சிம்பாங் ரெங்காமில் பி.கே.பி.டி முடிவடைகிறது

குளுவாங், சிம்பாங் ரெங்காமில் உள்ள கம்போங் டத்தோ இப்ராஹிம் மஜித் மற்றும் பண்டார் பாஹாரு டத்தோ இப்ராஹிம் மஜித் ஆகிய இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் (பி.கே.பி.டி) 28 ஏப்ரல் 2020, நாளையோடு முடிவடையும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இதனால், சிம்பாங்…

கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா சந்தை மூடப்பட்டது

ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரு வியாபாரி கோவிட்-19க்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்ட பின்னர் பழைய பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சந்தை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று காலை அங்கு கிருமிநாசினி துப்புரவு பணி செய்யப்பட்டது. மேலும், ஜாலான் ஓத்மானில்…

ரோஹிங்கியா அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் – பாஸ்

எல்லையை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அதே வேளையில், ரோஹிங்கியா அகதிகளுக்கு அனுதாபம் காட்டுமாறு பாஸ் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகின்றனர். அகதிகள் எதிர்கொள்ளும் நிலைமையை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சியின் முகமட் காலீல் அப்துல் ஹாடி கூறியுள்ளார். “இன அழிப்பு,…

மே 4 முதல் இத்தாலியில் தளர்த்தப்படும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படுகிறது. 7 வாரங்களுக்கு பிறகு, வரும் மே 4ஆம் தேதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க…

கட்சித்தாவலுக்கான அழைப்பை நிராகரித்த பி.பிரபாகரன்

பி.கே.ஆர். கட்சியை விட்டு வெளியேற அழைக்கப்பட்டதை பத்து எம்.பி. பி.பிரபாகரன் இன்று உறுதிப்படுத்தினார். பி.கே.ஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அபிப் பகார்டின், இந்த அழைப்பை விடுத்ததாக பி.பிரபாகரன் கூறியுள்ளார். மலேசியாகினியிடம் பேசிய பிரபாகரன், கெராக்கன் கட்சியில் இணைய அபிப் அளித்த வாய்ப்பை தான் நிராகரித்ததாக கூறினார். பி.கே.ஆருக்கு…

கோவிட்-19: 70 சதவீத இறக்குமதி பாதிப்புகள் இந்தோனேசியாவில் இருந்து வந்தவை

இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தோனேசியாவிலிருந்து வந்தவை என்று சுகாதார அமைச்சு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியர்களை கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதில் இருந்து, அவர்களில் 139 பேர் கோவிட்-19-க்கு நேர்மறையாக இருப்பது தெரியவந்தது என்றார் சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர்…

கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 100 பேர் குணமடைந்துள்ளனர், இறப்பு…

மலேசியாவில் இன்று 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,780 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இன்று எந்த மரணமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை கோவிட்-19 பாதிப்பால் நாட்டில்…

சிங்கப்பூரில் இருந்து திரும்பும் மலேசியர்கள் நுழைவு அனுமதி பாரத்தைப் பெற…

சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதிலிருந்து சிங்கப்பூர் குடியரசில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை சுமுகமாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஜொகூர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மலேசிய குடிவரவுத் துறை…

வட கொரிய தலைவர் கிம் ஜான்-உன் எங்கே?

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங்- உன்னிற்கு சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் முகமை…

பி.கே.ஆர். கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் அபிப்

அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செபெராங் ஜாயா சட்டமன்ற உறுப்பினரான தனக்கு, வெள்ளிக்கிழமை அன்று இடைநீக்கக் கடிதம் கிடைத்ததாகக் கூறினார். இருப்பினும், நேற்று இரவு அபிப்…

தொகுதிக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், பெரிக்காத்தான் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன…

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சமூக நலத்துறையால் (JKM) தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், அந்த உணவு நன்கொடைகள், உண்மையிலேயே பி40 பிரிவில் உள்ள குடும்பங்களை…

கோவிட்-19: மலேசியாவில் 5 பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் உள்ளன

கடந்த வாரத்தில், மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பச்சை மண்டலமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட 1,200 பகுதிகளில், இப்போது ஐந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புக¨ளை கொண்டுள்ளன. செயலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இன்றி, 75 சதவிகித பகுதிகள் பச்சை மண்டலமாக உள்ளன.…

“மலேசிய அரசாங்கம் மனிதநேயமற்றது” – சுவாராம்

ஏப்ரல் 16ம் தேதி ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக மலேசிய நுழைவதை அரசு ஏற்க மறுத்து, அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியது குறித்து சுவாராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு 1951-இல் மலேசியா கையெழுத்திடவில்லை என்றாலும், மனிதநேயத்திற்கு ஏற்ப…

ஒழுங்கற்ற பிணிப்பாய்வு சோதனை: சிட்டி ஒன் குடியிருப்பாளர்கள் அதிருப்தி

கோலாலம்பூர் மேனாரா சிட்டி ஒன்னில் வசிப்பவர்கள், நேற்று நடத்தப்பட்ட வெகுஜன பிணிப்பாய்வு சோதனை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் விளக்கத்தையும் அவர்கள் எற்க மறுத்தனர். சில குடியிருப்பாளர்கள் அழைக்கப்படாமலும் சோதனைக்குச் சென்றதால், அங்கு கூடல் இடைவெளியை கடைபிடிக்க சாத்தியமில்லாமல்…

மீறல் குற்றச்சாட்டு: ஜாஹித்தின் மகள் மீது போலீசார் விசாரணை ஆவணங்களை…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிதாயாவுக்கு எதிராக விசாரணை ஆவணங்களைத் திறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். "விசாரணையில், நூருல்ஹிதாயா, பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் மற்றும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் மஸ்ரிசால் முகமட் ஆகியோருடன்…

MCO குற்றாவாளிகள் சிறப்பு சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள், தண்டனைக்காக சிறப்பு சிறைச்சாலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். “நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னர் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் 11 சிறப்பு…

கோவிட்-19: மலேசியாவில் 65.5% மீட்கப்பட்டனர், 51 புதிய பாதிப்புகள், மேலும்…

கோவிட்-19 தொடர்பான மேலும் இரண்டு இறப்புகளை மலேசியா பதிவுசெய்துள்ளது. இதனால் மலேசியாவில் கோவிட்-19 நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 99 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று அறிவித்தார். இதனால், மொத்த குணமடைந்தவர்களின்…

செலாயாங் பாரு சுற்றியுள்ள பகுதிகள் பி.கே.பி.டி. கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஏழாவது பகுதியை தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு கீழ் (பி.கே.பி.டி) உட்படுத்துவதாக அறிவித்தார். இதில் சிலாங்கூரில் உள்ள செலாயாங் பாருவைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். ஏப்ரல் 20 அன்று கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையை சுற்றியுள்ள சில பகுதிகள் பி.கே.பி.டி.-யின் கீழ்…

கிராமத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பும் மக்கள் Gerak…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பினால், கெராக் மலேசியா (Gerak Malaysia) இயங்கலை (ஆன்லைன்) விண்ணப்பத்தின் மூலம் நாளை தொடங்கி விண்ணப்பிக்கலாம். இருப்பினும், கெராக் மலேசியா இயங்கலை வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில்…

கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை மீண்டும் சோர்வுடன் திறக்கப்பட்டது

கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஐந்து நாள் அடைக்கப்பட்ட பின்னர் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், நாட்டின் மிகப் பெரிய உணவு சந்தையாக விளங்கும் இச்சந்தையில் இன்று ஒரு சில வியாபாரிகள் மட்டுமே மீண்டும் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் விதித்த…

மே 18 நாடாளுமன்ற அமர்வு, எதிர்க்கட்சித் தலைவர் யார்?

எதிர்க்கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து தற்போது மிகப்பெரிய எதிர்க்கட்சியான பாக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது, எதிர்க்கட்சித் தலைவராக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் (போர்ட் டிக்சன்) மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் (லங்காவி) ஆகிய இரு வேட்பாளர்களில் ஒருவர் நியமிக்கப்பட…

கோவிட்-19 வளைவை மலேசியா சமனாக்கிவிட்டது: நூர் ஹிஷாம்

நோய்த்தொற்று வளைவைத் சமனாக்குவதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. இப்போது கோவிட்-19 தொற்றுநோயை அகற்றுவதற்கான மீட்பு நிலையில் (recovery phase) உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது, முன்கணிப்பு மாதிரியின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஏப்ரல் 3ம் தேதி 217 புதிய…

உயர்கல்விக்கூடங்களில் உள்ள மாணவர்கள் ஏப்ரல் 27 முதல் வீடு திரும்ப…

ஏப்ரல் 27, திங்கட்கிழமை தொடங்கி, பொது மற்றும் தனியார் உயர்கல்விக்கூட வளாகத்தில் உள்ள மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த இயக்கம் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றும், இப்போதைக்கு மாணவர்கள் சிவப்பு மண்டலத்தில் தங்காவிட்டால் மட்டுமே பச்சை மண்டலத்திற்கு திரும்ப முடியும்…