பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்க வேண்டும்: அமைச்சர் ராஜித சேனாரத்ன
அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலம் நாடு முன்னேற்றமடையும் எனவும் நாட்டை முன்னேற்ற சிறந்த முறை சமஷ்டி ஆட்சி முறை எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற மாகாண மீன்பிடி அமைச்சர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்…
பேச்சுக்கு மத்தியஸ்தம் வழங்கினால் ஒத்துழைப்பு வழங்குவோம்!
தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பா.. உ. தெரிவித்தார் இன்றைய சந்திப்பு தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் தமது…
மலையகத்தில் சிறுவா் உரிமை மீறல்கள் மரணிக்க வேண்டும்
பள்ளி செல்லும் வயதில் பல்வேறு விதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து மரணித்துக்கொண்டிருக்கும் 200 மில்லியனுக்கு மேற்பட்ட அதிகமான சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக அமர்தப்படுவதனால், அச்சிறுவர் உடல், உள மற்றும் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வறுமையிலிருந்து தப்பி உயிர் பிழைக்க அவர்களது பெற்றோரே சிறுவர்களை இவ்வாறு வேலைக்கமர்த்தப்பட காரணமாக உள்ளனர்…
படகில் வந்தவர்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்
அகதித்தஞ்சம் கோரிகளின் படகு ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தற்காலிக இடைக்காலத்தடை விதித்திருந்தது.…
பண்டாரவன்னியன் முதல் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக போராடியவர்கள்: சிவசக்தி…
பண்டாரவன்னியனில் இருந்து பிரபாகரன் வரைக்கும் நாட்டில் இருக்கக்கூடிய அடக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய வரலாறு தான் எமது தமிழர் வரலாறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடக நிகழ்வில் கலந்து கொண்டு…
புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்று அதிகளவு முறைப்பாடுகள்!
காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 3ம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி ஆணைக்குழு கடந்த 2 தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில்…
அகதிகளைத் திருப்பியனுப்ப ஆஸ்திரேலிய நீதிமன்றம் தடை
ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி வந்த இலங்கையர்கள் 153 பேரை அந்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக, தஞ்சம் கோரி வந்த 41 அகதிகளை கடலிலேயே விசாரித்து, நிராகரித்த பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்துள்ள நிலையில் இந்த இடைக்காலத்…
மீண்டும் வெடித்துள்ள வெள்ளைக்கொடி சர்ச்சை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடிச் சம்பவம் மீண்டும் உலக அரங்கில் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள, 13 பேர் கொண்ட ஐ.நா. விசாரணைக் குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தான் இந்த விவகாரம் மீண்டும் ஊடகங்களில் முன்னிலைக்கு…
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்: ஐ.நா கோரிக்கை
இலங்கை, சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் இணை பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ளார். மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை உள்ளக முனைப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள சவால்களை ஐக்கிய…
புலிகளின் தலைவர்களை தப்பிக்க விடாததனாலேயே மேற்குலக நாடுகள், மஹிந்தவை பழிதீர்க்க…
LTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட இயக்கத்தின் முதல்மட்ட தலைவர்களை இறுதி யுத்தத்தின் போது தப்பிச் செல்ல அனுமதி அளிக்காத காரணத்தாலேயே மேற்குலக நாடுகள், மஹிந்த ராஜபக்சவை பழி தீர்க்க முயற்சிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார். கட்டுகஸ்தோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்…
இலங்கை படையதிகாரிகள், அமெரிக்கத் தூதுவர் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்கக்கூடாது!– கோத்தபாய…
தாம் உடனிருக்கும் போது மாத்திரம் அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனை சந்திக்க முடியும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமக்கு கீழ் இயங்கும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமது பிரசன்னமில்லாமல் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க யுஎஸ்எய்ட் நிறுவன தலைவருக்கு…
அகதிகளின் நிலைதான் என்ன? – தமிழ் அமைப்புகள் கவலை
அகதிகளின் உண்மையான நிலையை அறிய அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்காக போராடும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால், இவர்களின் பிரச்சினைக்கு ஏதேனும் உண்மையான நிலைமைகளை அறிய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது. அண்மையில் படகு மூலம் வந்த 153 அகதிகள் தொடர்பான உண்மையான நிலைமைகள் தெரியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால், இவர்களுக்கு…
‘மக்கள் காணியிலிருந்து இராணுவமே வெளியேறு’: கிளி.யில் ஆர்ப்பாட்டம்
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற போதிலும், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற முடியாத வகையில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அவற்றை விட்டு வெளியேற வேண்டும் எனக்கோரி கிளிநொச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. குறிப்பாக, கிளிநொச்சி நகரில்…
ஐ.நா விசாரணைகளில் பங்காளராக முடியாது! ஸ்கைப் மூலமாக சாட்சியங்களை பதியவுள்ளதாக…
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தவறானவை என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதன் விசாரணைகளில் எமக்கு பங்காளராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஸ்கைப் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைப் பதிவுசெய்ய விசாரணைக்குழு தயாராவதாகத்…
பாகிஸ்தான்- இலங்கை உறவு: தீவிர யோசனையில் இந்தியா
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் வெளிநாட்டு சக்திகள் தமது பயங்கரவாத தாக்குதல்களை தென்னிந்தியாவின் மீதும் மேற்கொள்ளக்கூடும் என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து இந்தியா, இலங்கையுடன் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய செய்தி…
தமிழ்நாட்டில் காணாமல் போன இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா சென்றார்களா?
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் அமைப்பு கூறுகிறது. தமிழக முகாம்களில்…
பொதுபல சேனா மீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும்…
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை முழுநாட்டிற்கும் பரப்பி சர்வதேச அளவில் முஸ்லிம்கள் கொண்டு சென்றுவிட்டனர். பொதுபலசேனா மீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும். எமது தரப்பு நியாயங்களை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே செவிமடுத்தனர். வேறு எவரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட…
153 அகதிகள் திருப்பியனுப்பப்பட்ட செய்திக்கு மத்தியில், இலங்கையில் “சமாதான சமூகம்”…
இலங்கை தமிழ் அகதிகள் 153 பேரை மீண்டும் இலங்கையிடம் அவுஸ்திரேலியா நடுக்கடலில் வைத்து கையளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், இலங்கை “சமாதான சமூகம்” என்று அந்த நாட்டின் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் 3 ஏ டபிள்யு என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று வியாழக்கிழமை காலை கருத்துரைத்த…
இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை
இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக…
இராணுவப் பயிற்சிகளை முடித்த தமிழ்ப் பெண்கள்
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்…
அவுஸ்திரேலியா சென்ற 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து நாடுகடத்தல்
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டிருந்த 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இலங்கை கடற்படைக் கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருக்கிறது, மோசமான காலநிலை…
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்வாறான அழுத்தங்களையும் பிரயோகிக்காது. இலங்கையானது இறைமையுள்ள ஒருமைப்பாட்டைக் கொண்ட நாடு என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்…
மோடியுடன் பேச்சு நடத்தி சர்வதேச விசாரணையை வலியுறுத்த தமிழ் கூட்டமைப்பு…
மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தும் அரசாங்க பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மோடியுடன் ஐநா விசாரணைக்குழுவை தடுப்பதில் அரசாங்கத்திற்கு துணையாக செயற்படுவோம் எனவும் தெரிவித்தது. மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்…
