு பரவுகிறது.…

தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி.. நீரா பானம் உற்பத்தி செய்ய 3…

சென்னை: தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு 'நீரா' பானம் உற்பத்தி செய்யும் உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வருமானத்தை உயர்த்த தென்னம்பாளையிலிருந்து 'நீரா' பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்..

நியூயார்க்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் (மே) 22-ந் தேதி போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். அப்போது நடந்த கலவரத்தை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதற்கு ஐ.நா.சபை மனித…

சமூக ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் ரஜினி –…

நடிகர் ரஜினிகாந்துக்கு சர்ச்சைகள் என்பது புதிதல்ல என்றாலும், சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் பல கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார். ஆன்மீக அரசியல், போலீஸாருக்கு ஆதரவாக பேசியது, தற்போது தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டது, செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியது என ரஜினியை பலரும், பல்வேறு விதமாக…

குஜராத்தில் மீட்கப்பட்ட சிலைகளை தஞ்சை பெரிய கோயிலில் வைக்க கும்பகோணம்…

கும்பகோணம்: குஜராத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள், இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. சிலைகளை தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சை பெரியகோயிலிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் காணாமல்போனதாக கூறப்பட்டது. இவைகள், குஜராத் சராபாய் பவுண்டேஷன் - காலிகோ…

நான்கு திசைகளிலும் தோல்வி – பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களில் மே 28 அன்று நடந்த, இடைத்தேர்தல் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளில் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலத்தில் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட இருவரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பேரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். நீதிமன்ற உத்தரவுபடி, ஜிப்மர்,…

தமிழா, சமஸ்கிருத பாடலா? காஞ்சி கோயில் சாமி ஊர்வலத்தில் வடகலை-…

காஞ்சிபுரம்: சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது. காஞ்சிபுரத்திலுள்ள புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின்போது, பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம். இன்றும் அதேபோல பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது சமஸ்கிருத பாடல்களை…

வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர்…

வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வாய் இரவு வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர். பிகாரிலும் இதே காரணத்தால் 20 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல், மின்னல்…

அரசின் ஊதுகுழலாக மாறி தூத்துக்குடியில் சீறிய ரஜினிகாந்த்.. ஒட்டுமொத்த ஷாக்கில்…

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு வக்காலத்து வாங்குவதை போலவும் இருப்பதாக கொதிக்கிறார்கள் மக்கள். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, தூத்துக்குடி நகரில் 13 பேர் போலீசாரால் சுட்டு…

ஸ்டெர்லைட்: தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்

கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். சூழலியல் மாசடைகிறது. அதனால், தங்கள் வாழ்வாதராம் கேள்வி குறியாகிறது என்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் முன்வைத்த காரணங்கள். மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை…

மானாமதுரை அருகே கச்சநத்தத்தில் ஆதிக்க சாதியினர் வெறியாட்டம்- 2 பேர்…

சிவகங்கை: மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்.. வெளியான பகீர் தகவல்.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுமார் 13 பேரை சுட்டுக்கொன்றது தமிழக அரசு. தமிழகத்தினை தாண்டியும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில்,…

தூத்துக்குடி படுகொலைகள்; ஆட்சி அதிகாரம் தரும் போதை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். வாழ்தலுக்கான உரிமை கோரி போராடிய மக்கள் மீது, எந்தவித அடிப்படை அறமும் இன்றி துப்பாக்கிகள், குண்டுகளை சரமாரியாகப் பொழிந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவல்துறையாக…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி…

சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த…

ஸ்டெர்லைட்: இது தூத்துக்குடியா? காஷ்மீரா?- மக்கள் கேள்வி

''யே நாம தூத்துக்குடில இருக்கோமா? காஷ்மீர்ல இருக்கமோலே?'' தூத்துக்குடியில் மே22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போரட்டத்தை அடுத்து அரங்கேறிய வன்முறையை ஒடுக்குவதற்காக குவிக்கப்பட்ட காக்கிப்படை இன்னும் நகரின் தெருக்களில் நிறைந்திருக்க, பாதிக்கப்பட்ட உள்ளுர்வாசிகள் பலரும் காஷ்மீரில் இருப்பதுபோல தோன்றுவதாக கூறும் உரையாடல் அது. அண்ணா…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம்

சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,'' இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள்…

தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் – போலீஸுக்கு அதிகாரம் அளித்தது…

"இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு…