பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெற்றுத் தருவோம்; விக்னேஸ்வரனிடம் சமந்தா…
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து பெற்றுத் தருவோம் என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், தம்முடனான சந்திப்பில் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த சமந்தா பவருக்கும்,…
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த கோரிக்கை!…
வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் மூலமாக மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிநாட்டு நீதிபதிகளை மட்டுமே கொண்ட…
வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன்…
வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா…
பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவை என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கை அரசின் சிறப்பு வர்த்தமானி வெளியீடு ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை…
இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடம் இல்லை: முன்னாள் கடற்படை தளபதி…
இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் செயற்பட்டதாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதுபோன்ற இரகசிய சிறைகள் எதுவும் செயற்படவில்லை என்று அந்நாட்டுக் கடற்படையின் முன்னாள் தலைமை தளபதி வசந்த கரன்னகொட மறுத்துள்ளார். இலங்கையின் திருகோணமலை கடற்படை தளத்தில் பூமிக்கடியில் இரகசிய சிறைக்கூடம் ஒன்றை ஐ.நா. குழு…
திருமலை இரகசிய வதைமுகாம் தகவலை ஐ.நா. அதிகாரிகளுக்கு வழங்கியது யார்?…
திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், குறித்த முகாமில் சித்திரவதைகள் இடம்பெற்ற சந்தேகம்…
திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு
திருகோணமலை கடற்படைத் தளத்தில் இயங்கிய இரகசிய தடுப்பு முகாம் பற்றி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தடுப்பு முகாம்கள் இரகசியமான முறையில் கையாளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானபோது அதனை எச்சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் எத்தனிக்கவில்லை மாறாக சரியான தகவல்களை பெற்றுத் தாருங்கள் விசாரணை நடத்தி…
பெண் ஒருவர் தவறு செய்தால் மரண தண்டனை, ஆனால் ஆண்…
இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் வேறு ஆண் ஒருவரோடு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு மரண தண்டனையும்,. தொடர்பு வைத்த ஆணுக்கு 100 சவுக்கடியும்…
முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை!
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை மாவீராநாள் வாரமாகும். அந்தவகையில் இன்று மாவீரர் நாளின் தொடக்கநாள் . 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்காண மாவீரர்கள் மாண்டு…
2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட…
2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான…
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை
இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டவர்களின் கதி என்ன ? அந்த…
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்: ஐநா கவலை
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். தமது விஜயத்தின் போது சந்தித்த காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக…
தமிழ் மக்களின் போராட்டங்களை புரிந்து கொள்ளாதவரை நல்லாட்சி மலராது: யோகேஸ்வரன்
தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளாதவரை இந்த நாட்டிலே நல்லாட்சி மலராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இன மத கட்சி பேதமின்றி ஒருமித்து குரல்கொடுத்ததைப் போன்று…
மலையக மக்களுக்கும் தனியாக அதிகாரப்பகிர்வு அலகு அவசியம்! சர்வகட்சிக் குழுக்…
தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட…
என்னை பலிகடாவாக்க எம்.ஏ.சுமந்திரன் முயற்சி; விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கட்சிக்குள் தனக்கு இதுவரை காலமும் இருந்து வந்த மதிப்பு குறைகின்றதோ என்கிற எண்ணத்தில் தன் மீது குற்றங்களைச் சுமத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வானொலியொன்றுக்கு அண்மையில் செவ்வியொன்றை வழங்கியிருந்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பில்…
பாரீஸ் குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்!
பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு இணையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன்…
இலங்கை முன்னேற்றப் பாதையில்! பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றது ஐரோப்பிய…
சிறையில் உள்ளவர்களை விடுவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இலங்கையில் முன்னேற்றக்கரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீண்டும் சர்வதேசம்…
ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி ஒருமித்த முடிவை எடுக்காத காரணத்தினால் நாளை செவ்வாய்க்கிழமை(16) இடம் பெறவுள்ள ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்தை…
பயங்கரவாதத் தடைச் சட்டம் துயரங்களையே தந்துள்ளது! – மனித உரிமை…
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் அது ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களுக்குப் பதிலாக துயரங்களைப் பல மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம இவ்வாறு…
கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து…
உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு, அவர்களைப் பார்வையிட்டார். அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். கைதிகளின் நிலை குறித்து லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில், அரசியல் கைதிகள் விடுதலை…
எம்மால் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரமுடியாது! ஐ.நா.குழு
இலங்கைக்கு வருகைதந்துள்ள காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஐ.நா. குழு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம் மேறகொண்ட விசாரணைகள் குறித்த இறுதி முடிவை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவுகளை சந்தித்த ஐ.நா. குழுவினார் காணாமல் போனவர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட அனைத்து…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பா? புனர்வாழ்வா?
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்திவிட்டு அவர்களை விடுதலை செய்வதா என்பது தொடர்பில் அரசு நாளை முடிவெடுக்கவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அலரிமாளிகையில் நாளை திங்கள் கிழமை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
சம்பந்தன் மீது முழு அளவில் நம்பிக்கை உள்ளது: தர்மலிங்கம் சித்தார்தன்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எந்த வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் லங்காசிறி செய்தி சேவைக்கு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்மைப்பு எனும் போது இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற…
