நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா?

கொரோனா வைரஸ் | ஏப்ரல் 14க்குப் பிறகு அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பது மக்கள் ஒழுக்கத்தைப் பொறுத்தே உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் கூறுகிறார். டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாட்டில் கோவிட்-19…

இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு (Phase 2 of the…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்து கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், உணவு மற்றும் குளிர்பான கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கான காலை முதல் மாலை வரை (காலை 8…

கோவிட்-19 பாதிப்புகள் 2,626ஆக உயர்வு; குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இன்று நண்பகல் 156 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி மொத்தம் 2,626 பாதிப்புகள் உள்ளன என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மூன்று புதிய இறப்புகளையும் அவர் அறிவித்தார், இதில் நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஒன்றும் உட்பட்டுள்ளது.…

ஏப்ரல் 1 முதல் ‘ஒரு காருக்கு ஒரு நபர்’ விதி

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டத்தின் கீழ், தனியாருக்குச் சொந்தமான காரில் இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தும். பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, ஏப்ரல் 1 முதல் ஒரு நபர் மட்டுமே காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். “ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த இரண்டாம்…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது மெதுவோட்டம் ஓடிய இருதயநோய் நிபுணர் மீது…

நடமாட்டக் கட்டுப்பாட் உத்தரவின் போது பொது பூங்காக்களில் ஜாகிங் (மெதுவோட்டம்) ஓடியதன் விளைவாக, இருதயநோய் நிபுணர் டாக்டர் ஓங் ஹீன் டீக் இரண்டு குற்றச்சாட்டுக்களில் பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். சின் செவ் டெய்லி அறிக்கையின்படி, தண்டனைச் சட்டத்தின் (Kanun Keseksaan) பிரிவு 186 மற்றும் தொற்று…

‘கோவிட்-1 ஐ சமாளிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கு RM100,000 கிடைக்கும்

கோவிட்-19 நெருக்கடியைக் கையாள்வதில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு RM100,000 வழங்க பிரதமர் முகிதீன் யாசின் ஒப்புக் கொண்டதாக சுபாங் எம்.பி. வோங் சென் தெரிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கம் முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வருடாந்திர ஒதுக்கீட்டைக் வெட்டியது. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த போதும் இந்த கொள்கையையே பின்பற்றியது. "கோவிட்-19…

‘தமிழன் உதவும் கரங்கள்’ இயக்கத்தின் சேவை

திரு. முரளி தலைமையிலான ‘தமிழன் உதவும் கரங்கள்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவிட்-19 நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவால் பாதிப்புள்ளாகியிருக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச உதவிப் பொருட்களை வழங்கினர். நேற்று, 29.03.2020, ஷா ஆலம், சன்வே, டேசா மென்தாரி, கிள்ளான் உட்பட 7 இடங்களில் இந்த உதவிப் பொருட்களை ‘தமிழன்…

விமான நிறுவனங்களுக்கு மாற்று செயல் திட்ட நடவடிக்கைகள் தேவை –…

கோவிட்-19 தொற்றுநோயால் விமான நிறுவனங்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கின்றன என்று பிரதமர் துறை பொருளாதார அமைச்சர் முஸ்தபா முகமது தெரிவித்தார். இது ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற மாபெரும் விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மலேசியா ஏர்லைன்ஸ் கோவிட்-19 பாதிப்பிற்கு முன்பே பல்வேறு…

சவுதியில் உள்ள மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரும் பணிகள் ஏற்பாடு

ரியாத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் தற்போது சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இன்று ஒரு அறிக்கையில், தூதரகம், அங்குள்ள மலேசியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முயற்சிக்கிறது என்றும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வர விமானத்தை ஏற்பாடு செய்யும்…

ஈப்போ மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க டிரைவ்-த்ரு (drive-through) முயற்சி

ஈப்போ மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க ஊடோட்ட ஆய்வு (டிரைவ்-த்ரு/drive-through: ஒருவரின் காரை விட்டு வெளியேறாமல் ஒருவருக்கு சேவை செய்யக்கூடிய இடம் அல்லது வசதி) முயற்சியைத் தொடங்குகிறது. ஈப்போவில் உள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ முன்னணி குழு, கோவிட்-19 பாதிப்பின் போது கிளினிக்கில் நெரிசலைக் குறைப்பதற்காக…

கோவிட்-19: சுகாதார அமைச்சின் அதிகாரி இறந்தார், இறப்பு எண்ணிக்கை 35…

இன்று மாலை சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கோவிட்-19க்கு பலியானதைத் தொடர்ந்து மலேசியா தனது 35வது மரணத்தை பதிவு செய்தது. சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சமீபத்திய மரணம் 57 வயதுடைய ‘நோயாளி 1,952’ என்று கூறியுள்ளார். அவருக்கு இந்தோனேசியாவுக்கு சென்று வந்த…

கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆதரவாக கூடுதலாக 19,200 படுக்கைகள்

கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆதரவாக கூடுதலாக 19,200 படுக்கைகள் விசாரணைக்கு உட்பட்ட நோயாளிகள் (PUI) உட்பட அனைத்து கோவிட் -19 நோயாளிகளுக்கும் கூடுதலாக 19,200 படுக்கைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அமைச்சின் பயிற்சி நிறுவனத்தை தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாற்றியதாகக் கூறினார்.…

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில்…

கோவிட்-19: 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இலவச அறைகளை வழங்குகிறது சிலாங்கூர்…

தற்போது கோவிட்-19க்கு எதிராக கடுமையாக போராடும் முன்னணி பணியாளர்களுக்கு இலவச தங்குமிடமாக மொத்தம் 287 ஹோட்டல் அறைகள் சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. டி பால்மா ஆம்பாங் De Palma Ampang மற்றும் டி பால்மா ஷா ஆலம் De Palma Shah Alam ஹோட்டல்களை வைத்திருக்கும் சிலாங்கூர் மாநில…

ஒரு நாளைக்கு 4 முறை ‘உணவு வாங்க’ வெளியே சென்றவர்…

உணவு வாங்குவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றதாகக் கூறும் ஒரு நபர், நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டார் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு ஒரு நபரை குறிப்பாக குடும்பத் தலைவர் வெளியே சென்று உணவு மற்றும்…

கோவிட்-19: இன்று மதியம் நிலவரப்படி ஏழு புதிய மரணங்கள் மற்றும்…

கோவிட்-19: இன்று மதியம் நிலவரப்படி ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள் கொரோனா வைரஸ் | கோவிட்-19லிருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். இது பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்டுள்ளது. இது மொத்த இறப்பு…

RM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமான விநியோகமாக…

டேவிட் தாஸ் | நாம் அனைவரும் மலேசியர்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், டாயாக்ஸ், கடாசன்கள், பிடாயு, மெலனாவ், பஜாவ், யூரேசியர்கள், ஒராங் அஸ்லி மற்றும் பலர் உள்ளோம். நாம் 137 மொழிகள் பேசுகிறோம். நாம் முஸ்லிம்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பஹாய்ஸ் மற்றும் பலர் உள்ளோம். நம்மில் சிலர்…

கோவிட்-19 : இத்தாலியில் 10,000 பேர் இறந்தனர்

இத்தாலியில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 10,000 உயிர்களைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் முடக்க உத்தரவு தொடர வாய்ப்புள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் 889 பேர் இறந்ததாக இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 10,023 ஆகக்…

கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா…

புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த WHO கோவிட்-19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த…

1.5 மில்லியன் வாய் மற்றும் மூக்கு கவசங்களை சிறப்பு வாடகை…

கன்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸின் Country Heights Holdings Bhd நிறுவனர் லீ கிம் யூ 1.5 மில்லியன் வாய் மற்றும் மூக்கு கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வர ஒரு சிறப்பு விமானத்தை நேற்று வாடகைக்கு எடுத்தார். தற்போதைய நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு கோவிட்-19க்கு எதிரான…

கோவிட்-19: 3 வகையான மருந்துகள்

குளோரோகுயின் (Klorokuin), ஹைட்ரோகுளோரோடோகுயின் (Hidroksiklorokuin) மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் (Lopinavir/Ritonavir) சேர்க்கை மருந்து ஆகிய தற்போது பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம். இந்த மூன்று வகையான மருந்துகளும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம்…

கொரோனா வைரஸ்: சர்வதேச பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும்…

கோவிட்-19: 159 புதிய பாதிப்புகள், இறப்பு எண்ணிக்கை 27

நாட்டில் 159 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இன்று நண்பகல் வரை மொத்தம் 2,320 பாதிப்புகளாக உள்ளன. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, ஒரு புதிய மரணமும் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவித்துள்ளார். சமீபத்திய பாதிக்கப்பட்டு…