அகதிகள் போன்று ஐரோப்பாவில் நுழைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: உண்மை நிலை என்ன?

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், அகதிகள் போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவுக்குள்…

கற்பழித்தால் ஆண்மை அகற்றம் செய்யப்படும்; அமெரிக்காவில் நிறைவேறிய மசோதா

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குட்டித் தீவு கயாம். இங்கு பெண்கள் கற்பழிக்கப்படுவது மிக அதிக அளவில் உள்ளது. அதாவது சராசரியாக 1 லட்சம் பெண்களில் 64 பேர் கற்பழிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் கவலை அடைந்த கயாம் அரசு அண்மையில் பரபரப்பான மசோதா ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியது. கற்பழிப்பு…

ஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: சிரிய மக்களை எச்சரித்த ஐஎஸ்

ஐரோப்பாவுக்கு அகதிகளாக தப்பியோடுவது பெரிய பாவம் என சிரிய மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். It is 'grave…

அகதிகள் பிரச்சினை: ஐரோப்பிய ஆணையத் தலைவர் கவலை

அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மனிதாபிமானம், கண்ணியம் மற்றும் நேர்மையுடன் அணுக வேண்டும் என ஐரோப்பிய மக்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஜான் க்ளாட் யங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான நிலையில் இல்லை என்றாலும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் நிலவும் சூழல்கள் காரணமாக, ஐரோப்பா நம்பிக்கையின்…

அடுத்த 10 நாள்களில் 42,000 அகதிகள்: ஹங்கேரிக்கு ஐ.நா. எச்சரிக்கை

அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி கூடுதலாக 42,000 அகதிகள் வருவார்கள் என ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே அங்குள்ள அகதிகளுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படாததால் அவர்கள் தவித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதலாக வரும் இந்த அகதிகளுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய தயாராக…

”தற்கொலை வேண்டாமே; வாழ்ந்து காட்டுங்களேன்” – இன்று உலக தற்கொலை…

உலகம் முழுவதும் இன்று உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனமான WHO, தற்கொலைகளைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. "அவரவர் பக்கத்தில் முன்னதாகவே மனரீதியான பாதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைக் கையாள தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்,…

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 127 குழந்தைகள் கடத்தல்

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 127 குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டுள்ள குழந்தைகளின் வயது 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் கடத்தப்பட்ட இந்த குழந்தைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சி அளிக்க கூடிய சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -http://www.dinamani.com

பாம்பு கடிக்காம பாத்துக்கோங்க… பாம்புக்கடி விஷமுறிவு மருந்து உற்பத்தி நிறுத்தம்

பாம்புக் கடிகளுக்கு வழங்கப்படும் விஷமுறிவு மருந்தை தயாரித்து வந்த ஒரு நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டதால், பாம்புக் கடி விஷ முறிவு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், பாம்புப் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…

குடியேறிகளால் ஜெர்மனி பெரும் மாற்றமடையும்: அங்கேலா மெர்க்கெல்

ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர்…

அரபு நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

 பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக…

உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11…

சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில்…

நாசிகள் இருந்த தேசம்: எப்படி இப்படி மாறியது என்பது பெரும்…

ஒரு காலத்தில் நாசிகள் என்று சொல்லப்படும் , மிகவும் கொடூரமான இனவெறி பிடித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் தான் ஜேர்மனி. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நாசிகள் கொடி கட்டிப் பறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை நாசிகள் கொலை செய்தார்கள். அது நட பல வருடங்கள் ஆன பின்னர் கூட, ஜேர்மனியில்…

வெடி விபத்து 50 சவூதி கூட்டுப் படை வீரர்கள் பலி

யேமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள். யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வரும் சவூதி தலைமையிலான கூட்டுப் படையைச் சேர்ந்த 45 ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தினரும், 5 பஹ்ரைன் ராணுவத்தினரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மதுவால் மகனை மறந்த பெண்: தாயாக மாறி பால் கொடுத்த…

சிலி நாட்டில் சாலையோரமாக பசியுடன் கதறி அழுத 2 வயது குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று பாலூட்டி உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வறுமையில் சிக்கி தவித்த பெற்றோர்கள் தங்களுடைய 2 வயது ஆண் குழந்தையை வாகனங்கள் பழுது…

அகதிகள் வசிப்பதற்காக தனி தீவையே விலைக்கு வாங்க முடிவு செய்துள்ள…

எகிப்து நாட்டை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவர் அகதிகள் வசிப்பதற்காக தனி தீவை வாங்க முடிவு செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்தவர் நாகுப் சவிரிஸ். பிரபல கோடிஸ்வரரான இவர் ஓராஸ்காம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாக உள்ளார். மேலும் இவருக்கு சொந்தமாக எகிப்தில் எல் கவுனா…

ஆஸ்திரியாவை நோக்கி நீண்டதூர நடைபயணத்தை தொடங்கிய அகதிகள்: எல்லையில் ராணுவத்தை…

ரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்வதற்காக ஹங்கேரியின் புத்தபிஸ்ட்…

இராணுவ பலத்தை முழு உலகுக்கே காட்டிய சீனாவின் வெற்றி அணி…

இரண்டாம் உலக போர் வெற்றி தொடர்பான அணிவகுப்புகளை சீனா நடத்தியுள்ளது. இரண்டாம் மகா யுத்தத்தின் போது ஜப்பானை தோற்கடித்ததை முன்னிட்டு, இந்த அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது சீனாவின் 80 சதவீதமான இராணுவ பலம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அதிக அளவான இராணுவ…

சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்

சக கைதிகளை கொன்று அவர்கள்து மாமிசங்களை சாப்பிடும் கொடுமை ருவாண்டாவில் உள்ள சிறையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் உள்ள கிடாராமா சிறையில் 600 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஆனால், இங்கு 6 முதல் 7 ஆயிரம் கைதிகள்…

கருப்புப் பண விவகாரம்: சட்டத் திருத்தம் செய்கிறது சுவிஸ் அரசு

வரி தொடர்பான குற்ற வழக்குகளில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரவுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மசோதாவுக்கு சுவிஸ் நாட்டு அரசின் அதிகாரமிக்க திட்டக்…

ரகசிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ரகசிய தாக்குதலில் இறங்கியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆள் இல்லா விமானம் மூலமான ரகசிய தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பும்…

பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: இருவருக்கு பிடி ஆணை

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு பெண் உள்பட மேலும் இருவருக்கு அந்த நாட்டு போலீஸார் திங்கள்கிழமை பிடிஆணை பிறப்பித்தனர். மேலும், அந்த இருவரின் வரைபடங்களையும் போலீஸார் வெளியிட்டனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிராவுத் தாவோர்ன்சிறி…

காரின் என்ஜினில் மறைந்திருந்த அகதி: ஐரோப்பா செல்வதற்காக உயிரையும் பணயம்…

ஜேர்மனி செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஹங்கேரி நாட்டின் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உள்நாட்டு போர் காரணமாக அப்பிரிக்கா மற்றும் சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்களில் பலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கள்ளத்தனமாக செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்…

நீருக்குள் தத்தளிக்கும் ஆட்டை துரத்தி சாகடிக்கும் திருவிழா: காட்டுமிராண்டித்தனமென குமுறும்…

நேபாளத்தில் உள்ள Khokana கிராமத்தில் இளைஞர்கள் கூட்டம் தண்ணீரில் வீசப்பட்ட ஆட்டை துரத்தி சாகடிப்பதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். Khokana கிராம மக்கள் புனிதமாக கருதப்படும் Deu எனும் குளத்தில் உயிருடன் இருக்கும் இளம்வயது ஆட்டுக்குட்டியை வீசி, தண்ணீரில் அது தத்தளிக்கும்போது இளைஞர்கள் பாய்ந்து சென்று கைகளாலேயே ஆட்டுக்குட்டியை…