அம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு உலை  வைக்கும்! முன்னேற்றத்தை…

அம்னோ – பாஸ் கூட்டணி வழி மலாய்க்காரர்களை  மட்டுமே வைத்து ஆட்சி  நடத்த  முற்படுவது  நாட்டின்   ஒற்றுமைக்கு  உலை  வைக்கும் என்றும், சுதந்திரத்திற்கு  முன்பு  பேசப்பட்டு  உறுதி  அளிக்கப்பட்ட  மதச்  சார்பற்ற  நாடு  என்பதுபோன்ற நோக்கங்களை புறக்கணிப்பது நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் விவரிக்கிறார் கட்டுரையாளர்- ஆர்.…

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா?

தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள  தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்கிறார் வல்லினத்தின் இணைய இதழ் ஆசிரியர் ம. நவீன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத்…

நீதி தேவதையின் நிலை! – கி.சீலதாஸ் 

சட்டத்திற்குப்  புறம்பாக  ஏதாவது  தவறு  நேர்ந்துவிட்டாலோ,  அல்லது  ஒருவருக்கு  இழைக்கப்படும்  தவறுக்குத்  தீர்வு   தேடி  போவது  நீதிமன்றத்திற்கு.  நீதிமன்றம்  இயங்குவதற்கு  எதற்கு?  நீதி  வழங்க:  ‘அப்பழுக்கற்ற  நீதி  வழங்க’. பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  இறுதியில்  இங்கிலாந்தின்  மேல்முறையீட்டு    நீதிமன்றத்தின்  தலைவர்  ஒரு  கேள்வியை  முன்வைத்தார்.  நீதிமன்றம்  என்றால்  என்ன?  என்பதே …

‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி இடைத்தேர்தலில் பி.எஸ்.எம். கட்சியால்…

கருத்து | நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான் - பிஎச்) 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) அறிக்கை, விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுக்க உள்ளதாக உறுதியளித்தது, இதனால், தேசிய முன்னணி (பாரிசான் நேசனல் -பிஎன்) ஆட்சியின் கீழ் இருந்தது போல் அல்லாமல், மிகவும் வித்தியாசமான ஓர் அரசாங்கம் அமையவுள்ளது என்று…

எங்கே போனீர்கள் என்ஜிஓ? வேதமூர்த்திக்கு குரல் கொடுங்கள் – இராகவன்…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..... என மகாகவி பாரதியார் பாடினார். அதே போல, என்று தனியும் நம் ஒற்றுமை தாகம்? கடந்த மே 9ஆம் தேதியன்று  'மலேசியா பாரு' பிறந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள், மறுமலர்ச்சி, சுதந்திரம், என பல விஷயங்களில் நாம் குதூகலம் அடைந்து கொண்டிருக்கும்…

மலேசியர்களும்  சமஉரிமைகளும்…!

கி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய  வேறுபாடுகளைத் நீக்கும்  நோக்கத்தோடுதான்  21.12.1965- இல்  ஐநா  ஒரு  தீர்மானத்தை  நிறைவேற்றியது. அந்தத்  தீர்மானத்தை  அனைத்துலக  நாடுகள்  அங்கீகரித்து கையொப்பமிட  வேண்டும்.  இந்தத்  தீர்மானத்தில்  மலேசியா  இன்னும்  கையொப்பமிடவில்லை.  பல  இஸ்லாமிய  நாடுகள்  இந்த ஒப்பந்தத்தில்  கையொப்பமிட்டுள்ளன  என்பது  குறிப்பிடத்தக்கது. …

ஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்! மகாதிர் ஒப்புதல்

கி.சீலதாஸ், நவம்பர் 15, 2018. பிரதமர்  துன்  மகாதீர்  முகம்மது  எந்த  இனத்தைச்  சேர்ந்தவர்  என்ற  சர்ச்சை  நெடுங்காலமாக  இருந்து  வருகிறது.   அவரை  இந்திய  வம்சாவளித்  தோன்றல்  என்றார்கள்.  பாகிஸ்தானிய  வம்சாவளித்  தோன்றல்  என்றும்  சொல்லப்பட்டது.  மகாதீர்  முதன்முதலில்  பிரதமரானதும்  கேரளத்தின்  பிரபல  பத்திரிகையாளர்கள்:  “நம்ம  ஆள்  மலேசியாவை …

சீ பீல்டு அம்பாள்  தேர்வு வைத்திருக்கிறாள்!- சாமானியன்

சுமார் 147 ஆண்டுகள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த  அச்சுறுத்தல். இத்திரு நாட்டில் இந்து  ஆலயங்கள் முன்னேற்ற திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து பகடை காய்களாக உருட்டுப்படுவது நம்…

கட்சிகள் மாறின., ஆட்சியும் மாறியது..,ஆனால்,  அட  போங்கய்யா! -கி. தமிழ்ச்செல்வன்

இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு (22.11.2018) பிறகு 147 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம்  தரை மட்டமாகி மண்ணோடு மண்ணாய் தவிடு பொடியாகும் அபாயத்தில் உள்ளது. பண பலமில்லாத , அதிகாரமில்லாத ஆலய நிர்வாகமும், சில நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற மட்டும்…

பட்ஜெட்டில்  இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகளோடு ஓர்…

பக்காத்தான் ஹராப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மிக முக்கியமான பகுதியாகும். மிகவும் கவனமாக தொடர்ந்து இந்தியர்கள் தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இருந்து விலகாமலிருக்க 25 வாக்குறுதிகளை  நம்பிக்கை கூட்டணி அந்தச் சிறப்பு பகுதியில்…

சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம்,…

  சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம்,  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,  இத்தீபத் திருநாளில் மறையட்டும் இருள், ஒழியட்டும் ஊழல், ஓங்கட்டும் உழைப்பு, ஒளிரட்டும் நாடு, மலரட்டும் புதிய மலேசியா! மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,. ‘’தீபாவளி நாள் மட்டுமின்றி…

தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடையா? இயக்கங்கள் கண்டனம்!

தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடங்களாக இருக்கின்றன என்ற பிரதமர் மகாதிரின் கருத்துகள் போன்றவைதான் இன ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக அமையும்.   தாய்மொழிக்கல்வியின் தனிச்சிறப்பு ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்ற கண்டனத்தை சமூக அமைப்புகள் முன்வைத்துள்ளன. ஐபிபிஎன் (IPPN) என்ற என்றழைக்கப்படும் 12 அரசுசார்பற்ற பல்லின அமைப்புகளின் தேசிய கல்வி சீரமைப்பு முனைப்பு இந்நாட்டில்…

பிள்ளையை பகடைக்காயாகப்  பயன்படுத்தலாமா? கி.சீலதாஸ்

  தங்களின்  பிள்ளைகள்  பண்புள்ளவர்களாக,  நாவடக்கமுள்ளவர்களாக,  ஒழுக்கமுள்ளவர்களாக  வளர்க்கும்  பொறுப்பு  பெற்றோருக்கும்  பிள்ளைகளின்  பாதுகாவலர்களுக்கும்  உண்டு.  இந்த  நல்ல  பழக்கவழக்கங்கள்  நடைமுறையில்  செயல்படுகின்றனவா  என்று  சிந்தித்துப்  பார்த்தால்  அதிர்ச்சிமிகு  அனுபவங்கள்  வெளிப்படும்.  பிள்ளைகளைத்  தவறான  வழிகளில்  போவதைத்  தடுப்பதைவிட  அவர்களை  அந்தப்  பாதையில்  பயணிக்கச்  செய்யும்  பெற்றோர்களும்  இருக்கிறார்கள் …

வல்லினத்தின் வழி மலேசிய படைப்புகள் தமிழகத்தில் அறிமுகம்!  

வல்லினம் தனது 10 ஆண்டுகளின் நிறைவை ஒட்டி இவ்வருடம் வெளியீடு செய்த 10 நூல்களில் ஐந்தினை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெளியீடு செய்துள்ளது. நவம்பர் 18-இல் தனது பத்தாவது கலை இலக்கிய விழாவைக் கொண்டாட இருக்கும் வல்லினத்தின் இந்த அறிய செயல் பாராட்டத்தக்கது. சென்னை…

டாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார் மருத்துவமனைகளை அரசாங்கம் முடக்க…

புதிய தனியார் மருத்துவமனைகள் நிர்மாணிக்கப்படுவதை, அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கூறுகிறார். இந்நடவடிக்கை அரசாங்க மருத்துவமனைகளின் சேவைத் தரம் மோசமடைவதை நிறுத்தும் எனத் தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளின் அதிகரிப்பு, அரசாங்கப்…

ஐயே…!  மெத்த  கடினம்

கி.சீலதாஸ், அக்டோபர் 17, 2018.   “கோழி  மேய்ச்சாலும்  கும்பினியில்  மேய்க்கணும்”  என்ற  கிராமிய  மொழி,  ஆங்கிலேயர்களின்  ஆட்சி  எப்பொழுது  இந்தியத்  துணைக்கண்டத்தில்  கால்  ஊன்றியதோ  அன்றிலிருந்து  வழங்கி வந்தது.  இதன்  பொருள்  என்ன?  கிழக்கிந்தியக்  கம்பெனி  இந்தியத்  துணைக்கண்டத்தின்   பலநாடுகளை  தன்  ஆதிக்கத்தினுள்  கொண்டுவந்தது.  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்ட …

அறம் பிறழும் அரசியல்!

குடியாட்சியும் முடியாட்சியும் இணைந்த மலேசியாவில், அரசியலின் போக்கு பிறழ்ந்து வருகிறது. இத்தகைய நிலை, காலமெல்லாம் தொடர்வதுதான்; ஆனாலும், தற்பொழுது இந்த நிலை எல்லையை மீறுகிறது. இதனால் பரிதாபத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளாகுபவர்கள் பொதுமக்கள்தான். கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அல்லாமல், பொது மக்களுக்கும் தலைமை ஏற்பவர்கள், தாங்கள் பதவிக்கு வர வேண்டும்…

சிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், வேதமூர்த்தி

தீபகற்ப மலேசியாவில் வாழும் மூவின மக்கள், சபா-சரவாக் வாழ்மக்கள் என அனைத்து மக்களும் இந்த நாட்டில் சுபிட்சமாக வாழ வேண்டும்; குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் தேசிய நீரோட்டத்தில் தங்களை முழு மனதுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே இலக்கும் இலட்சி-யமும் ஆகும் என்று பிரதமர் துறை…

இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு ஜே.பி.…

    பள்ளியில் கல்வியைத் தொடராமல் விலகிவிடும் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு  வழிகாட்டும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு அமெரிக்க உலக வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் ஜே.பி. மோர்கன் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி உதவி அளித்துள்ளது.   இந்த…