ஸ்லிம் இடைத்தேர்தலில் பெர்சத்து ‘பிளாக்அவுட்’ போட்டியிடும்

டாக்டர் மகாதிர் முகமட் முகாமின் குழு ஸ்லிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக் கூறியுள்ளது. செனட்டர் மர்சூகி யஹ்யா அவர்களின் முகாம் தேசிய கூட்டணிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும் என்று கூறியுள்ளார். ஸ்லிம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடாது என்று பாக்காத்தான் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் சொன்னதாக அவர்…

நஜீப், அகமட் ஜாஹிட் மற்றவர்களுக்கு வழிவிட்டு விலக வேண்டும்

‘மலாய்க்காரர்களை நேசித்தால், தியாகம் செய்யுங்கள்’ - என்று மூத்த அம்னோ அரசியல்வாதியான தெங்கு ரசாலீ ஹம்சா தனது சக கட்சியினர்களான அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாகிற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்த நேரத்தில் மக்கள் பார்வையில் அம்னோ 'குறைபாடுடையதாக' காணப்படுவதால் அவர்கள் இருவரும்…

ஆகஸ்ட் 1 முதல் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்படுகிறது

ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து மற்றும் நெரிசலான பொது இடங்களில் முகக்கவரியின் பயன்பாடு கட்டாயமாக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த கட்டளைக்கு இணங்க தவறினால், சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988) இன் கீழ் RM1,000 அபராதம் விதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில்…

கோவிட்-19: 6 புதிய பாதிப்புகள், சரவாக்கில் பாதிப்புகள் அதிகரிப்பு

ஒன்பது புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று நண்பகல் வரை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 6 பாதிப்புகள் உள்நாட்டுப் பரவலுடன் தொடர்புடையவை. ஆறு பாதிப்புகளில், நான்கு உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்டவை ஆகும். அந்த நான்கு பாதிப்புகளும் சரவாக் நகரில் நிகழ்ந்துள்ளன. ஸ்டூடோங் திரளை, செந்தோசா திரளை, கூச்சிங் இன்ஜினியரிங்…

‘சபாநாயகர் அலுவலகத்திற்கு ஓர் இழுக்கு’

தேசிய கூட்டணியைச் சார்ந்த பல அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, அவர்களில் சிலர் சபாநாயகரின் நிலையை இழிவுபடுத்தும் அளவுக்கு தங்களின் எல்லையை மீறி செயல்பட்டதாக கூறியுள்ளார் முன்னாள் சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோஃப். தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தாம் ஒதுக்கி வைக்கப்படுவார் என்பதை அறிந்திருந்த முகமட் ஆரிஃப், அக்கூட்டணியின் மூத்த…

ஊழல் தடுப்பு ஆணையத்தில் 6 மணி நேரம் விசாரணையில் லிம்

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்ட பின்னர், முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், இரவு 7.13 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும், அவர், இன்று பிற்பகல் முதல் காத்திருந்த ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பினாங்கு கடலடி…

தந்தையைப் போலவே மகன் – முக்ரிஸ் மகாதீரை பார்த்து தாஜுதீன்…

நாடாளுமன்றம் | இன்று நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இணைத்த 1எம்.டி.பி நிறுவன நிதி முறைகேடு தொடர்பான பிரச்சினையை முக்ரிஸ் மகாதிர் (பேபாஸ்-ஜெர்லுன்) எழுப்பியபோது, தாஜுதீன் அப்துல் ரஹ்மான் (பி.என்-பாசிர் சாலக்) கோபமடைந்தார். தற்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பற்றி முக்ரிஸ் எழுப்பி,…

நஜிப் RM1.69b வரி செலுத்த வேண்டும் என தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது RM1.69 பில்லியன் வரி கோரிக்கை வழக்கில் நேரடி தீர்ப்புக்காக உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (ஐஆர்பி) விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக, நஜீப் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு RM1.69 பில்லியன் வரிகளை செலுத்த வேண்டும். நேரடித்…

சிலாங்கூரில் நீர் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை – மந்திரி பெசார்

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சிலாங்கூர் அரசு நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடவில்லை என்று அதன் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி தெரிவித்தார். இருப்பினும், நேரம் வரும்போது நீர் கட்டண பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். "கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பின்…

மகாதீர்: டிஏபி அச்சுறுத்துகிறது என்பது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் | பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது, டிஏபி கட்சி மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டுகள் நஜீப் ரசாக்கை மீண்டும் அரசாங்கத்திற்குள் அனுமதிக்க எதிர்க்கட்சிகளால் ஜோடிக்கப்பட்டவை என்று டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் கூறியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாதக் கூட்டத்தில் பேசிய மகாதீர், நஜிப் மீண்டும் அரசாங்கமாகும்போது, அவருக்கு…

‘நிலைமை கவலையளிக்கிறது’ – டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

கோவிட்-19 தினசரி பாதிப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு ஆபத்தானது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று மேலும் 15 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. "கோவிட்-19 இன் சமீபத்திய நிலைமை ஆபத்தானதாக உள்ளது. ஏனெனில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறிப்பாக உள் நாட்டில் ஏற்படும் தொற்றுகள்…

வெள்ளிக்கிழமை முதல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல்

வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் அல்லது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் இந்த வெள்ளிக்கிழமை முதல் அரசாங்கம் நிர்ணயித்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) மற்றும் வீட்டில் கட்டாய தனிமைப்படுதல் விதிகளை மீறும் நபர்கள்…

டாக்டர் மகாதீர்: எனக்கு இன்னும் ஆதரவு உள்ளது!

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் இன்னும் பெர்சத்து உறுப்பினராக உள்ளார் என்றும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து தமக்கு ஆதரவு இருப்பதாகவும் நம்புகிறார். 95 வயதான அவர், தற்போது முகிதீன் யாசினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பெர்சத்து கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் பெர்சத்துவில் தமக்கு இன்னும் ஆதரவு…

சபாநாயகர்: இனவாதம், தூண்டிவிடுதல், நாகரிகமற்ற நடத்தை, பாலினத்தின் அடிப்படையில் அவதூறு…

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இனவாதம், தூண்டிவிடுதல், நாகரிகமற்ற நடத்தை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் அவதூறு வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அஜீசான் அசார் ஹருன் அதன் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அவர் இதனைக் கூறினார்.…

முகக்கவரியை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

பொது இடங்களில் முகக்கவரிகளை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் முகிதீன் யாசின் இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்த விவரங்களை அரசாங்கம் இறுதி செய்த பின்னர் அறிவிக்கப்படும் என்று முகிதீன் கூறினார். முன்னதாக, முகிதீன் தனது சிறப்பு செய்தியில், முகக்கவரிகள், கூடல் இடைவெளி மற்றும்…

‘ரூமா வர்கா எமாஸ் குளுவாங்’ புதிய திரளையில் 13 நேர்மறை…

குளுவாங்கில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 இன் புதிய திரளை, நாட்டில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கையை ஒரு மாதத்திற்குள் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், நாட்டில் இன்று பதிவாகியுள்ள 21 புதிய பாதிப்புகளில், 13 பாதிப்புகள்…

‘புதிய கோவிட்-19 திரளைகள் பற்றி கவலைப்படுகிறேன்’- முகிதீன்

அண்மையில், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் (பி.கே.பி.பி) 13 கோவிட்-19 திரளைகள் கண்டறியப்பட்டு இருப்பது குறித்து பிரதமர் முகிதீன் யாசின் கவலை தெரிவித்துள்ளார். இதில், கோலாலம்பூர் ப்ரிக்ஃபீல்ட்ஸ் உணவக திரளை, சரவாக் நகரில் உள்ள ஸ்டூடோங் திரளை மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களிடமிருந்து கண்டறியப்பட்டுள்ள திரளைகளும் அடங்கும்.…

கோவிட்-19: 21 புதிய பாதிப்புகள், புதிய திரளைகள் கண்டறியப்பட்டன

புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாட்டில் கோவிட்-19 இரண்டாவது பாதிப்பு அலை வெடிப்பதற்கான சாத்தியம் குறித்து பல்வேறு தரப்பினரின் கவலைகள் உண்மையாவதாகவே தெரிகிறது. இது இந்த மாதத்தில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும். 21 புதிய பாதிப்புகளில், 15 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் 6…

நாடாளுமன்ற விவாதம்: உரிமைகள் பொறுப்புகளுடன் வருகின்றன

இன்று நாடாளுமன்ற விவாதம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டது. தாஜுதீன் அப்துல் ரஹ்மான் (பி.என்-பாசிர் சாலாக்) "மலாய் நாடு" மற்றும் பூமிபுத்ரா உரிமைகளைப் பற்றி வலியுறுத்தினார். மாஸ்லீ மாலிக் (பேபாஸ் - சிம்பாங் ரெங்கம்) அந்த உரிமைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்ற பொறுப்போடு வருகின்றன என்று கூறினார்.…

இன்று நாடாளுமன்றத்தில் வேலையின்மை பிரச்சனை விவாதம்

இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பிரச்சனைகளில் வேலையின்மை பிரச்சனையும் ஒன்றாக உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தின் ஆணைப்படி, அன்வார் இப்ராஹிம் (பி.எச்-போர்ட் டிக்சன்) வேலையின்மை குறித்து மனிதவள அமைச்சரிடம் கேள்விகளை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வேலையின்மை விகிதம் அதிகரிப்பதை சமாளிக்க அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள…

அடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி!

தாமான் யு தானின் பிரதான கட்டமைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் சுவரை புதைகுழி ஒன்று விழுங்கிவிட்ட நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. டிபிகேஎல் மீட்புப் படை இன்று மதியம் 3.35 மணிக்கு ஜாலான் தாமான் யு தானில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி…

தியோவின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் எண்ணம் முகிதீனுக்கு இருந்ததில்லை

பாக்காத்தான் ஆட்சியின் போது அதன் அமைச்சரவை முடிவெடுத்த போதிலும், அப்போது பாக்காத்தான் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சராக இருந்த முகிதீன் யாசின் தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கும் நோக்கத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார். பாக்காத்தான், அரசாங்கமாக இருந்தபோது…

கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், ஜோகூரில் ஓர் இறப்பு

கோவிட்-19 15 புதிய பாதிப்புகளும், ஜோகூரில் ஓர் இறப்பும் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. நாட்டில் கடைசியாக ஜூலை 11 அன்று ஓர் இறப்பு நிகழ்ந்தது. "இது மலேசியாவில் மொத்த நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,779 ஆகக் கொண்டுவருகிறது. எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள…