வுஹானில் உள்ள மலேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

தற்போது வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து 82 மலேசியர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்று சீனாவிற்கான மலேசிய தூதர் ராஜா நுஷிர்வான் ஜைனல் ஆபிடின் தெரிவித்தார். மலேசியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது என்றார். “இதுவரை, கடும் கட்டுப்பாட்டில்…

கொரோனா வைரஸ் : ஹூபேயில் இறப்பு எண்ணிக்கை 162-ஐ எட்டியது

கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியான சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 160-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். புதிய கொரோனா வைரஸிலிருந்து மாகாணத்தில் இறப்புக்கள் 37 உயர்ந்து, இப்போது 162 ஆகியுள்ளதாகவும், மேலும் 1,032 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஹூபேயின்…

Q4 2019 வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாளை முதல் தேர்தல் ஆணையம், 914 இடங்களில் Q4 2019 வாக்காளர் பட்டியலைக் வெளியிடும். 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், தகுதியுள்ள குடிமக்களிடமிருந்து புதிய வாக்காளர் பதிவுக்காக 27,345 விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. அதைத்தவிர, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து தேர்தல் வாக்களிக்கும் இட மாற்றத்திற்கான 11,869 விண்ணப்பங்களும்…

யு.இ.சி (UEC) அங்கீகரிக்கப்படாவிட்டால், டி.ஏ.பி. (DAP) ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து விலகும்

ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி)/Unified Examination Certificate (UEC) அங்கீகரிக்க மறுத்தால், டிஏபி, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து விலகும் என்று டிஏபி துணை பொதுச்செயலாளர் ஙா கோர் மிங் தெரிவித்தார். "யுஇசி அங்கீகரிக்கப்படாவிட்டால் டிஏபி அரசாங்கத்திடமிருந்து விலகும் என்று நாங்கள் ஒருமித்த கருத்தை அடைந்துள்ளோம். நாங்கள் இனி ஆளும்…

சீனா பிரஜைகளுக்கு விசா நீட்டிப்பு இல்லை – வான் அஜிசா

ஏற்கனவே நாட்டில் உள்ள சீனா பிரஜைகளின் விசாவை அரசாங்கம் நீட்டிக்காது என்று டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் நெருக்கடி ஆயத்த மையத்திற்கு (Crisis Preparedness Response Centre) வருகை தந்த பின்னர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது துணை…

முஸ்லீம் அல்லாத பார்வையாளர்களுக்கு புத்ரா மசூதி மீண்டும் திறக்கப்பட்டது

கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜனவரி 26 முதல் மூடப்பட்ட புத்ராஜெயாவில் உள்ள புத்ரா மசூதி, இன்று முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா வருகையாளர்களின் வருகையின் போது, சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றும் என்றும் மசூதி நிர்வாக செய்தித் தொடர்பாளர்…

போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள், பொறுத்துக் கொள்ளப்படாது – மகாதீர்

இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து போலி செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதால் அவர்…

சாமிநாதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

LTTE-ஐ ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதி அஹ்மட் ஷாஹிர் முஹமட் சால்லே இம்முடிவை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி 24-ம் தேதி, அஹ்மத் ஷாஹிர் மற்றொரு உயர் நீதிமன்ற தீர்ப்பால் தான்…

போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் வழக்கில் ஆவணங்கள் பொய்யானவை என்று ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரி ஒருவர் மீது இன்று ஷா ஆலாமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு குற்றம்சாற்றப்பட அழைத்து வரப்பட்டார். எவ்வாறாயினும், அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்னர், ஊடகங்கள் உட்பட இந்த வழக்கில் சம்பந்தப்படாத அனைவரும்…

ஹூபேயில் சிக்கியுள்ள மலேசியர்கள்

ஹூபேயில் சிக்கியுள்ள மலேசிய குடிமக்களை மலேசியாவுக்கு திரும்பி வருவதை அனுமதிக்க புத்ராஜெயா சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார். அவர்களை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கரீபியனில் பூகம்பம்

இன்று (மலேசிய நேரம்) அதிகாலை 3.10 மணியளவில் கரீபியனில் (Carribean) வலுவான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. ஜமைக்கா (Jamaica), கேமன் தீவுகள் (Cayman Islands) மற்றும் கியூபா (Cuba) இடையே கடலில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

சீனாவில் 132 இறப்புகள்; 5,900 மேலான கொரோனா வைரஸ் பதிவுகள்

பெய்ஜிங், ஜனவரி 29 - சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5,974ஐ எட்டியுள்ளது, மேலும் புதிய வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதை சீனாவின் தேசிய ஸ்பட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று, சுகாதார அதிகாரிகள் 4,515 உறுதிப்படுத்தப்பட்ட…

வுஹானுக்கு விமானங்களை நிறுத்துகிறது ஏர் ஏசியா

கோத்தா கினாபாலு, பாங்காக் மற்றும் ஃபூகெட் இடங்களிலிருந்து சீனா, வுஹானுக்கு செல்லும் ஏர் ஏசியா விமானங்களின் தற்காலிக நிறுத்தம் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்படும். வூஹானில் ஆரம்பித்த கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை 106-ஐ எட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏர் ஏசியா நிலைமையை கண்காணித்து வருவதாகவும், நிலவரத்தை…

அவசர காலத்தில் முகமூடி கையிருப்பு, அமைச்சு கண்காணிக்கும்

கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வகையில் சந்தையில் போதுமான அளவில் முகமூடிகள் இருப்பதை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இது அமைச்சின் தற்போதைய முன்னுரிமைகளில் ஒன்று, என்று அதன் அமைச்சர் சைபுடீன் நாசுதீன் இஸ்மாயில் கூறினார்.…

“மரம்” – வைரமுத்து

வைரமுத்து அவர்களின் வைரவரிகளில் தொலைந்து போன தருணங்கள் நமக்கு உண்டு. அதில், மீண்டும் படித்து இரசிக்கும் கவிதையான வைரமுத்துவின் “மரம்”. வணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்? மரம் என்றீர்! மரம் என்றால் அவ்வளவு மட்டமா? வணக்கம்,அவ்வையே நீட்டோலை வாசியான் யார் என்றீர்?…

கொரோனா வைரஸ் – இதுவரை என்ன தெரியும்?

சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்கள்: கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது? 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை.…

Tahfiz கொலை வழக்கு

2017-இல் கோலாலம்பூரில் உள்ள Pusat Tahfiz Darul Quran Ittifaqiyah / தஹ்ஃபிஸ் டாருல் குர்ஆன் இட்டிஃபாக்கியா மையத்தில் வசித்து பயின்றுவந்த 23 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டு அவன் தன் தரப்பு வாதத்தை வழங்க ஆணையிடப்பட்டது. உடன் குற்றம் சாட்டப்பட்ட…

கொரோனா வைரஸ்: 24 மணி நேர செய்தி தொகுப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செய்தி தொகுப்பு:  கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய மாலை நிலவரப்படி 4,515 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான்…

கொரோனா வைரஸ் விவகாரம், பொருளாதாரத்தை பாதிக்கும் – அஸ்மின் அலி

கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவல் குறித்த, பொருளாதார விவகார அமைச்சர் முஹமட் அஸ்மின் அலி இன்று குறிப்பிடுகையில், நீண்டகால சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார். மலேசியாவின் நிலைமை பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு நிலையை இன்னும் எட்டவில்லை என்பதால் மேலும் ஊகிக்க மறுப்பதாக அஸ்மின் கூறினார். "இந்த…

வுஹான் வைரஸ் – நாட்டில் மேலும் மூன்று சீனா பிரஜைகள்

கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று சீன பிரஜைகள் கண்காணிப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் பிந்துலு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் லங்காவி மருத்துவமனையில் ஆய்வக சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

முஸ்லிமல்லாதவர்கள் மசூதிக்குச் செல்வதற்கு தடையா?

ஒரு சுற்றுலா இடத்திற்கு செல்ல விரும்பும் பார்வையாளர்கள் மீதான தடையை நிறுத்த சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் சம்பதப்பட்ட தரப்பினருக்கு கடிதம் எழுதும் என்றார் அதன் அமைச்சர் முகமதீன். இவ்வாரான தடை, மிகவும் மோசமானது என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறுனார். "இந்த நாட்டிற்கு…

பிந்துலுவில் கொரோனா வைரஸா?

பிந்துலுவில் (Bintulu) பெண் ஒருவர் மீது கொரோனா வைரஸ் தொற்று ஆய்வக முடிவுக்காக சுகாதார அமைச்சகம் காத்திருக்கிறது. சரவாக் பிந்துலுவில் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் மீது ஆய்வக சோதனை முடிவுக்காக அமைச்சகம் காத்திருக்கிறது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மதட் கூறுகிறார். "எங்களுக்கு…

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையாக எச்.ஐ.வி HIV மருந்தை சோதிக்கிறது சீனா…

கொரோனா வைரஸ் | விரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின் அறிகுறிகளுக்கான சிகிச்சையாக சீனா எச்.ஐ.வி மருந்தை பரிசோதித்து வருவதாக மருந்து தயாரிப்பாளர் ஏபிவி இன்க் [AbbVie Inc.] ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. விரைவாக பரவும் நோய் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுமாறு சீன சுகாதார அதிகாரிகள் இந்த…