சிக்கன நடவடிக்கை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ், சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடனுதவி பெறுவதற்கு ஏதுவான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. கிரீஸுக்குக் கடன் வழங்குவதற்காக, சர்வதேச நிதி அமைப்புகள் விதிக்கும் சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த சீர்திருத்தத் திட்டத்தில்…

ஐ.நா. போர் நிறுத்த அறிவிப்பு மீறல் :யேமனில் மீண்டும் சவூதி…

யேமனில் அமைதி திரும்புவதற்கு வழிவகுக்கும் ஐ.நா.வின் போர் நிறுத்த அறிவிப்பு மீறப்பட்டது. சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் யேமனின் தயீஸ் நகர் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் குண்டு வீச்சு நிகழ்த்தின. புனித ரமலான் மாத இறுதி வரை, யேமனில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி,…

வட கொரிய ஜனாதிபதியின் அராஜகம்: 70 அரசு அதிகாரிகளுக்கு மரணதண்டனை

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதுவரை 70 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 இறுதியில் தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு வடகொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் பொறுப்பேற்றார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில்…

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பம்

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். இங்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் விரைவில் தனியாக தமிழ்த்துறை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த திட்டத்துக்கான…

குழப்ப நிலையை விரைந்து தீர்க்குமாறு தென் சூடானுக்கு வெள்ளை மாளிகை…

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோகரான சுசன் ரைஸ் இன்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து மேற்கொண்ட ஊடகப் பேட்டியின் போது, தென் சூடான் அங்கு நிகழ்ந்து வரும் குழப்பநிலை மற்றும் வன்முறையின் உச்சக் கட்டத்தை உடனே தீர்ப்பதற்கு முன் வர வேண்டும் என அறிவுறுத்தல்…

சிரியாவிலிருந்து 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: ஐ.நா.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியதாக ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த 25 ஆண்டுகளில், சண்டை காரணமாக இவ்வளவு அதிக அளவில் வேறு எங்கும் மக்கள் புலம் பெயர்ந்ததில்லை என அந்த அமைப்பு கூறியது.…

தொடர் மரணம் மற்றும் விபத்து எதிரொலி: செல்பிக்கு கட்டுப்பாடு விதித்த…

ஆபத்தான செல்பிக்களை எடுக்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு  ரஷ்ய பொலிசார் அறிவுரை வழங்கியுள்ளனர். ரஷ்ய நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் செல்பி எடுக்கும் போது 10க்கும் மேற்பட்ட மரணங்களும் 100க்கு மேற்பட்ட விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் மக்களிடம் பாதுகாப்பான வகையில் செல்பி எடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.…

டுவிட்டரில் செக்ஸ் அடிமைகளை தேடும் பெண் ஐ.எஸ் தீவிரவாதிகள்: அதிர்ச்சி…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஆண்களைப் போலவே, பெண்கள் படையும் உள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பெண்களுக்கு ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை…

தஞ்சம் கோருபவர்களுக்காக நிதியை வீணாக்க கூடாது’: போராட்டத்தில் குதித்த ஜேர்மனியர்கள்

ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Freital என்ற நகரில் நேற்று கூடிய அகதிகளுக்கு எதிரான அமைப்பினர், ஜேர்மனி குடிமக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர்களுக்கு தஞ்சம்…

பள்ளி செல்லும் சிறுவர்களை சிங்கக்குட்டிகளாக மாற்றும் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி…

ஐ.எஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர். ஈராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 111 பள்ளிச் சிறார்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இந்த சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். சிறுவர்களை தங்கள் முகாம் களுக்கு அழைத்துச்…

கோழிகள், மீன்கள் மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியலாம்: நூதன முயற்சியில்…

நிலநடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு உதவியாக கோழி மற்றும் மீன்கள் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அரசாங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நில நடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு கோழிகள், மீன்கள் மற்றும் தேரைகளை ஆய்வில் ஈடுப்படுத்தி வருகின்றனர். நில அதிர்வுகளை ஆராயும் அதிகாரிகள் Nanjing…

பொது மக்கள் முன்னிலையில் 1400 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய…

வட கொரியா பொது மக்கள் முன்னிலையில் கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 1400 நபர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் Korean Institute for National Unification…

ஆப்கானிஸ்தானில் பள்ளி சென்றதற்காக 3 மாணவிகள் முகத்தில் ஆசிட் வீச்சு:…

காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு படிக்க சென்ற காரணத்திற்காக 3 சிறுமிகள் மீது 2 பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இருக்கும் பெரிய பள்ளி ஒன்றில் 16 முதல் 18 வயது வரையிலான 3 சிறுமிகள் படித்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று…

சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்த கிரீஸ் மக்கள்: ஐரோப்பிய நாடுகள்…

கிரீசில் நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் எதிராகவே வாக்களித்துள்ளனர். பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் நாடு தவித்து வருகிறது. இது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுத்தும் நிலை மாறவில்லை. மேலும் கடன்…

ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஒபாமாவுக்கு சுதந்திர…

சமரசம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,…

சிரியா ராணுவத்தினரை படுகொலை செய்ய சிறுவர்களை கட்டாயப்படுத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்

சிரியா ராணுவத்தினரை சிறுவர்கள் படுகொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு ஐஎஸ் தீவிரவாதிகள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். சிரியாவில் உள்ள புராதான நகரான பல்மைராவை கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐஎஸ் தீவிரவாதிகள் கைபற்றினர். இதையடுத்து இந்நகரில் உள்ள புராதான சின்னங்களை அழிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அவர்கள்…

நைஜீரியாவில் பயங்கரம்: சிறுவர்கள், பெண்கள் உள்பட 150 பேரை சரமாரியாக…

நைஜீரியா நாட்டில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உள்பட சுமார் 150 நபர்களை போகோஹாரம் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் Borno மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் ரம்ஜான் நோன்பு முடிந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மசூதிகளுக்குள் திடீரென…

”எனக்கு தஞ்சம் அளியுங்கள்”: பிரான்ஸ் அதிபருக்கு விக்கி லீக்ஸ் நிறுவனர்…

அமெரிக்காவின் ரகசிய தகவல்களை வெளியிட்டது உள்ளிட்ட பல குற்றங்களால் அமெரிக்க அரசாங்கத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள விக்கி லீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அசான்ஜே பிரான்ஸ் அரசாங்கத்திடம் தஞ்சம் கோரி கடிதம் எழுதியுள்ளார். ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளை அமெரிக்க உளவு நிறுவனம் ரகசியமாக கண்காணித்து வருவதுடன், ஐரோப்பிய தலைவர்களின்…

பிரான்ஸ் -லண்டன் எல்லையில் பெரும் கலவரம்: லாரியில் ஏற அகதிகள்…

பிரான்சில் உள்ள "கலைஸ்" என்னும் இடத்தில் இருந்தே , பிரித்தானியாவுக்கு செல்லும் கப்பல்கள் நிலைகொண்டுள்ளது. அங்கிருந்து தான் பிரித்தானியாவுக்கான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கிறது. குறித்த இந்த இடத்தில் பல நூறுக்கணக்கான அகதிகள் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆபிரிக்கர்கள். அவர்கள் எப்படியாவது பிரித்தானியாவுக்குள் வந்துவிடவேண்டும் என்று , வெறியோடு…

முஸ்லிம் பெண்களின் குவளையில் தண்ணீர் அருந்திய கிறிஸ்த்துவ பெண்: மரண…

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண்மணி ஒருவரின் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால், அவரது கணவர் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஆசிக் மசிஹ், ஆசியா பீபி என்ற தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கிறிஸ்த்துவ…

துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல்…

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது. சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் உருவாகியுள்ளது, தங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் இராணுவம் என கூறிக்கொள்ளும் இவர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

கால்களால் சரித்திரம் படைத்த சாதனைப்பெண்

இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால், அவருக்கு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை என்பது அதிகமாகவே இருந்தது. சிறுவயதில் இருந்தே பியானோ,…

கொடூரமாக கொலை செய்துவிட்டு காரணத்தை துண்டு சீட்டில் எழுதி கழுத்தில்…

தனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்க போராடி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் போராட்டம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் கொடூர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-மையடின் நகரத்தில் கடந்த 29 ஆம் திகதி…