சீனாவின் தொற்றுநோய் இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன

சீனாவின் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சீனாவின் புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள், நேற்று மட்டும் 2,590 பதிவுகள் அதிகரித்துள்ளன. அதிவேகமாக பரவி வரும் இந்த தொற்றுநோய் உலகளாவிய அளவில் பயணக் கட்டுப்பாடுகளையும் வெளியேற்றங்களையும் தூண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததில் இறந்தவர்களின்…

மகள் என்னுடன் இல்லையென்றால் ‘மகிழ்ச்சியான முடிவு’ இல்லை, விரக்தியில் இந்திரா

தனது மகளோடு மீண்டும் ஒன்றிணைக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை கேட்டுக் கொண்டார் எம். இந்திரா காந்தி. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திரா, விரைவில் 12 வயதாகும் பிரசன்னா தீக்சாவிடமிருந்து 10 வருடங்களுக்கும் மேலாக பிரிந்துவிட்டுள்ளதாகவும், காத்திருப்புக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும்…

என்ன ஒரு பாராபட்சம்!

என்ன ஒரு பாராபட்சம் - சாந்தி முத்துசுவாமி மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி மருமகள் போனால் கொடுமைக்காரி! மகள் பகலில் தூங்கினா களைப்பு; மருமகள் தூங்கினால் கொழுப்பு! மகள் சமைத்தால் ஆஹா அருமை; மருமகள் சமைத்தால் ஐயோ கொடுமை! மகள் ஒன்று செய்தாலும் ஆராதனை; மருமகள் என்ன செய்தாலும்…

Brexit : பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன், லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

அமெரிக்காவில் பொது சுகாதார அவசர பிரகடனம்

டிரம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸிலிருந்து அமெரிக்கர்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக வலியுறுத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஒரு பொது சுகாதார அவசர பிரகடனத்தை அறிவித்தது. சீனாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் அதிரடி தடை நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதோடு, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கடந்த இரண்டு…

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட திரங்கானு விவசாயிகள் MOA உதவியைப் பெறுகிறார்கள்

SETIU, பிப்ரவரி 1 - விவசாய மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை அமைச்சு (MOA), கடந்த ஆண்டு திரங்கானுவில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட 47 விவசாயிகளுக்கு 'தபூங் பென்சானா தனமான் பாடி'யிலிருந்து / ‘Tabung Bencana Tanaman Padi’ மொத்தம் RM92,235 உதவியை வழங்கியுள்ளது. அதன் அமைச்சர் டத்தோ…

சீனாவில் 46 புதிய கொரோனா வைரஸ் இறப்புகள்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இறுதிக்குள் 259-ஐ எட்டியுள்ளது. 46 புதிய இறப்பு அதிகரிப்பு என்று சீனா நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பாளர் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. தொற்றுநோயின் மையமான ஹூபே மாகாணத்தின் உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமையன்று…

நாற்பது மலேசிய மாணவர்கள் சீனாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் – விஸ்மா…

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, நாற்பது மலேசிய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெய்ஜிங்கில் படித்து வருகின்றனர். நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா புத்ரா, அனைத்து மாணவர்களும் மலேசியா திரும்பியதும் விமான நிலையத்தில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு 14 நாட்களுக்கு அவரவர் வீடுகளில் வீட்டு…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை…

கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் போது நோயாளி வெளியேறினார்

கொரோனா வைரஸ் | சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் சிகிச்சையின் நடுவில் 24 வயது நோயாளி காணாமல் போனதை அடுத்து சுங்கை புலோ மருத்துவமனை காவல்துறைக்கு புகார் செய்தது. அந்த அறிக்கையின்படி, ராவாங்கைச் சேர்ந்த அந்நோயாளி, இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இருமல் இருப்பதாகவும் கூறி இரவு 1.05…

தைப்பூசம் தொடரும் – ஆர்.நடராஜா

வைரஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தைப்பூசம் தொடரும் - பத்துமலை கோயில் நிர்வாகம் உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா வைரஸ் பரவலை உலக அளவில் சுகாதார அவசர நிலை என்று பிரகடன படுத்திய போதிலும், பத்துமலை கோயில் நிர்வாகம் திட்டமிட்டபடி தைப்பூசக் கொண்டாட்டத்தை நடத்துகிறது. இன்று செய்தியாளர்…

ஐ.ஜி.பி.-யின் அதிர்ச்சியூட்டும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’

இந்திரா காந்தியின் வக்கீல்கள் ஐ.ஜி.பி.-யின் 'அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு' அவமதிப்பு குற்றம் சாட்டி, 100மி வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர்…

அறிவியல் மற்றும் கணிதம் மீண்டும் ஆங்கிலத்தில் – டாக்டர் மகாதீர்

அறிவியல் மற்றும் கணிதம் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும் - டாக்டர் மகாதீர் விரும்பம். கல்வி அமைச்சர் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் அறிவியல் மற்றும் கணிதத்தை ஆங்கிலத்தில் கற்பிக்க அறிவுரைத்துள்ளார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது கல்வியின் முக்கிய அங்கமாகும் என்றார். "புவியியல் மற்றும் வரலாறு பாடங்களை எந்த…

தோ புவான் உமா சம்பந்தன் காலமானார்

பெட்டாலிங் ஜெயா: மறைந்த துன் வி.டி.சம்பந்தனின் மனைவி தோ புவான் உமா சம்பந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது. சம்பந்தன் மஇகாவின் ஐந்தாவது தலைவராகவும், துங்கு அப்துல் ரஹ்மான், தான் செங் லாக் ஆகியோரைப் போல முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும்…

வுஹான், ஹூபே மாணவர்கள் பதிவை ஒத்திவைக்கிறது கல்வி அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டுவரும் வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பதிவை நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது கல்வி அமைச்சு (MoE). எவ்வாறாயினும், சீனாவின் பிற மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் மலேசியாவில் படிப்பதற்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

மலேசியா இராணுவ விமானங்களை பயன்படுத்தக் கூடாது, சீனா அறிவிப்பு

சீனாவின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வுஹானிலும் சிக்கியுள்ள மலேசியர்களை வெளியேற்ற மலேசிய இராணுவ விமானங்களை பயன்படுத்த சீனா அனுமதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார். "உண்மையில், பாதுகாப்பு அமைச்சும் மலேசிய ஆயுதப்படைகளும் இதற்கு முன்னர் தங்கள் விமானங்களை பயன்படுத்த முன்வந்தன, ஆனால்…

”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார…

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ''ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO) வியாழக்கிழமை, சீனாவில் 213 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து,…

சீனா விமானங்களை தற்காலிகமாக நிறுத்த எந்த திட்டமும் இல்லை –…

சீனாவிலிருந்து மலேசியா வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார். சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக தடை செய்வதாக இன்று முன்னதாக அறிவிக்கப்பட்ட சபா மற்றும் சரவாக் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை புத்ராஜெயா பின்பற்றுமா என்று அவரிடம்…

இந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கேரளா…

பினாங்கு தைப்பூச நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும்

பினாங்கு தைப்பூசம் ரத்து செய்யப்படவில்லை, போலி செய்திகளைக் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் பரவியதால் பினாங்கு நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச நிகழ்வு ரத்து செய்யப்படும் எனும் போலி செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு இந்து மதம் அறக்கட்டளை வாரியம் ஆணையாளர்/ Penang Hindu Endowment…

ஐ.ஜி.பி.க்கு எதிராக இந்திரா காந்தி ரி.ம.100 மில்லியன் வழக்கு

காணாமல் போன மகள் தொடர்பாக ஐ.ஜி.பி.க்கு எதிராக இந்திரா காந்தி ரி.ம.100 மில்லியன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார் காணாமல் போன தனது மகள் பிரசனா திக்ஸாவைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக எம்.இந்திரா காந்தி ஐ.ஜி.பி அப்துல் ஹமீட் படோர் மீது ரி.ம.100 மில்லியன் வழக்கு தொடரவுள்ளார். இதற்கிடையில், எம்.…

‘எல்லோரையும் திருப்தி படுத்த, ஐஸ்கிரீமை தான் விற்க வேண்டும்.’

'எல்லோரையும் திருப்தி படுத்த, ஐஸ்கிரீமை தான் விற்க வேண்டும்.' அனைவரையும் திருப்திப்படுத்த விரும்பினால் ஒரு அரசியல்வாதி ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் தான் இறங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் இன்று தெரிவித்தார். போதைப்பொருள் கொள்கை குறித்த பேசிய சுல்கிப்ளி, நாட்டில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த புதிய…

மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டியத் தேவை இன்னும்…

இதுவரை, வுஹான் வைரஸைத் தடுக்க மலேசியர்கள் மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுங்கை புலோ மருத்துவமனை மருத்துவ நிபுணர் டாக்டர் பெனடிக்ட் சிம் தெரிவித்தார். மலேசியர்களிடையே வைரஸ் பரவுவதில்லை என்பதே இதற்குக் காரணம் என்றார். "அதனால்தான் மக்கள் தொடர்ந்து மூக்கு மற்றும் வாய்…