செலாயாங் மொத்த விற்பனை சந்தை கடுமையான கட்டுப்பாடுடன் செயல்படத் தொடங்கியது

நான்கு நாட்கள் கிருமிநாசினி மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், செலயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியதாக கூட்டரசுப்பிரதேச மாநகராட்சி மன்றத் தலைவர் அன்னுவார் மூசா தெரிவித்தார். எவ்வாறாயினும், மொத்த விற்பனை சந்தையின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.…

MCO-வை மீறிய குற்றச்சாட்டில் அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமீடியின் மகள்,…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிதாயா, புக்கிட் அமானில் இன்று போலீசாருக்கு வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை மலேசியாகினி தொடர்பு கொண்டபோது நூருல்ஹிதாயா இதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இன்று காலை…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு 12 மே 2020 வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று தொலைக்காட்சியில் தன் சிறப்பு செய்தியில் தெரிவித்தார். மார்ச் 18 அன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

நாளை ரமலான் நோன்பு ஆரம்பம்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள், தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு இன்னும் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்த ஆண்டு ரமலான் பிறந்துள்ளது.

கோவிட்-19: மேலும் 71 பாதிப்புகள், இரண்டு இறப்புகள், 90 நோயாளிகள்…

மலேசியாவில் 71 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,603 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 90 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அறிவித்தார். இதனால் குணமடைந்தவர்கள் மொத்தம் 3,542 அல்லது 63.2…

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் சிறப்பு செய்தி

பிரதமர் முகிதீன் யாசின் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியை அறிவிப்பார். இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அவர் அறிவிப்பாரா என்பது தெளிவாக தெரியவில்லை. மார்ச் 18 அன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, மூன்று கட்டங்களைக் கடந்து ஏப்ரல்…

பாக்காத்தான் தொகுதிகளுக்கு உதவி வழங்குவதில் தாமதம் ஏன்?

கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்க ஆதரவிலான 700க்கும் மேற்பட்ட உணவு பொருள் உதவி மூட்டைகள் இன்னும் மக்களுக்கு சென்றடையாதது குறித்து செராஸ் எம்.பி. டான் கோக் வாய் கேள்வி எழுப்பியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு, டான் ஏற்கனவே விநியோகிக்கப்படாத உணவு உதவியைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். “கடவுளே! உதவி…

1,987 செயலில் உள்ள பாதிப்புகள், மேலும் எட்டு பசுமை மண்டலங்கள்

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 2,041லிருந்து 1,987 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கோவிட்-19 தொற்று இல்லாத பசுமை மண்டலங்களின் எண்ணிக்கை, 56-ல் இருந்து 64 பகுதிகளாக அதிகரித்துள்ளது. எட்டு புதிய பச்சை மண்டலங்கள் - கிளந்தானில் உள்ள பாசிர் மாஸ்; பகாங்கில் பேரா,…

Talian Kasih-வை தொடர்பு கொள்ளும் எண்ணிக்கை அதிகரிப்பு

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (MKN) குடும்ப வன்முறை தொடர்பான சமூக சேவை முயற்சியை மகளிர் பாதுகாப்பு அமைப்பு (WAO) பாராட்டியது. இந்த முயற்சியின் மூலம் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் Talian Kasih எண்ணை தொடர்பு கொள்ள தூண்டியுள்ளது என்று அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. “இதன் மூலம் அதிகமான…

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்படுமா?

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை ஏப்ரல் 28க்குப் பிறகு நீட்டிக்கலாமா என்பதை சுகாதார அமைச்சு அடுத்த சில நாட்களுக்குள் பிரதமர் முகிதீன் யாசினுக்கு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை வழங்குவதில், எல்லைக் கட்டுப்பாடுகளை பின்பற்றுதல், நடமாட்டக் கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் மற்றும் புதிய இயல்புக்கு ஏற்ப தயாராகுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன என்று…

50 புதிய பாதிப்புகள், மற்றொரு இறப்பு, 103 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி 50 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,532 ஆகக் கொண்டு வந்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில், செயலில் உள்ள கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,987 என்று…

கிராமத்தில் உள்ளவர்கள், வீட்டிற்கு திரும்ப விண்ணப்பிக்கலாம்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பினால், இந்த சனிக்கிழமை தொடங்கி இந்த நோக்கத்திற்காக விண்ணப்பிக்கலாம். மலேசிய காவல்துறை மற்றும் தொடர்புத் துறை, பல்ஊடக அமைச்சகத்துடன் உருவாக்கப்பட்ட 'கெராக் மலேசியா' இணைய விண்ணப்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள்…

லிம்: நாடாளுமன்றத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவும்

டி.ஏ.பி. தலைவர் லிம் கிட் சியாங், நாடாளுமன்றத்தை ஒரு முக்கிய சேவையாக அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். மே 18 அன்று பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் திறப்பு ஆணையை தொடர்ந்து, 10 நாள் மெய்நிகர் (virtual) நாடாளுமன்ற அமர்வை மேற்கொள்ளுமாறும் அந்த இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர்…

நிவாரண நன்கொடை விநியோக கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார் பிரபாகரன்

கோலாலம்பூரில் உள்ள தாமான் செரி முர்னியில் வசிப்பவர்களுக்கு நிவாரண நன்கொடைகளை விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ள சமூக நலத்துறை (ஜே.கே.எம்), பத்து எம்.பி. பி பிரபாகரனுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது. தன் தொகுதியில் உள்ள பல உள்ளூர்வாசிகள் உணவு உதவி கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளதாக பிரபாகரன்…

கொரோனா – உலகளவில் தற்போதைய நிலவரம்

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி உலகளவில் கொரோனா தொற்றால் 25 லட்சத்து 64 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 25 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 445…

மலேசியா ஏர்லைன்ஸில் பயணிகள் கட்டாயம் முகக்கவரி அணிய வேண்டும்

கோவிட்-19 பரவலைக் குறைக்க உதவும் வகையில், ஏப்ரல் 23 முதல் அனைத்து மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகளும் தங்கள் முகக்கவரியை கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து உள்நாட்டு, அனைத்துலக மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் - கைக்குழந்தைகள் தவிர - இந்த தேவை பொருந்தும்.…

இன்னும் 14 சிவப்பு மண்டலங்கள் உள்ளன, பெர்லிஸ் முழுவதும் பசுமை…

சுகாதார அமைச்சின் சமீபத்திய தகவல்கள், கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகளுடன் 14 மாவட்டங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களாக உள்ளன என்பதைக் காட்டுகிறது. இதற்கு முன்னர் மொத்தம் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக இருந்தன. பெர்லிஸ் முழுவதும் இப்போது ஒரு பசுமை மண்டலமாக உள்ளது. சிவப்பு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய 10 இந்திய ஆடவர்கள் கைது

நேற்று இரவு ஈப்போ, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் அமைந்துள்ள வாழை இலை உணவகம் ஒன்றில் விருந்துண்டு மது அருந்தி மகிழ்ந்ததாக நம்பப்படும் பத்து இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் 44 வயதுடைய அவர்களை பேராக் காவல்துறை தலைமையத்தின் குற்றவியல் புலனாய்வு பிரிவு (டி4), இரவு…

MCO முடிந்த பிறகும் பசுமையான வாழ்க்கை முறையைத் தொடருங்கள் –…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு முடிவுக்கு வந்த பின்னரும் பசுமையான வாழ்க்கை முறையை தொடர்ந்து பின்பற்றுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராஹிம் மான் மக்களைக் கேட்டுக்கொண்டார். கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, மலேசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து வருவதைக் காண…

நோ ஒமர் மீண்டும் சிலாங்கூர் அம்னோ தலைவராகிறார்

மாட் நட்ஸரி அகமட் தஹ்லானுக்குப் பதிலாக, தஞ்ஜோங் காராங் எம்.பி. நோ ஒமர் மீண்டும் சிலாங்கூர் அம்னோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் அம்னோவின் படுதோல்வியைத் தொடர்ந்து, ராஜினாமா செய்வதாக நோ 30 ஜூன் 2018 அன்று அறிவித்தார். அவர் அப்பதவியை 2013ஆம் ஆண்டு முதல்…

மத அமைச்சரின் அரபு மொழி அறிக்கை குறித்து சித்தி காசிம்…

மத அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஏன் அரபு மொழியில் எழுதப்பட்டது என்று சமூக ஆர்வலர் சித்தி காசிம் கேள்வி எழுப்பினார். பிரதம மந்திரி துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி, வெள்ளிக்கிழமை கூட்டரசு பிரதேசத்தில் சாக்காட் கட்டணம் குறித்த ஊடக அறிக்கையை வெளியிட்டதை அடுத்து…

“முக்கியமான கூட்டத்தின் போது, உள்ளே நுழைந்தார் பிரபாகரன்” – சந்தாரா

பத்து எம்.பி. பி.பிரபாகரனுடனான தனது தகராறு குறித்து கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் ராம நாயுடு விளக்கமளித்துள்ளார். செலாயாங் மொத்த விற்பனை சந்தைக்கு அடுத்துள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் பல அரசு தரப்பினர்களுடன் தனி சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்ததாக சந்தாரா கூறினார்.…

57 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 61.1 சதவீதம் பேர்…

இன்று பிற்பகல் நிலவரப்படி மலேசியாவில் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்போது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,482 ஆக உள்ளது. இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த மலேசியர்கள் 18…