பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது: சம்பந்தன் குழுவிடம் மைத்திரி, ரணில் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விவகாரம் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்…
மகிந்தவை வெளியேற்றியதன் காரணம் என்ன? சுவிஸ்சில் மாவை மற்றும் சிறிதரன்…
2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் முடிவில் சில விமர்சனங்கள் உண்டு, எமது முடிவிற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முடிவை தென்னிலங்கை நன்கு உணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் சுவிட்சர்லாந்தில் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒவ்வெரு…
தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையுடன் ஒன்றுபட வழி உண்டா? –…
இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே…
கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை…
மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்
இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி ருத்திரகுமாரன் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார். வன்னி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற…
கோத்தபாய மீது அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டை சுமத்த முடியும்: நியூயோர்க் டைம்ஸ்
போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அமரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவுள்ளார். இத் தகவலை அமெரிக்காவின் சட்ட பேராசிரியர் ராயன் குட்மட்ன் நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் இன்று வெளியிட்டுள்ளார். அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டின் போர்க்குற்ற சட்டத்துக்கு கோத்தபாய…
போர் குறித்த விசாரணைக்கு மைத்திரி ஒத்துழைப்பார்!– மங்கள சமரவீர
எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அவையுடன் ஒரு புரிந்துணர்வான நிலை எட்டப்பட்டு இறுதி யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணையே எடுக்கப்படும் என நம்புவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பத்திரிகையொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக சிலகாலம் பணியாற்றிய இலங்கையின்…
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையே நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம்: சம்பந்தன்
இலங்கையின் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இன்று நாடாளுமன்றத்தில் இந்தக்கோரிக்கையை விடுத்தார். நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின்மையே காரணம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.…
கோத்தபாய, மரணப்படை ஒன்றை இயக்கி வந்தார்! அதிரடி தகவல்கள் அம்பலம்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை…
ராஜபக்சவினருக்குக் கொடுக்கும் தண்டனை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினறும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி
ஆட்சி மாற்றப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு…
வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை: அரசாங்கம்
தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், வடக்கில்…
‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 11 உறுப்பினர்கள் உள்ளனர் இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான…
கே.பி.க்கு எதிராக வழக்குத் தொடரும் ஜேவிபி
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு…
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்! அமைச்சர் சுவாமிநாதன்…
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாகக் கீழே தரப்படுகிறது. கேள்வி: மீள்குடியேற்ற, புனர்வாழ்வு…
வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக…
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே
கொழும்பு, ஜன. 18- இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. 'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே…
தேசிய நிறைவேற்று சபை! சம்பந்தன்,ஹக்கீம், மனோ உள்ளடக்கம்! செவ்வாய் தோறும்…
தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஜனாதிபதி தேர்தலின்…
சீனாவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த மஹிந்த எத்தனித்தார்: ரணில் குற்றச்சாட்டு
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட சீன சார்புக் கொள்கை மாற்றியமைக்கப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதவியேற்றப் பின்னர் முதலாவது தொலைக்காட்சி செவ்வியை என்டிடிவிக்கு வழங்கியேோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு எதிராக சீனாவையும் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் வைத்து விளையாட…
ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு மூடுவிழா?
ஹம்பாந்தோட்டையில் மத்தளவில் உள்ள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை முற்றாக நிறுத்தப்போவதாக நட்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ அட்சியின்போது, மத்தள விமானநிலையத்தை மதிப்பீடு செய்ய சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான…
ஜனாதிபதி மைத்திரிபால குறித்து கூட்டமைப்பு அதிருப்தியில்
சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகளை மீறிய செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தை வெளியேற்றுதல், காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு…
இராணுவப்புரட்சி தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 9ம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த உத்தரவை குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு விடுத்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு…
வடக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்
இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இலங்கையில் அமைதியான சூழல்…
