பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அடுத்து வரும் அரசாங்கத்துடன் அனைத்துலக ஆதரவோடு எமது பிரச்சினைக்கு முடிவு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவிடுதலைப் பிரச்சினை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்பதற்கு எமது மக்கள் நம்பிக்கை வைத்து எங்களுக்கு…
மில்லியனை நெருங்கும் ஐ.நாவை நோக்கிய கையெழுத்து வேட்டையில் திருமாவளவன்! தேனிசை…
இலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஐ.நாவை நோக்கிய கையெழுத்துப் போராட்டம் மில்லியனை நெருங்கி வருகின்றது. சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரி உலக தமிழர்…
உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்: இரா. சம்பந்தன்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும், முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம்…
எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற…
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நாளை(10) வெள்ளிக்கிழமை மதியம் வேட்பு மனுத்தாக்கலை ஒன்றாக மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது. எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத்தர வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை…
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை கோருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து பூரண அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு அவசியமானது என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.…
தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி…
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் குழப்பங்களையும், தமிழர்களின் வாக்குகளையும் சிதைப்பதற்கு விசமத்தனமான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் இப்பொழுதே மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில், பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகள் உள்ள நிலையில் அதிக வாக்குகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களில் ஒருவரான முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரனுக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை சில தமிழ்…
எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல, இன அழிப்புக்குள் அகப்பட்டுள்ளோம்!!…
எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல , இனப்படுகொலைக்குள் அகப்பட்டுள்ளோம், அமெரிக்கா கலிபோனியாவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் https://youtu.be/qo3Upz2FKEs -http://www.tamilwin.com
மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா: மனித உரிமை…
இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நிலைமைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, காணொளி மூலம் கருத்து வெளியிட்ட போதே அவர்…
முன்னாள் போராளிகள் அரசியல் பலிக்கடாக்களா?
வடக்கில் முன்னாள் போராளிகளை மையமாக வைத்து உதயன், சுடரொளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான என். வித்தியாதரன் என்பவரின் ஒருங்கிணைப்பில் தோற்றம் பெற்றுள்ள “ ஜனநாயகப் போராளிகள் கட்சி” தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை அரசியல் ரீதியான விமர்சனங்கள் என நாம் ஒதுக்கித்…
யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு பட்டாச்சாரியார்கள் பூசை யாழ்ப்பாண சைவர்கள்…
இந்தியா – ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெலுங்குப் பட்டாச்சாரியார்களைக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலில் வைணவ முறைப்படி பூசைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாண சைவ சமயத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்தப் பூசைகளை நிறுத்தி மீண்டும் சிவாகம முறைப்படியான பூசைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சைவ சமய அமைப்புகளின்…
ராஜீவ்காந்தியைத் தாக்கிய முன்னாள் சிப்பாய் நாடாளுமன்றத் தேர்தலில்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) சார்பிலேயே இவர் கம்பகா மாவட்ட தலைமை வேட்பாளராக…
மறைக்கப்படும் இசைப்பிரியாக்கள்!
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்புத் திருமணம் என்ற இரண்டு…
‘உண்மையான போராளிகள்’ சயனைட் கடித்து இறந்துவிட்டார்கள்! – சொல்கிறார் சிறீதரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பி பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். இன்று (06.07.2015) தமிழ்…
முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்…
20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ…
பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி…
கூட்டமைப்பிடம் சில கேள்விகள்!- நிலாந்தன்
2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது.…
விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!-…
2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக முழுமனதோடு மதிக்கின்றோம்!- புலத்தில் வாழும்…
எம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல். எம் மக்களின் விடிவிற்காக 30 வருடமாக எங்கள் தலைமை எம்மை நேர்மையான கட்டுக் கோப்போடு போராட்டத்தை கற்பித்தார்கள். முள்ளிவாய்க்காலிற்கு பிறகு, நாம் பல துன்பங்களை அனுபவித்து அதன் பிறகு எம்மவர்கள் இலங்கை சிறைகளிலும், ஈழத்திலும் மற்றும்…
நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்! ஆதங்கப்படும் ஒரு தமிழன்
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆதங்கத்துடன் நபரொருவர் வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு, விண்ணப்பக் கடிதங்கள்: காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் கடிதங்கள் பிரதேச மாவட்ட ரீதியாக கோப்பில்…
சிறுபான்மையின மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே மஹிந்த கூட்டணி அமைக்கின்றார்: சோபித…
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினர் பழிவாங்கப்படுவார்கள். பழிவாங்கும் நோக்கில்தான் மஹிந்த கூட்டணி அமைத்துள்ளார் என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். வென்றெடுத்த ஜனநாயகத்தை காப்பாற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார்…
கரும்புலிகள் நாள் – 2015 எமது போராட்டப் பாதையின் தடை…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. “விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்…
முன்னாள் போராளிகளின் ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்! – பொதுத்தேர்தலில்…
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,…
வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக…
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு வடக்கு கிழக்கைச் சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன. தமிழ் சிவில் சமூக…
