பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்’
இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள்…
ஐ நா விசாரணைக் குழு எந்தவொரு சம்பளமும் பெறாமல் தொண்டு…
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயும் குழு தொண்டு அடிப்படையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த விசாரணைக் குழுவை நியமித்திருந்தது. அந்த…
ஐ.நா குழுவுக்கு நேரடியான பங்களிப்பு சாத்தியமில்லை : இலங்கை மனித…
இலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள வல்லுநர் குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை…
பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமானதாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின்…
முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது பொறுக்காமல் அடித்து விரட்டுகின்றனர்: விக்னேஸ்வரன்
முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் முன்னேறுவதை பொறுக்க முடியாத பெரும்பான்மையினர் அவர்களை அடித்து அடித்து துரத்துகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னர்…
விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் குறித்து கருத்து வெளியிட கனடா…
கனடாவில் வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மற்றும் நாடுகடத்த முயன்று வருவதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். இலங்கை அப்படியான கோரிக்கையை விடுத்திருப்பது தொடர்பில் கனேடிய நீதியமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. கனடாவில் இருக்கும்…
புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாடு! ஜூலை 23ல் மொரீசியஸில்…
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இது குறித்துப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், மொரீசியஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம்…
புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம்…
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…
மற்றொரு அனர்த்தத்திற்கு தூபமிடுகின்றது பொதுபல சேனா: தடுக்கக் கோருகிறார் ஏ.எம்.ஜெமீல்
கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்த கால…
இலங்கை தொடர்பான ஐநா விசாரணைக்குழுவின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் வெளியாகும்!
இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்தக்குழுவின் மூன்று முக்கிஸ்தர்கள் நேற்று பெயரிடப்பட்டனர். எதிர்வரும் தினங்களில் ஏனையவர்களும் பெயரிடப்படவுள்ளனர். இதனையடுத்து தமது விசாரணைகளை ஆரம்பிக்கும் குறித்த குழு எதிர்வரும் செப்டம்பரில்…
ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம்…
தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, பேருவளையில்…
இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை
இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என இந்திய ஊடகமான தி ஹிந்து ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், தெற்கின் சுற்றுலா நகரங்களான பேருளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் நான்கு…
போர்க்குற்ற விசாரணைகளுக்கு பான் கீ மூன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்…
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் முழுமையான ஆதரவை வழங்குவார் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர்சிட்டி பிரஸின் கேள்விகளுக்கு நேற்று பதில் வழங்கிய…
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது –…
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை
இலங்கையில் ஜிஹாத் மற்றும் தாலிபான் அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று கொழும்பில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் ஜிஹாத், தாலிபான் அமைப்புகள் குறித்தும்…
தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம்…
தமிழ் மொழிப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 1122 இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மற்றுமொரு குழுவினருக்கு யாழ் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேற்படி தமிழ் மொழிப் பயிற்சிநெறியை 12 அதிகாரிகளும் வேறுபல பதவிகளையும் சேர்ந்த 1110 பேர்களும் பூர்த்தி செய்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்புப்படை தலைமை அலுவலக…
ஒவ்வொரு நாளும் கடற்கரையிலும் காடுகளிலும் தமிழர்களின் சடலங்கள் ஒதுங்குகின்றன !
யாழ்.தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தும்பளையினைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம்…
முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை: ஹெல உறுமய ஜனாதிபதியிடம்…
இலங்கையில் கடந்த பல தினங்களாக நாடு முழுவதும் முஸ்லிம் பொதுமக்கள் வீதிகளை மறித்து நடத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு எதிராக நாட்டின் சட்டத்தை ஏன் செயற்படுத்தவில்லை என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரின்…
ஐ நா விசாரணைக் குழுவில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி?
ஐ.நா விசாரணைக் குழுவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு, குழுவின் ஆலோசனை வழங்கும் பிரத்தியேக நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விசாரணைக்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜிலிங்கம் நன்றி தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இம்மாதம் 3ம் திகதி புதுடில்லியில் தாங்கள் சந்தித்த பொழுது, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன அபிப்பிராய. வாக்கெடுப்பு தமிழீழம் வேண்டுமா என நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமைக்காக ஈழத்தமிழ் மக்கள் நன்றியுணர்வுடன் என்றும் நினைவில்…
அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது: ஆஸி மனிதஉரிமை அணைக்குழு
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்ரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . இலங்கைக்கு அனுப்பபட்டவர்கள் இன்னும் பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுவதாகவும், பணம் கேட்டு இரவு நேரங்களில் தனியாக அழைக்கபட்டு பயமுறுத்தியும் வருகிறதாகவும் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு நாடு…
ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிப்போரின் விபரம் பாதுகாக்கப்படும்!- ஒஸ்கார் பெர்னாண்டஸ் உறுதி
ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழர்களுக்குரிய பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அவருடன் நடத்திய சந்திப்பின்…
அளுத்கம தாக்குதல்! அமைச்சர் பீரிஸ் முஸ்லிம் இராஜதந்திரிகளுக்கு அறிக்கை
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு அரசாங்கம் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் நாடுகள்…
