பாக்காத்தானுடன் கூட்டணி இல்லை – மகாதீர் முகாம்

டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு விசுவாசமான ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தாங்கள் ஒரு சுயேட்சை தரப்பினராக வாரிசானுடன் மட்டுமே நிலைத்திருப்பதாக அறிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பாக்காத்தான் ஹராப்பான் கட்சியுடனோ அல்லது பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியிலோ சேரப்போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்தனர்.…

ராஹாங் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி கட்சியிலிருந்து வெளியேறினார்

ராஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரித்தாம் சிங் இன்று டிஏபி கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் அவர் பாக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இரண்டு தவணைகள் ராஹாங் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர், இன்று செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை…

அலோர் ஸ்டாரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து வழிபாட்டு…

இன்று காலை அலோர் ஸ்டாரின் ஜாலான் ஸ்டேசனில் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டதில் கெடா மஇகா தலைவர் எஸ்.ஆனந்தன் அதிர்ச்சி தெரிவித்தார். "நான் அதிர்ச்சியடைகிறேன். இந்த கோயிலின் பிரச்சினை குறித்து விவாதிக்க கெடா மஇகா கடந்த ஜூன் 30 அன்று மாநில…

கோவிட்-19: இரண்டாவது நாளாக உள்ளூர் நோய்த்தொற்றுகள் இல்லை

நாட்டில் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியான நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளூர் தொற்று பாதிப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது மனநிறைவை அளிக்கின்றது. அதோடு, புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை கடந்த 24 நாட்கள் தொடர்ச்சியாக…

தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேறினார் அசார்

அசார் அஜீசான் ஹாருன், ஜூன் 29 அன்று தேர்தல் ஆணைத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் தகவல் தொடர்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவார் என்று…

திரங்கானு திரையரங்குகளில் பாலின அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு

திரையரங்குகளில் பாலின பாலின அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்திருக்கும் திரங்கானு அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை, மக்களிடையே பலதரப்பட்ட கருத்துகளை தூண்டியுள்ளது. முன்னதாக, திரங்கானு மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட்ட இருக்கை விதிகளை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கும், பொழுதுபோக்கு மையத்தை ஷரியா…

2023 வரை பொதுத் தேர்தல் இருக்காது என்று பிரதமர் தைரியமாக…

2023 வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று பிரதமர் முகிதீன் யாசின் தைரியமாக அறிவிக்க வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜீஸ் கூறினார். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை வலுபடுத்த முகிதீனுக்கு போதுமான நேரத்தையும் அளிக்கும்…

முகிதீன் அம்னோவை வழிநடத்த வேண்டும் – நஸ்ரி பரிந்துரை

பிரதமர் முகிதீன் யாசின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என்றும், அகமட் ஜாஹிட் ஹமீடியிடமிருந்து அக்கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் பரிந்துரைத்துள்ளார். முகிதீன் மீண்டும் அம்னோவில் சேர்ந்தால் இட ஒதுக்கீடு உட்பட பல பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று முன்னாள் சுற்றுலா…

உயர்கல்வி நிறுவனங்கள் அக்டோபரில் முழுமையாக திறக்கப்படும்

உயர்கல்வி நிறுவனங்கள் அக்டோபரில் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் நோராய்னி அகமட் அறிவித்துள்ளார். "இந்த முடிவை முழுமையாக செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, மாணவர்கள் இப்போதிருந்தே தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” "அக்டோபரில் புதிய செமஸ்டர் தொடங்கும் முன்னதாக, வரும் இந்த மூன்று…

கோவிட்-19: 3 புதிய பாதிப்புகள் மட்டுமே, ஸ்ரீ பெட்டாலிங் திரளை…

மூன்று புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையை 8,677 ஆகக் கொண்டுவருகிறது. இதற்கிடையில், மேலும் ஐந்து நோயாளிகள்…

‘நாடாளுமன்ற சபாநாயகரை பெயரிட எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை’ – பி.பிரபாகரன்

அடுத்த திங்கட்கிழமை நடைபெரும் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் முகமட் அரிஃப் யூசோப் அகற்றப்பட்டால் புதிய சபாநாயகரை நியமிக்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிக்கும் வழங்கப்பட வேண்டும். அரிஃப்பை அகற்றுவதற்கான திட்டத்துடன் இணைந்து அதே நாளில் புதிய சபாநாயகரை நியமிக்கவும் முன்மொழிந்திருக்கும் முகிதீன் யாசினின் செயல் தவறானது என்று பாத்து நாடாளுமன்ற உறுப்பினர்…

மாட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது…

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்து தடுத்து வைத்துள்ளது. நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரங்கள் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தின. அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேல் விவரங்களுக்கு அமானாவின் தலைவரான மாட்…

ஷாரிர்: முகிதீனுக்கு ஆதரவு, பாரிசானுக்கு இலாபமா?

முகிதீன் யாசினை பிரதமராக ஆதரிக்க முவாபாகாத் நேஷனல் எடுத்த முடிவு, பாரிசானை பாதிக்காது என்பதை கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று அம்னோ கட்சியின் ஷாரிர் சமாத் கூறியுள்ளார். இந்த முடிவு பாரிசானின் இட ஒதுக்கீடு, சின்னம் மற்றும் வாக்காளர்களுக்கும் மக்களுக்குமான சலுகைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றார். "ஆகவே…

அன்னுவார்: அம்னோ, பாஸ் கட்சிகள் முகிதீனை பிரதமராக ஆதரிக்கும்

திடீர் பொதுத் தேர்தல் நடந்தால் முவாபாக்காட் நேசனல் கூட்டணியில் உள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள், முகிதீன் யாசினை பிரதமராக ஆதரிக்கும் என்று பாரிசான் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். எவ்வாறாயினும், "எதிர்வரும் காலங்களில்" முவாபாக்காட்டின் நிலைப்பாட்டைக் கூற இயலாது என்று அன்னுவார் கூறினார். "அரசியல் என்பது அடிக்கடி…

கட்சியை எடுக்க விரும்புகிறீர்களா? எடுத்துக் கொள்ளுங்கள்! – சையத் சாதிக்

பெர்சத்து இளைஞர் அணி தலைவர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்த மாட்டார் என்றும் அவர் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடுத்திருக்கும் தனது சிவில் வழக்கை திரும்பப் பெறுவதாகவும் கூறியுள்ளார். "நீங்கள் கட்சியை எடுக்க விரும்பினால் எடுத்துக்…

கோவிட்-19: 6 புதிய பாதிப்புகள், ஐந்து மீட்புகள்

ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளன. அவற்றில் நான்கு வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையை 8,674 ஆகக் கொண்டுவருகிறது. மற்ற இரண்டு பாதிப்புகள் உள்ளூர் பரவல் ஆகும். இது…

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானது – முகிதீனின் உறுதிமொழி…

மே 18 அன்று நடைபெற்ற ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம் சட்டபூர்வமானது, இது மத்திய அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளுடன் முரண்படாது என்று பிரதமர் முகிதீன் யாசினின் உறுதிமொழி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நிஜாம் மைடின் பச்சா மைடின் கையெழுத்திட்ட அந்த உறுதிமொழி ஆவணம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின்…

அசார் ஹாருன் சபாநாயகர், அசாலினா துணை சபாநாயகர் – ஙா…

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசன் ஹாருனை புதிய சபாநாயகராக நியமிக்க பிரதமர் முகிதீன் யாசின் நோட்டீஸ் அனுப்பியதை சபையின் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் உறுதிப்படுத்தினார். பாரிசானின் உறுப்பினரும் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாலினா ஓத்மான் சைட் துணை சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஙா கூறினார்.…

பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அம்னோ சிக்க வேண்டாம்

15வது பொதுத் தேர்தலுக்கான தேசிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தனது கட்சியை எச்சரித்துள்ளார். 15வது பொதுத்தேர்தலில் பெர்சத்துவின் முகிதீன் யாசினை பிரதமர் வேட்பாளராக ஆதரவளிக்க அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டது என்ற…

கோவிட்-19: ஐந்து புதிய பாதிப்புகள், 11 மீட்புகள்

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஐந்து புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால், இன்றுவரை மொத்தம் 8,668 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மேலும் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,476…

“திடீர் தேர்தலா? அப்படியா, எனக்குத் தெரியாதே! – உள்துறை அமைச்சர்

எந்த நேரத்திலும் திடீர் தேர்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார். பொதுத்தேர்தலை நடத்த தேசிய கூட்டணி தயாராக இருக்கிறது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி நேற்று அளித்த அறிக்கை…

அன்வாரே பிரதமர் வேட்பாளர் – பாக்காத்தான் முடிவு

பாக்காத்தான் தலைமைத்துவ கூட்டம், முன்னாள் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமையே அதன் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டால் உட்பட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்கவும் கலந்துரையாடவும் அன்வாருக்கு இப்போது முழு ஆணை…

RM192.9 மில்லியனை மீண்டும் பெற்றது அம்னோ

கட்சியின் RM192.9 மில்லியனை கொடுக்க தவறியதற்காக CIMB வங்கிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விண்ணப்பத்தை அம்னோ திரும்ப பெற்றது. பணத்தை அம்னோவுக்கு திருப்பிக் கொடுக்காதவாறு தொடுக்கப்பட்ட அரசு தரப்பின் கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில், RM192.9 மில்லியன் தொகையை…