சீபு தீ விபத்து: 8 குழந்தைகள், 38 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

நேற்று இரவு சீபுவிலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உலு அரிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குழந்தைகள் 38 சிறுவர்கள் உட்பட 135 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 12 முதியோர், 12 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 பெரியவர்கள் ஆகியோரும் அடங்குவர். இந்த சம்பவத்தில் அவர்கள் வாழ்ந்த…

கோவிட்-19: 9 புதிய பாதிப்புகள், 96 செயலில் உள்ள பாதிப்புகள்

இன்று ஒன்பது புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், இன்றுவரை பதிவாகிய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,764 ஆக உள்ளது. இன்று குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து ஆகும். மொத்தமாக குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 8,564 ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர்…

PPSMI நிராகரிப்பு தேசிய மொழியின் எழுச்சியைக் குறிக்கிறது

பாக்காத்தான் நிர்வாகத்தால் முயற்சித்தபடி அறிவியல் மற்றும் கணித பாடங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையை (PPSMI/பிபிஎஸ்எம்ஐ) நிராகரித்த கல்வி அமைச்சின் முடிவு வரவேற்கத்தக்கது என்று சில தரப்பினர் கூறியுள்ளனர். தேசிய கூட்டணி அரசாங்கத்தின் இந்த முடிவு தேசிய மொழியின் எழுச்சிக்கான அறிகுறியாக காணப்படுகிறது.…

பிபிஎஸ் வீழ்ச்சிக்கு வித்திட்ட மகாதீர், பாக்காத்தான் சரிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்

1994 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் சபா மாநிலத்தில் சபா ஐக்கிய கட்சி (பிபிஎஸ்) அரசாங்கத்தை கவிழ்ப்பதில் வகித்த பங்களிப்பு தொடர்பாக கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் ராடின் நினைவு கூர்ந்து பேசியுள்ளார். ஆகவே, பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் வீழ்ச்சியால் மகாதீர் ஆச்சரியப்படக்கூடாது என்று…

நாளை நாடாளுமன்றம் செல்ல நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

RM2.28 பில்லியன் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக நடைபெறும் வழக்கு விசாரணை நாளை அரை நாள் மட்டும் நடைபெற கோரி நஜிப் ரசாக் அளித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நாளை மதியம் 2 மணியளவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட…

டாக்டர் மகாதீர்: ‘நாடாளுமன்றம் எதற்கு, பின் கதவு அரசு போதுமானது’

மலேசிய அரசாங்கத்தை அதன் மக்கள் பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தின் தேர்தல் முறைக்கு எதிராக அமைந்துள்ளது. முகிதீனின் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் விதிகளை மதிக்கவில்லை என்பதும் இப்போது தென்படுகிறது. முதன்முறையாக, வேறொரு வேட்பாளர் இருப்பதால் ஒரு சபாநாயகர்…

‘உறுப்பினர்களை தொடர்ச்சியாக பதவி நீக்கம், இடைநீக்கம் செய்வது முறையல்ல’ –…

மத்திய மற்றும் மாநில மட்டங்களில் பி.கே.ஆர் கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்ததன் அடிப்படையில், கட்சியிலிருந்து வெளியேறுவதாக பி.கே.ஆர் ஜெம்போல் கிளை தலைவர் கரீப் முகமட் சல்லே மற்றும் 26 உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இக்குழுவிற்கு தலைமை தாங்கிய கரீப், உள் நெருக்கடியை தீர்க்க பி.கே.ஆர் தலைமை தவறியதாகவும், இதனால்…

தேசிய கூட்டணியில் சேர முகிதீன் அழைப்பு விடுத்தார் – ஷாஃபி…

ஷாஃபி அப்தாலை தேசிய கூட்டணி அமைச்சரவையில் தனது துணைத் தலைவராக சேர பிரதமர் முகிதீன் யாசின் ஒருமுறை அழைப்பு விடுத்திருக்கிறார். வாரிசன் தலைவரான ஷாஃபி அப்தால் இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்தார். பிரதமரான முகிதீன், மார்ச் மாதம் ஷாஃபிக்கு துணை பிரதமர் பதவியை வழங்கினாரா…

புவா: 1எம்.டி.பி ‘ஹீரோ’ முகிதீன், இப்போது கேள்விகளை தவிர்க்கிறார்

பிரதமர் முகிதீன் யாசின் 1எம்.டி.பி தொடர்பான கேள்விகளைத் தவிர்த்து ஒளிந்து கொண்டிருப்பதாக டிஏபி எம்.பி. டோனி புவா கூறினார். 1எம்.டி.பி ஊழல் குறித்த தனது கருத்துக்களைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த நஜிப் ரசாக் அவர்களால் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு…

பொது பூங்காவில் மது அருந்துவது, புகைபிடிப்பது கூடாது; சிலாங்கூர் அரசு…

பொது பூங்காவில் மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் வேப் புகைத்தல் போன்ற செயல்களை சிலாங்கூர் அரசு தடை செய்துள்ளது. 2005 பொது பூங்கா துணை சட்டங்களின் (Undang-undang Kecil Taman 2005) குற்றத்தில் இந்தத் தடை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விளையாட்டு மைதானங்கள்…

எளிய பெரும்பான்மையில் தேசிய கூட்டணி அரசாங்கம் செயல்படுவது கடினம்

நேற்று சபாநாயகரை நியமிக்க நடைபெற்ற வாக்களிப்பின் முடிவு தற்போதைய அரசாங்கம் செயல்படுவது சற்று கடினம் என்பதை நிரூபித்துள்ளது என்று முன்னாள் அம்னோ அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய முடிவு ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கு முகிதீன் யாசின் ஆதரவைக் கொண்டுள்ளார் என்பதைக் காட்டினாலும், அந்த ஆதரவு போதுமானதாக இல்லை என்பதையும்…

தோலின் நிறம் குறித்து கிண்டல், நாடாளுமன்றத்தில் சர்ச்சை

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான், பத்து காவான் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின் தோலின் நிறம் குறித்து இழிவாக கிண்டல் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். "அவர் கருப்பாக இருக்கிறார், கண்ணுக்கு தெரியவில்லை" (“gelap, tak nampak”) என்று அஜீஸ் கூறினார். பெண்கள் உறுப்பினர்களின்…

800 ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை – ஆரிஃப்

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியில் இருந்து தன்னை நீக்கியிருக்கும் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் (பி.என்) செயல், இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளது என்று முகமட் அரிஃப் யூசோப் விவரித்தார். "இப்போது நடந்திருப்பது சாதாரணமான செயல் அல்ல. டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டைத்…

புதிய துணை சபாநாயகராக அசாலினா தேர்ந்தெடுக்கப்பட்டார்

பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் சைட் இன்று நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். இன்று துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கிற்கு பதிலாக 57 வயதான அசாலினா நியமிக்கப்பட்டார். முன்னதாக, பிரதமர் முகிதீன் யாசின், சபையின் துணை…

அசார் அஜீசான் புதிய சபாநாயகராக வாக்களிக்காமலே நியமிக்கப்பட்டார்

முகமட் ஆரிஃப் யூசோப்பிற்குப் பதிலாக புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசார் அஜீசான் ஹாருன் இன்று நியமிக்கப்பட்டார். அசார் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரதமர் முகிதீன் யாசினின் தீர்மானத்திற்கு முன்னர், எதிர்க்கட்சியினரும் தங்கள் சபாநாயகரின் பெயரை முன்மொழிய விரும்புவதாகக் கூறினர். இருப்பினும், பிரதமர் துறை அமைச்சர்…

111 வாக்குகளில் சபாநாயகர் முகமட் ஆரிஃப் நீக்கப்பட்டார்

சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பை நீக்குவதில் வெற்றி பெற்றுள்ளது தேசிய கூட்டணி. 222 உறுப்பினர்களில் 111 பேர் பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவாக வாக்களித்தனர், 109 உறுப்புபினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். முகிதீனின் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ள ஆதரவின் அடையாளமாக கருதப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.…

சபாநாயகரை நீக்கும் தீர்மானம், சூடுபிடித்தது நாடாளுமன்றம்

சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப் நீக்கப்படுவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் சூடுபிடித்தது. சபாநாயகர் முகமட் ஆரிஃப்பை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார். பிரதமர் முகிதீன் யாசின், சபாநாயகர் இருக்கை காலியாக உள்ளது என்ற அடிப்படையில் ஆரிஃப்பை மாற்றுவதற்கான ஒரு…

அன்வார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராஹிம் (பி.எச் - போர்ட் டிக்சன்) தேர்ந்தெடுக்கப்படுவதாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் முகமட் ஆரிஃப் எம்.டி யூசோப் முறையாக அறிவித்தார். "நான் பெற்ற கருத்தின்படி, போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராஹிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதில்…

கோவிட்-19: மலேசியாவில் மீண்டும் 2 இலக்க தினசரி பாதிப்புகள்

கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் மீண்டும் இரட்டை இலக்கங்களுக்கு திரும்பியுள்ளன. இன்று 14 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் வெளிநாட்டில் ஏற்பட்ட மூன்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். சமீபத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,718 ஆக உள்ளன. 77…

நாளை நாடாளுமன்ற அமர்வு: இன்று அரசியல் முகாம்களின் 4 தனித்தனியான…

மூன்று முக்கிய அரசியல் முகாம்களுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர். ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் தேசிய கூட்டணி (பி.என்) மத்திய அரசைக் கைப்பற்றிய பின் நடக்கும் முழு அமர்வாக நாளைய நாடாளுமன்ற அமர்வு அமையும். நாடாளுமன்ற அமர்வுக்கும் முன்னதாக கூட்டங்களை நடத்துவது…

வான் சைஃபுல்: அன்வாரை பிரதமராக ஏற்க டாக்டர் மகாதீர் ஒத்துழைக்கவில்லை

முன்னாள் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, அன்வார் இப்ராஹிம் அவருக்குப் பதிலாக பிரதமராக வருவதை ஒருபோதும் விரும்ப வில்லை என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார். பெர்சத்து தலைவர்களுடனான பல்வேறு சந்திப்புகளில் மகாதீர் தனது நோக்கத்தை தெளிவாகக்…

சபாநாயகரை நீக்குவதில் வெற்றி பெறுவாரா முகிதீன்?

நாளை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகரை மாற்றுவதற்கான தீர்மானம் பிரதமர் முகிதீன் யாசினுக்கு உள்ள ஆதரவை அளவிடுவதற்கு சந்தர்ப்பமாக அமையும் என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஏ காதிர் ஜாசின் கூறியுள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட தேசிய கூட்டணிக்கு (பி.என்) தலைமை தாங்கியுள்ள முகிதீன், கடந்த மாதம் சபாநாயகர்…

குடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 219 இந்தியர்கள் சொந்த நாடு…

மலேசியாவில் குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். சிறப்பு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மொத்தம் 219 இந்திய குடிமக்கள் இன்று தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். MH8722 சிறப்பு விமானம் மூலம் அவர்கள் பஞ்சாப் அமிர்தசரஸ¤க்கு திருப்பி…