பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிங்களத் தலைவர்களிடம் நாம் நிறைய கற்கவேண்டும்!
சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் என்ற ஒரு ஒப்புநோக்குகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் அவர்களின் அரசியல் பணிகள் அனைத்தும் தமது இனம், தமது மதம், தமது நாடு என்ற அடிப்படையில் இருப்பதைக் காணமுடியும். ஆனால் தமிழ்த் தலைவர்களை நோக்கும் போது இவர்கள் தமது இனம், தமது மக்கள், தமது…
புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை…!
புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு என்பன இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில் வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும்…
சட்டரீதியான பாதுகாப்புள்ள கேபியை கைது செய்ய முடியாது – சிறிலங்கா…
கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இலகுவாக கைது செய்ய முடியாது என, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சா ராஜித்த சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார். செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம் அவரை சிறிலங்காவுக்கு…
தமிழ்மக்கள் அனைத்தையும் கெஞ்சித்தான் பெறவேண்டும் என்ற மனோநிலையில் ஆட்சியாளர்கள்!- வடக்கு…
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டு நல்லாட்சி, ஜனநாயக ஆட்சி என விதந்துரைக்கப்படும் நிலையிலும் தமிழ் மக்கள் தங்களிடம் அனைத்து விடயங்களையும் கெஞ்சித்தான் பெற்றுக் கொள்ளவேண்டும். என்ற மனோநிலை இந்த ஆட்சியாளர்களிடமும் மாற்றம் பெறாமல் இருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 40ம் அமர்வு இன்றைய தினம்…
போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை! – அரசு உறுதி
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அரசு அறிவித்தது. அதேவேளை, இலங்கையின் ஆயுதப்படைகளைத் தரமுயர்த்துவதற்கு 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரிட்டன், இதனைக் கண்காணிக்க டில்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமித்துள்ளமையானது தேசிய…
பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்! வடக்கு முதல்வரிடம் கோரிய…
யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா இன்று மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர்…
‘இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் ஏற்படாது’: இலங்கைப் பிரதமர் ரணில்
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (சீபா) இலங்கை அரசு கையொப்பமிடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இலங்கை சிபா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் போவதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்று பிரதமர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறினார். ராஜபக்ஷ…
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க மோடியுடன் ரணில் பேச வேண்டும்:…
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பததைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரோடு ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல்…
பிரபாகரனை விடவும், கே.பியே அதிக குற்றம் இழைத்தவர் – ராஜித்த
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய…
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 முக்கியமான ஆண்டாக இருக்கும்:…
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016ஆம் ஆண்டு அதிமுக்கியமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே…
தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு!
நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார் 51,000…
விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின்…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே…
யாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சியின் கதை
இந்த காமினியை போட்டு தள்ள , பல வருடங்களின் பின்னர் எவ்வாறு புலிகள் நாள் குறித்தார்கள்... இதுவரை வெளிவராத தகவல்.... அதிர்வின் வாசகர்களுக்காக... 1970 க்குப் பின்னர் சிங்கள இராணுவ இயந்திரத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி , போராட தலைப்பட்டபோது, விடுதலைப் புலிகள்…
365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா?
2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் – என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் கோலம்! தமிழீழத்தின் விடிவிற்காய், உலக தமிழர்களின் பெருமைக்காய், தமது உயிர்களை அர்பணித்த மாவீரர்களுக்காக, உலகில் ஒவ்வொரு தமிழர்களும், விசேடமாக ஈழத்தமிழர்களினால்…
துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில்…
இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வின் தொடக்க நாள் நிகழ்வின் இந்தோழமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தினை ஆட்கொண்ட கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாhல்…
ஜனவரி இறுதியில் போர்க்குற்ற விசாரணை! – நீதி அமைச்சர் தகவல்
மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு - செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பற்கும் அரசு உத்தேசித்துள்ளது என்று என்று நீதி அமைச்சர் விஜேதாஸ…
முக்கிய கொலைகளில் இராணுவத்தினருக்கு தொடர்பு: ரணில்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இலங்கை கடற்படையினருக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அதற்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவும் வெளிநாடுகளின் புலனாய்வு உதவிகளை பெற்றதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று…
புலிகளை விடுதலைசெய்தது சரிஎனில் தமிழ்க் கைதிகளை விடுவிப்பது எப்படி தவறாகும்?…
ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி…
தமிழ் – முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் மௌலானா காலமானார்
வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுப்பாலமாக இருந்தவரும், மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் மசூர் மௌலானா(84) இன்று காலமானார். இவர் இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிசெய்த பல அரசியல் தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணியவர். இன, மத…
தமிழ்த் தலைமைகளின் ராஜதந்திரம் சாதனையா? வேதனையா? – பிரம்மாஸ்திரன்
மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடிவருகிறார்கள். அடக்கு முறைக்கும் அநீதிக்கும் எதிராக, பல்வேறு வடிவங்களில் யுகம் யுகமாக விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. உலகில் அநீதியும் அடக்குமுறையும் தொடரும்வரை விடுதலைப் போராட்டங்களும் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கின்றன. ஒடுக்கப்படும் மானிட வர்க்கம் விடுதலையடையும் வரையில் ஏதோவொரு வகையில்…
தமிழக பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தொப்பூள் கொடி உறவுகளுக்கு உதவுதல்…
வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவும்படி ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம் அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது. வரலாறு காணா அளவு பெருமழையால் எமது தொப்பூள் கொடி உறவுகள் தமிழகத்தில் பெரு வெள்ளத்தில் இலட்சக்கணக்கில்…
இது வரை வெளியாகாத புகைப்படங்கள்: சிங்களத்தின் ரகசிய கொலைக்கள சிறைச்சாலை
இதுவரை வெளியாகாத அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருகோண மலையில் , தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்தி அவர்களை சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்யும் சிறைச்சாலை இது தான். இதனை சிலர் ரகசியமாக போட்டோ எடுத்து , முன் நாள் ஐ.நா மனித உரிமை ஆய்வாளர் ஜஸ்மின்…
இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்த வடக்கில் புதிய போராட்டம் ஆரம்பம்
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளை கண்டித்து அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வட மாகாண மீனவ அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களுக்கு தபாலட்டை அனுப்பும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று…
