போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் என்றுமே மாறாது!- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில்…

மே-18 தமிழர்களின் வரலாற்றில் இலட்சக்கணக்கானவர்கள் உயிர்நீத்த நாளாகும். எந்த இலட்சியத்தை எமது இனம் அடைய வேண்டும் என்பதற்காக எம் உறவுகள் உயிர்நீத்தார்களோ அதனைப் பெறுவதற்காக எமது ஒன்றுபட்ட பயணம் தொரும் என முள்ளிவாய்க்கால் மண்ணில் உறுதிபூண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்றை தினம் முள்ளிவாய்க்கால்…

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக புலி…

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை மீறி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள்…

வடமாகாண சபை தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள்: கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால்

வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம், மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. .நினைவேந்தல் முற்பகல் 10.30 மணிக்கு சுடரை முதலமைச்சர் கவி விக்கினேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தமது உறவுகளை…

முள்ளிவாய்க்கால்: போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்! தீரா…

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம், இப்போதும், பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக அங்கு மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள். வீடமைப்புத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன அங்கு செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. பிரதான வீதி சீரமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் புது…

உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ஜனநாயக உரிமை என்கிறது அமெரிக்கா!

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இடமளிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி, இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் பொதுமக்கள் தடையின்றி ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிழக்வுகளுக்கு பொலிஸாரும் படையினரும் தடைவிதிப்பதாக பொதுமக்கள் சிலர் முறையிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களை…

‘மைத்திரிபால அரசின் நல்லெண்ணத்தை மதிக்க வேண்டும்’: இமானுவேல் அடிகளார்

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி…

செப்டெம்பரில் வெளியாகவுள்ள அறிக்கை கடுமையானது: சொல்ஹெய்ம்

போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். போரின் இறுதி தருணங்கள்…

இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு! சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான்…

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு…

கூட்டமைப்பிற்கும் தடை! இரவிரவாக தடைவழங்கும் காவல்துறை!!

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய…

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்ற மே18இல் முள்ளிவாய்க்கால் நோக்கி அணி திரள்வீர்-…

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்றுவதற்காக மே 18 இல் தமிழ் மக்களை முள்ளி வாய்க்கால் நோக்கி அணிதிரளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். இன அழிப்புப் போரில் உயிர்நீத்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து, எங்களின் நியாயமான உணர்வுகளை அமைதியான முறையில்  வெளிப்படுத்தி எம் மரபை மீள…

இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம்!- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலளித்துள்ளது. நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னர் புலம்பெயர்வாளர்கள் ஐக்கிய…

மே 18ல் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு வடக்கு மாகாண சபையினரால்…

இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மாகாண சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு…

குமுதினிப் படகு படுகொலை! 30 ஆவது ஆண்டு நினைவு நாள்…

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில்…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதியிலும் இறந்த உறவுகளை நினைவுகூர…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது…

நினைவேந்தலை அரசியல் ஆக்காதீர்கள்!

மே-18 முள்ளிவாய்க்காலில் முடிவுற்றுப் போன யுத்தத்தில் பறி கொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருகின்ற நாள். இந்த நாள் இனவிடுதலைப் போரில் ஆகுதியாகிப் போன அத்தனை உறவுகளையும் நினைவு கூருகின்ற நாளாகக் கொள்ளக் கூடியது. நினைவு கூருவதற்கும் நாள் உண்டா? என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதில் நூறுவீத…

போராளிகளின் குடும்பங்களுக்கு 43 மில். ரூபாவில் புதிய செயற்திட்டம் -அமைச்சர்…

வடமாகாண சபையினால் மாவீரர் குடும்பங்கள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள்,மற்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவியளிக்கும் செயற்றிட்டம் 43மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

லண்டனில் முழு தமிழ் குடும்பமே மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள் ?

கிழக்கு லண்டன் பகுதியான , சட்வெல் ஹீத்தில் பொலிசார் 3 சடலங்களை கண்டெடுத்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழர்கள். 2 மகள் மற்றும் தாயார் வீட்டில் இறந்த நிலையில் காணப்படுவதோடு, இவர்களின் அப்பா (கணவர்) பிறிதொரு இடத்தில் பற்றைக்குள் இறந்து கிடப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரதீஷ் குமார் என்று அழைக்கப்படும்…

தமிழீழ விடுதலை புலிகளை நினைவு கூர முடியாது – ருவன்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் நேற்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தீபமேற்றும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார். இதன்போது, நேற்று தொடக்கம் எதிர்வரும் ஒருவாரத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்கான காலமாகவும் அவர் அறிவித்துள்ளார். ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…

பிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெறாதது ஏன்?

பிரித்தானிய பொதுத்தேர்தலில் 10 இந்தியர்கள், 09 பாகிஸ்தானியர்கள், 03 பங்களாதேஸியர்கள், 01 சிங்களவர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் சுமார் 03 லட்சத்துக்கும் 04 லட்சத்துக்கும் இடையிலான சனத்தொகையை கொண்ட இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து இந்திய செய்திச்சேவை ஒன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய…

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – மாவை

புதிய அரசாங்கத்தின் கீழும் தமிழ் மக்களின் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் விடுவிக்கப்பட்ட…

இலங்கையில் நாகர்களின் அடையாளங்கள் அதிகம் : பேராசிரியர் க.பத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் அடிப்படையில் இப்பகுதியில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு.2 நூற்றாண்டில் ஆட்சி…

நாளை தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் 65 இலங்கைத் தமிழ்…

இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 65 இலங்கைத் தமிழ் அகதிகள் நாளை மீண்டும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இவ்வாறு நாளை நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத…

இலங்கை: இறந்தவரை நினைவுகூர உரிமை தேவை

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து…