பிரபாகரன் நேற்று இரவு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாரா குமார் ராம நாயுடு உடனான "மோதலுக்கு" பின்னர் கைது செய்யப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நேற்று இரவு 10 மணியளவில் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான சிறிது நேரத்திலேயே பேஸ்புக் வழியாக ஒரு அறிக்கையை நேரலையில் வெளியிட்ட பிரபாகரன்,…

எதிர்க்கட்சி தரப்பில் அமர்வார் என்று டாக்டர் மகாதீர் உறுதிப்படுத்தினார்

மே 18 அன்று நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கும் போது டாக்டர் மகாதீர் முகமது எதிர்க்கட்சியில் அமர்ந்து வரலாறு படைப்பார் என்று நம்பப்படுகிறது. தி ஸ்டாருக்கு ஒரு அறிக்கையில் இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தரப்பில் அமரும் இரண்டாம் முன்னாள் பிரதமராக டாக்டர் மகாதீர் இருப்பார். அவ்வாறு செய்த முதல்…

அமைச்சருடனான ‘மோதலுக்கு’ பின்னர், பி பிரபாகரன் போலீசாரால் வெளியேற்றப்பட்டார்

தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) உட்பட்ட கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ முர்னி குடியுருப்பு பகுதியில் இருந்து, பத்து தொகுதி எம்.பி. பி பிரபாகரன் போலீசாரால் வெளியேற்றப்பட்டார். பிரபாகரன் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பி.கே.ஆர் பிரதிநிதி மலேசியாகினியிடம் தெரிவித்தார். மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பிரபகரன்,…

கோவிட்-19: 36 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லை – மலேசியா…

மலேசியாவில் இன்று 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து இது மிகக் குறைவான பதிவாகும். இது மொத்த தொற்றுநோய்களை 5,425 ஆகக் கொண்டுவருவதாக சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.…

மத்திய மலாக்கா கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்பின் அடிப்படையில் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட நாட்டின் சமீபத்திய பகுதி மத்திய மலாக்கா ஆகும். இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 17 ஆகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று, மத்திய மலாக்காவில் 32 செயலில் உள்ள பாதிப்புகள் இருந்தன.…

ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நிலவரம் என்ன?

ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நிலவரம் என்ன? ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, அந்நாட்டின் சிட்னி நகரில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அந்நகரில் உள்ள மூன்று கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த கடற்கரைகளில் நீர்ச்சறுக்கு விளையாடுபவர்களையும், உடற்பயிற்சி செய்பவர்களையும் பார்க்க முடிகிறது. அந்நாட்டின் மூன்று பெரிய…

அமெரிக்கா: பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது

உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,65,000ஐ தாண்டியுள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது. இது உலக அளவில்…

ஆர்.டி.எம். செய்தி தொகுப்பாளர் பாரித் இஸ்மெத் எமிர் இன்று காலமானார்

பிரபல மலேசிய வானொலி தொலைக்காட்சி (ஆர்.டி.எம்) செய்தி தொகுப்பாளர் பாரித் இஸ்மெத் எமிர் சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் இன்று காலை 11.10 மணியளவில் காலமானார். ஏழு பிள்ளகளுக்கு தந்தையான 66 வயது பாரித் இஸ்மெத் எமிர், அரசு நடத்தும் பொது ஒளிபரப்பு நிலையத்தில் மூத்த…

கோலாலம்பூர் மொத்தவிற்பனை சந்தை இப்போது பி.கே.பி.டி.-யின் கீழ் உள்ளது

கோலாலம்பூர் மொத்தவிற்பனை சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் தீவிர நடமாட்டுக் கட்டுப்பாடு (பி.கே.பி.டி) உத்தரவின் கீழ் வைக்கப்படும் சமீபத்திய இடமாக உள்ளது. விவரங்கள் இன்னும் தெளிவற்றதாக இருந்தாலும், மலேசியாகினி தளத்தைப் பார்வையிட்டபோது, அங்கு மலேசிய காவல்துறையினர் மற்றும் மலேசிய ஆயுதப் படைகள் அவ்விடத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தியுள்ளது…

CAP: கோவிட்-19 சோதனைக் கட்டணத்தை செலுத்த பெர்கேசோ நிதியை பயன்படுத்துவதா?

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் பணியாற்ற வேண்டிய அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் கோவிட்-19 பிணிப்பாய்வுக் கட்டணத்தை சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கேசோ (Perkeso) ஏற்கும் என்பது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) அதிர்ச்சியடைந்துள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பணியாற்ற அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான கோவிட்-19 கட்டாய பிணிப்பாய்வு…

MCO மீறல் தொடர்பாக திரங்கானு மந்திரி புசார் வாக்குமூலம்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திரங்கானு மந்திரி புசார் அகமட் சம்சூரி மொக்தார், திரங்கானு காவல் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். சம்சூரி நேற்று மாலை 4 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டது. சம்சூரி, வெள்ளிக்கிழமை அன்று (ஏப்ரல் 17), திரங்கானு…

முகநூலில் ரமலான் பஜார், ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் இணைகிறார்கள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து இவ்வருடம் நாடு முழுவதும் ரமலான் பஜார் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் தங்களின் வணிகத்தை தொடர அரசாங்கம் மாற்று வழி முயற்சிகளை வழங்கும் என்று சில வர்த்தகர்கள் நம்புகையில், சில வர்த்தகர்கள் சமூக ஊடகத்தில் தங்களின் பஜார் தளங்களைத் திறந்துள்ளனர். நாடு முழுவதும்…

இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு…

சங்கா சின்னையா | இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு ஆசிரியர்களுக்கான புதிய சவால்? இதுவரை தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் யுபிஎசார் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்பட்டு வந்தனர். அதிலும் அதிக ‘ஏ’க்களைப் பெறும் மாணாக்கர்களே போற்றப்படும் நிலை இருந்தது. குறிப்பாக 8 ‘ஏ’க்கள்…

MCO குற்றவாளிகளுக்கு 11 தற்காலிக சிறைச்சாலைகள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றவாளிகளைத் தடுத்து வைக்க உள்துறை அமைச்சு 11 தற்காலிக சிறைச்சாலைகளை அமைத்துள்ளது என்று பாதுக்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அவை ஏப்ரல் 23 முதல் தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். "நான் சமீபத்தில் கூறியது போல், நடமாட்டக் கட்டுப்பாடு…

சீனாவின் வெற்றி தோல்விகளைப் பற்றி அறிய விரும்புகிறோம் என்கிறார் நூர்…

நேற்று சீனாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்று மலேசியாவை அடைந்தது. வெற்றியோ தோல்வியோ, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், அந்நாடு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அக்குழுவின் மூலம் சுகாதார அமைச்சினால் அறிய முடியும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். பாதிப்பை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த இது…

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 43 மாணவர்கள் இந்தோனேசியாவிலிருந்து திரும்பியுள்ளனர்

ஏப்ரல் 16 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ) அனைத்துலக நுழைவாயிலில் புதிய கோவிட்-19 கிளஸ்டரை சுகாதார அமைச்சு வெற்றிகரமாக கண்டறிந்தது. இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய மலேசிய மாணவர்கள் இந்த கிளஸ்டரில் சம்பந்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு ஊடக மாநாட்டில்…

கோவிட்-19: 59.3 சதவீதம் குணமடைந்துள்ளனர், 84 புதிய பாதிப்புகள், 1…

இந்த வாரம் நான்காவது முறையாக, மலேசியாவில் கோவிட்-19 தினசரி பாதிப்பு, 100க்கும் கீழே பதிவாகியுள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 84 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றுள்ளார். இது மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 பாதிப்புகளின்…

MCO – இன் போது சொந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கான சமூக…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கோவிட்-19 பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூகம் தனது சொந்த பகுதியைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் வரவேற்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இந்த முயற்சிகளை மேற்கொள்ள நாடு தழுவிய சமூகங்கள் ஊக்குவிக்கப்படுகையில், இந்த முயற்சிகளைச் செயல்படுத்துவதில்…

நாடு திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தியதன் மூலம் கிளஸ்டர் தவிர்க்கப்பட்டதாக அரசு…

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இன்று பாராட்டினார். அவர்களுல் 17 நேர்மறையான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 17 குடிமக்களும் வீட்டிற்குச் சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கிருமியை பரப்புவதிலிருந்து தடுக்கப்பட்டதால் ஒரு புதிய கிளஸ்டர் தவிர்க்கப்பட்டது…

செயலில் உள்ள பாதிப்புகளின் அடிப்படையில் 16 சிவப்பு மண்டலங்கள் உள்ளன

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை மாவட்டங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. செயலில் உள்ள பாதிப்புகளால் வகைப்படுத்தப்படும் போது தற்போது 16 சிவப்பு மண்டல பகுதிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக, மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் அடிப்படையிலான சிவப்பு மண்டலத்தை மட்டுமே சுகாதார அமைச்சு…

குறை கூறுவதை நிறுத்தி விட்டு, தொற்றுநோயை கையாளும் முயற்சியில் ஈடுபட…

கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு காண PH அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பேசுகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அகமட், "ஷெரட்டன் நகர்வு” நடவடிக்கைகளும், பிரதமர் முகிதீன் யாசின் தனது அமைச்சரவையை நியமிக்க எடுத்து கொண்ட நேரமும், தொற்றுநோயை கையாளும் கவனத்தை திசைத் திருப்பிவிட்டது என்று கூறியுள்ளார். முன்னாள்…

சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்

சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. கடந்த சில நாட்களாக அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களிடையே அதிக அளவில்…

சபா மருத்துவக் கிளஸ்டர்: மூன்று மருத்துவமனைகளைத் தாக்கியுள்ளது, 31 பேர்…

சபாவில் உள்ள மருத்துவ ஊழியர்களின் கிளஸ்டர் மூன்று மருத்துவமனைகளை பாதித்துள்ளது. இதனால் இதுவரை 31 நோய்த்தொற்றுகள் உள்ளன என அறியப்பட்டுள்ளது. குயின் எலிசபெத் 2 மருத்துவமனை (Queen Elizabeth 2 Hospital), லிகாஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை (Likas Women and Children's Hospital) மற்றும் கெனிங்காவ்…