பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிரியா மீது ராணுவ நடவடிக்கை: ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா
சிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதியில் ரசாயனக் குண்டுகள்…
புத்தரின் அன்ன பாத்திரத்தை ஆப்கானில் இருந்து பெறக் கோரிக்கை
கௌதம புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறப்படும் ஒரு பாத்திரத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்று வரவேண்டும் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகுவன்ஷ பிரசாத் சிங் என்பவர் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார். புத்தபெருமான் தான் பரிநிர்வாணம் (ஞானம்) அடைவதற்கு முன்னதாக இந்தப் பாத்திரத்தை பயன்படுத்தியதாக…
சிரியா விவகாரம்:அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
மாஸ்கோ: சிரியாவில் உள்நாட்டு போர் கடந்த 3 ஆண்டாக நடந்து வருகிறது. இது தற்போது தீவிரமடைந்துள்ளது.சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளாகி உள்ளது. சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா…
மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு?
உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான். கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி…
இரசாயன குண்டுத் தாக்குதல்! சிரியாவை தாக்க தயார் நிலையில் பிரான்ஸ்
சிரியாவில் போர் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டை தாக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு படைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…
தென்னாபிரிக்காவில் வறிய தமிழ் குடும்பத்தில் பிறந்த நவநீதம்பிள்ளை பற்றிய சிறு…
இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீம்பிள்ளை இன்று இலங்கையை சென்றடைந்தார். நவநீதம்பிள்ளை தனது இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிடப்போகும் அறிக்கை…
பரிசு மழையில் நனையும் குட்டி இளவரசர்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு கடந்த ஜூலை மாதம் 22-ம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேட் கர்ப்பமாக இருந்த காலத்தில் இருந்தே உலக நாடுகளில் இருந்து ஏராளமான பரிசுப் பொருட்கள் குவியத்தொடங்கின. குழந்தைப் பிறந்த பிறகும் பரிசுப்…
சிரியாவை நோக்கி விரைந்தது அமெரிக்கக் கடற்படை
அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய சிரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் அமெரிக்கக் கடற்படை, அந்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தேசியப் பாதுகாப்புக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. போராட்டம்…
இரசாயன தாக்குதல்: கண்காணிப்பாளர்களை அனுப்ப சிரியா மீது அழுத்தம்
ஆயுதக் களைவு தொடர்பான ஐநாவின் தலைமை அதிகாரியான ஏஞ்சலா கேன் டமாஸ்கஸ் சென்றிறங்கியுள்ளார். சிரியாவில் இசராயன ஆயுதத் தாக்குதல் நடத்தபட்டதாகத் தெரிவிக்கப்படும் இடங்களுக்குச் செல்ல சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வேண்டும் என அந்நாட்டின் அரசாங்கத்திடம் வலியுறுத்துவது இவரது பயணத்தின் நோக்கம். கூட்டா என்ற இடத்தில் சிரியாவின் அரச படைகள்…
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் பலர் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக 18 மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரேவொன் மார்ட்டின் என்ற இளைஞனின் தாய் கூறுகிறார். புளோரிடா மாகாணத்தில் உள்ளூர் கண்காணிப்பு தொண்டர் அதிகாரி ஒருவரால் நிராயுதபாணியாக இருந்த ட்ரேவொன் மார்ட்டின் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் குறித்த தொண்டர் அதிகாரி குற்றமற்றவர்…
ரசாயன ஆயுதத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்: பான் கி-மூன்
சிரியாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார். சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய ரசாயன தாக்குதலில் நூற்றுக் கணக்காணவர்கள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து காலம் தாழ்த்தாமல் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்…
விண்வெளியில் நடந்த திகில் சம்பவம்! வீரரின் திக் திக் நிமிடங்கள்…
சர்வதேச விண்வெளி மையத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட போது நிகழ்ந்த திகில் சம்பவம் குறித்து இத்தாலி வீரர் லூகா விவரித்துள்ளார். இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பர்மிட்டானோ(வயது 36). இவர் தனது 2வது விண்நடையை தொடங்கிய உடனேயே, 2வது விநாடியே தான் எந்தத் திசையில் போகிறோம் என்பது அவருக்குப்…
திருடனின் தலையை பந்தாடிய பொலிசார்! வீடியோ வெளியானதால் பரபரப்பு!
சுவிட்சர்லாந்தில் திருடன் ஒருவனை பொலிசார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள கடிகார கடை ஒன்றில் ஜுலை 3ம் திகதி இரண்டு ரோமானியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவரை பொலிசார் மிகவும் கொடூரமான முறையில் அடித்துள்ளனர், மேலும் அவனது கைகளை கட்டிவிட்டு தரையில் தள்ளி…
எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் மனிதர்: இது வரமா? சாபமா?
மனித உடலில் மூளை தான் எல்லா இயக்கங்களுக்கும், உணர்வுகளுக்கும் காரணமாக உள்ளது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மனிதனின் செயல்பாட்டிலும் அதன் விளைவுகள் தெரியும். சில சமயங்களில் இவ்வாறான பாதிப்புகள் விபரீதமான மாற்றங்களை ஏற்படுத்திவிடும். இப்படியான ஒரு மாற்றத்திற்கு ஆளாகி சிக்கித் தவிக்கிறார் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மால்கம்…
பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான 100 டன் மூலப்பொருட்கள் மீட்பு!
வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான சுமார் 100 டன் மூலப்பொருட்கள் பாகிஸ்தான் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தொழிற்சாலையொன்றில் குண்டுகள் தயாரிப்பதற்கான இரசாயன பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அந்நாட்டு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை…
சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 1,300பேர் பலி?
டமாஸ்கஸ் : சிரியா நாட்டில், கிளர்ச்சியாளர்கள் மீது, ராணுவம், ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதில், 1,300பேர் பலியாகியுள்ளனர். சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு…
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவர் கைது
கெய்ரோ: எகிப்து நாட்டில், சமீபத்திய கலவரங்களுக்குக் காரணமான, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக், 2011ம் ஆண்டு, ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம், பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பைச் சேர்ந்த முகமது முர்சி,…
ஐரோப்பிய ரயில் சேவைகளை தகர்க்க அல்-கைடா சதி
ஐரோப்பாவின் அதிவிரைவு ரயில் நிலையங்களை தகர்க்க அல்-கைடா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி, அல்-கைடா அமைப்பின் முக்கிய புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை கேட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலில் மூலம் ஐரோப்பிய ரயில் சேவைகள் முழுவதையும் தகர்ப்பது குறித்து, பயங்கரவாதிகள் சதி செய்தது…
பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய உதவினார்! முஷாரப் மீது குற்றச்சாட்டு…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடத்திய முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சிறை வைத்தது உட்பட பல்வேறு சதி வழக்குகள் உள்ளன. இதனையடுத்து நெருக்கடி முற்றவே இவர்…
நியூசிலாந்தில் களைகட்டும் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள்
நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில் 14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாட்டின் 1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு…
டயானாவை கொன்றது பிரிட்டன் ராணுவம்? ஸ்காட்ர்லாந்து யார்டு விசாரணை
இளவரசி டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்று வெளியான புதிய தகவல் குறித்து லண்டனின் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 1997 ஆகஸ்ட் 31-ம் தேதி டயானா தனது நண்பர் டோடி அல்-ஃபயதுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த…
இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்ய எகிப்து அரசு ஆலோசனை
எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்வது குறித்து ராணுவத்தின் உதவியுடன் அமைந்துள்ள அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான், பதவி நீக்கப்பட்ட அதிபர் முகமது மோர்ஸி மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்று கடுமையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அக்கட்சியை தடை செய்ய, சட்டப்பூர்வமாக…
கொங்கோ: ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்ட சிறார் மீட்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த…