இயற்கை

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

ஆகாயம் என்பது வெற்றிடம் 
orange-63863_640அதில் அடக்கம் எண்ணிலடங்கா 
அண்டங்கள்,விண்மீன்கள்,கோள்கள் 
இவைகள் கற்பனைக்கெட்டா 
மாபெரும் இயந்திரங்கள் இவை 
ஒவ்வொன்றிற்கும்உருவம் உண்டு 
அங்க லட்சணங்கள் உண்டு 
பௌதீக, ரசாயன அடக்கப்பொருட்கள் உண்டு 
இயங்கும் சக்தி உண்டு 
மனிதரைப்போல் பிறப்பும் இறப்பும் உண்டு 
அப்படியிருக்க இந்த ஆகாய வெற்றிடத்தில் 
இவை வந்தன எவ்வாறு ? 

ஆறறிவு மனிதர் நாமும் ஏதேதோ 
உருவாக்குகின்றோம் ,இயக்குகின்றோம் 
பயன்பெறுகின்றோம் ; இந்த படைப்புகளை 
நம் படைப்புகள் என்று சொல்லி மிக்க 
பெருமிதமும் அடைகின்றோம் தலைகனமும் 
கொள்கின்றோம்; தவறேதும் இல்லை ; 
ஆனால் இயற்கையில் நாம் காணும் 
படைப்புகளை படைத்த சக்தி ஒன்று 
இருக்கிறது என்றால் இல்லை இல்லை 
அவை எல்லாம் தாமாக உருவாகுபவை 
என்கிறார்கள் பகுத்தறிவு வாதிகள் 

ஐயா இந்த ‘பகுத்தறிவு’கூட இவர்களுக்கு 
தானாக வந்தமைந்ததா ? தெரியலையே! 
ஒரு கணினியை எடுத்துக்கொள்வோம் 
இது நாம் படைத்ததுதான் அதை படைக்கும் முன் 
அது செய்வது எப்படி என்று ஒரு ‘வரைபடம்’ 
உண்டாக்கி அதில் இந்த கணினி இயங்குவது 
எவ்வாறு என்று தீர்மானிக்கின்றோம் –

அதுபோலதான் 
இயற்கையில் ஒவ்வொரு படைப்பும் 
ஒற்றறிவு தாவரம் முதல் மனிதன் வரை 
மாமலைகள்,பெரும் கடல்கள், நதிகள் 
அண்டங்கள்,விண்மீன்கள்,கோள்கள் 
ஆதி இவை எல்லாம் சிருட்டிக்க பட்டவை 
சிருட்டிகர்த்தா யாரோ ஒருவர் உண்டு 
அவர்தான் இறைவன் !

-தமிழ்பித்தன்-வாசு

TAGS: