ஒரு ஜனநாயக அமைப்பில் உள்ளவர்கள் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் அரசியலமைப்பு வரம்புகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் உண்மையின் கொள்கைகள் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதோடு இணைந்து செல்ல வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பொதுமக்களுக்கு அதிருப்தி உட்பட தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முழு…
குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின் கதை
அருட்செல்வன் | இந்த மாதம் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவு இது. முதலாவது, முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டது. இரண்டாவது, கேஸ் லாரி டிரைவர் மற்றும் கோவிட் காலத்தில் வேலை இழந்த அவரது துணை சம்பந்தப்பட்டது. இதில், ஒரு சம்பவம் 7 ஜூலை 2020-ல்…
நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM210 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அதிகார முறைகேடு செய்த குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM120 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டார். நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப் மீது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். பணமோசடி குற்றங்களுக்காக, ஒவ்வொரு குற்றத்திற்கும்…
ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தில் கூடியதைக் கண்டு நூர் ஹிஷாம் வருத்தம்
இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் "சுய கட்டுப்பாடு இன்றி" அலட்சியமாக இருந்தது குறித்து சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். "ஒவ்வொரு நாளும் சுகாதார அமைச்சு மலேசியர்களை குறைந்தது 1 மீட்டர் பாதுகாப்பு கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவரி…
நேரலை: RM420 மில்லியன் அபராதம், சிறைத்தண்டனை கோருகிறது அரசு தரப்பு
மாலை 5.25 மணி - அதிகார முறைகேடு செய்ததற்காக RM210 மில்லியன் அபராதம், மற்றும் கட்டாய சிறைத்தண்டனை ஆகியவற்றை அரசு தரப்பு கோருகிறது. நம்பிக்கை மோசடி குற்றத்தைப் பொறுத்தவரை, இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க கோரி அரசு தரப்பு முயல்கிறது. பணமோசடி குற்றச்சாட்டுக்காக,…
நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
அதிகார முறைகேடு செய்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் குற்றவியல் விசாரணையின் தீர்ப்பு மற்றும் 1எம்.டி.பி நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும். நஜிப்பின் ஆதரவாளர்கள் இன்று அதிகாலை முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடிவருகின்றனர். நஜிப்பின்…
நஜிப் வழக்கு: கோலாலும்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் கடும் காவல்
கோலாலும்பூர் உயர்நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டு முக்கிய நுழைவாயில்கள் உட்பட கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி காவல்துறையினர் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளனர். எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நஜிப் ரசாக் வழக்கின் முடிவுகளை இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் தற்போதைய நிலைமையைக்…
அனைத்து 7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி என தீர்ப்பு
அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான ஆர்.எம் 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை வாசிக்கும் போது முன்னாள் பிரதமர் அமைதியாகவே…
நஜீப் ஊழல் வழக்கு : இன்று தீர்ப்பு
அனைத்து 7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான ஆர்.எம் 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை…
மலாய் ஆதிக்கம் – வெள்ளையர் ஆதிக்கம், இரண்டிற்கும் வேறுபாடு இல்லை…
இன்று அமானா கட்சியின் மக்கள் பிரதிநிதிகளில் சிலர், மலாய் மேலாதிக்கமும் வெள்ளையர் மேலாதிக்கமும் ஒன்றுதான் என்றார்கள். மேலும், இதுபோன்ற உணர்வுகள் எதிர்காலத்தில் இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். வாரிசான் கட்சியின் ஷாஃபி அப்டாலும், மலாய்க்காரர்கள் சிந்திக்க வேண்டும் என்றும், மற்ற இனங்கள் வெற்றி அடைந்து இருந்தால்…
அம்பாங், கோம்பாக்கில் பி.கே.ஆர் வெல்லும் என்று கனவு காணாதீர்!
அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற கனவை பி.கே.ஆர் கலைக்க வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சரின் அரசியல் செயலாளர் ஹிஸ்வான் அகமட் கூறினார். கடந்த வாரம் பி.கே.ஆர் அம்பாங்கில் ஒரு அடிமட்ட உறுப்பினர் மாநாட்டை நடத்தியதை தொடர்ந்து…
கோவிட்-19: சபாவில் இன்று மூன்று உள்ளூர் பாதிப்புகள்
இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதுவரை நாட்டில் மொத்தம் 8,904 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஏழு புதிய பாதிப்புகளில், நான்கு வெளிநாட்டில் ஏற்பட்ட இறக்குமதி பாதிப்புகள். அதில் மூன்று பாதிப்புகள் மலேசியர்களையும், ஒரு பாதிப்பு மலேசியர் அல்லாதவரையும்…
அறிமுகமில்லாத நபரிடமிருந்து யாயாசன் அகால்பூடிக்கு நன்கொடையா?
யாயாசன் அகால்பூடியின் வங்கிகணக்கில் பணத்தை வைப்பு செய்யும் நோக்கத்திற்காக, தன்னிடம் பணத்தை ஒப்படைத்த நன்கொடையாளர்களில் யாயாசன் அல்-புகாரி அறக்கட்டளை இருப்பதாக அன்னியச் செலாவனி வணிகர் ஓமார் அலி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்திப்பில், அகால்பூடி அறக்கட்டளை வங்கி கணக்கை நிர்வகிக்க அகமட்…
படுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார்
படுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வேய், சரவாக் டிஏபி துணைத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியை விட்டும் விலகுவதாக அறிவித்தார். "முதலாவதாக, அடுத்த சரவாக் தேர்தலில் படுங்கான் சட்டமன்றத்தை பாதுகாக்க என்னை மீண்டும் போட்டியிட நியமித்த டிஏபிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” "டிஏபி தலைமையும், அடிமட்ட…
8 மணி நேர மூன்றாவது சுற்று விசாரணையில் லிம்
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் தனது மூன்றாவது சுற்று விசாரணையை இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக முடித்தார். RM6.3 பில்லியன் மதிப்புமிக்க பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்,…
கோவிட்-19: தினசரி பாதிப்புகள் 3 இலக்கங்களை அடைந்தால் பி.கே.பி மீண்டும்…
நாட்டில் தினசரி நேர்மறை கோவிட்-19 பாதிப்பு மூன்று இலக்கங்களை எட்டினால், மீண்டும் ஒரு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், பி.கே.பியை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை, இதனால் தொற்றுநோயின்…
கோவிட்-19: 13 புதிய பாதிப்புகள், ஒரு வாரத்திற்குப் பிறகு ஓர்…
இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி 13 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 173 ஆக உள்ளன என்று கூறினார். மொத்தத்தில், 10 பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்டவை, மற்ற மூன்று…
மலேசிய விமானங்களை தடை செய்கிறது கம்போடியா
இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் காரணமாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் விமானங்களை கம்போடியா தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த தடை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று கெமர் டைம்ஸ் தெரிவித்துள்ளது. "ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை, மலேசிய மற்றும் இந்தோனேசிய…
கோவிட்-19: மூன்றாவது நாளாக 20க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன
மேலும் 23 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பிற்பகல் 12 மணி வரை பதிவாகியுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக 20க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளில் 17 பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்ட தொற்று எனவும், ஆறு இறக்குமதி பாதிப்புகளாக உள்ளன என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில்…
ஸ்லிம் இடைத்தேர்தல்: பாக்காத்தான் வழிவிட்டது என்பது குழப்பமளிக்கிறது
ஸ்லிம் இடைத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பெர்சத்து குழுவுடன் இணைந்து பணியாற்ற பாக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். தேசிய கூட்டணி (பிஎன்) வேட்பாளரை எதிர்த்து ஸ்லிம் இடைத்தேர்தலில் 'பெர்சத்து பிளாக்அவுட்' போட்டியிடுவதாக செனட்டர்…
பி.கே.பி-யின் எஸ்ஓபி மீண்டும் இறுக்கப்படும்
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமலாக்கத்தின் கீழ் தளர்த்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) தொடர்பான எஸ்ஓபி-க்களை (SOP) மீண்டும் கடுமையாக்க அரசு இன்று கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டது. ஏறக்குறைய ஒரு வாரத்தில் நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பு குறித்த கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு…
அசாலினா: சபாநாயகர் நியமனம் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நியமிப்பதில் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்ட அதிகாரியுமான துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் தெரிவித்தார். சபாநாயகர் அசார் அஜீசன் ஹருன், துணை சபாநாயகர் அசாலினா மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளராக நிஜாம் மைடின் பச்சா மைடின் ஆகியோரின் நியமிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில்…
நாடாளுமன்றம் பழைய பழக்கவழக்கங்களுக்கு திரும்புகிறது – ஆரிஃப்
இதற்குமுன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே விவாதத்தின் மாற்றத்தையும் தரத்தையும் காண முடிந்தது. ஆனால், இப்போது அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாகத் தெரிகிறது, அதன் முன்னாள் சபாநாயகர் கூறியுள்ளார். முகமட் அரிஃப் யூசோப்பின் கருத்துபடி, ஒரு காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்ல நடத்தையுடன் வாதிட்டனர். வாதிடும் போது எண்களையும் உண்மை…
டிக்டோக், யூடியூப் வீடியோக்களுக்கு ஃபினாஸ் உரிமம் தேவையில்லை
சமூக ஊடக பயனர்கள் இனி மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ்)/Perbadanan Kemajuan Filem Nasional Malaysia (Finas) உரிமம் தேவையில்லாமல் வழக்கம் போல் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார். "சமூக ஊடக பயனர்கள்…
























