தமிழீழம் மலரும்வரை………..(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

கண்இமைக்கும் நேரத்தில் வெடிகுண்டுவெடிக்கலாம்

இராணுவத்தின் துப்பாக்கிகளின் இரவையும் சீறிபாயலாம்

எம்மினத்தைகொல்வதற்கு இருந்தும் அஞ்சிடமாட்டோம்

தமிழீழம்மலரும் வரை……

 பள்ளிப்பிள்ளைகள் வீடுதிரும்பாமல் போகலாம்

இளம்பெண்கள் இராணுவத்தின் காமபசிக்கு இரையாகலாம்

கணவனைகாணாமல் மனைவியும் பிள்ளையைகாணாமல்

பெத்தவங்களும் அண்ணனைகாணாமல் தங்கைகளும்பதறலாம்

உறவுகளை தேடிஅலையலாம்

இருந்தும் பின்வாங்கமாட்டோம்

தமிழீழம்மலரும் வரை……

 குண்டடிப்பட்டவர்களுக்கு சிகிச்சைநடக்கலாம்

பள்ளியில்பாடங்கள் ஒப்புவிக்கப்படலாம்

ஆலயமணி ஓசையும்கேட்கலாம்

கூடவே வெடிசத்தமும் துப்பாக்கிசத்தமும் கேட்கலாம்

இருந்தும் எங்களின்விடுதலை

தாகம்ஓயாது தமிழீழம்மலரும் வரை…..

 பிணங்களுக்குமுன் கதறிஅழலாம்

உறவுகளைதேடி அங்கும்இங்கும் அலையாலாம்

பசிஅடங்காத ஓநாய்கள் மீண்டும்வெடிகுண்டை தூவலாம்

மிச்சமீதியும்செத்து மடிவதற்கு

இருந்தும் திரும்பிஅடிப்போம் தமிழீழம்மலரும்வரை….

 சொந்தநாட்டை விட்டு அகதிகளாய்அங்காங்கே வாழலாம்

இருந்தும் தமிழீழவிடுதலை வேட்கை எங்களை விட்டுநீங்காது

தமிழீழம்மலரும் வரை………

 வீரபுலிகளை தமிழினத்தின்விடுதலை புலிகளை

அழித்துவிட்டதாய் ஆணவத்தில் மண்டியிட்டுமுத்தமிட்டாய்

மண்டியிடவைத்தோம் அரக்கன்இராஜபக்சேவை

வடமாகாண தேர்தல்களத்தில்….

 தமிழீழம்மலர இதுதொடக்கம் என்போம்

இருந்தும் தொடர்ந்துபோரடுவோம்

தமிழீழம்மலரும் வரை……

 விடுதலைபுலிகளை அசத்திடதான்முடியுமா

எம்மினத்தலைவர் வீரத்தமிழன் பிரபாகரனைதான் அழித்திடமுடியுமா

பிறக்கும்ஒவ்வொரு குழந்தையும் இங்கு விடுதலைப்புலிதான்

தீபொறியாய் சுட்டெறிப்போம்சூரியனையும் அடக்கிவைப்போம்

இருந்தும் பிறக்கும்குழந்தையின் கையிலும்துப்பாக்கி கொடுப்போம்

தமிழீழம்மலரும் வரை…..

 தமிழீழம்என்பது கனவல்ல இலட்சியம் அதை அடைந்தே தீருவோம்

அரக்கர்களை கொன்றுகுவித்து போரட்டம் ஓய்ந்துவிடவில்லை

இருந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்

தமிழீழம்மலரும் வரை…..

– சிவாலெனின் –சுங்கை,பேராக்

TAGS: