இராணுவத்திடம் சரணடைந்தவர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் காட்ட வேண்டும் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன. இதன்போது, காணாமல்போயுள்ள உறவுகளைத் தேடும் குடும்பங்களின்…

அவசரத் தாக்குதல் பயிற்சியாம்: அமெரிக்க படைகள் இலங்கையில் !

அமெரிக்காவின் நேவி சீல் படையினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். அவர்களது போர் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இன் நிலையில் அவர்கள் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கிவருகிறார்கள். "பிளாஷ் ஸ்டைல்" தாக்குதல் என்று பெயரிடப்பட்ட திடீர் தக்குதலை எப்படி நடத்துவது என்பது தொடர்பாகவே அமெரிக்க படையினர் இலங்கைப்…

பொது வேட்பாளராக அறிவித்ததால் போட்டியிடுவதற்கு ஒப்புதல் : விக்னேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்துவிட்டதாக, இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், கூட்டமைப்பின் வடமாகாண முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். தமிழோசைக்கு…

இந்தியாவுக்கு உள்ள அடுத்த தெரிவு என்ன?

இந்தியாவின் பிராந்திய அரசியல் இராஜதந்திரத்துக்கு இப்போது மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கு எத்தகையது என்ற கேள்வி எழுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டிருந்த செல்வாக்கும், ஆதிபத்தியமும் 2009 மே 18ம் திகதியுடன் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது. இந்தியாவுடன் நேரடி…

பள்ளிவாசல் உடைப்பிற்கு ரவூப் ஹக்கீம் தான் காரணம் – ஜனாதிபதி

மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில்…

அரசாங்கத்தைத் தோற்கடிக்க ஒத்துழைப்பு : மனோகணேசன், அசாத் சாலியிடம் கெஞ்சிய…

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க ஒத்துழைப்புத் தருமாறு மனோ கணேசன் மற்றும் அசாத் சாலியிடம் கெஞ்சாத குறையாக ரணில் விக்கிரமசிங்க மன்றாடியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தேசிய ஐக்கிய…

வடமாகாண தேர்தலில் ராணுவம் முகாம்களுக்குள் இருக்கவேண்டும்

செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தலின்போது அந்த பிராந்தியத்தில் இருக்கும் இலங்கை ராணுவத்தினரின் பிரசன்னம் முற்றுமுழுதாக இருக்கக் கூடாது என்றும் ராணுவத்தினர் அனைவரும் அவர்களின் முகாம்களுக்குள் சென்றுவிடவேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதியிடம் தாம் கோரியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஜனாதிபதி…

கிறிஸ்மஸ்தீவு அருகே படகு கவிழ்ந்தது; 88 பேர் மீட்பு, 8…

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து 88 பேரை ஆஸ்திரேலிய மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். காணாமல்போயுள்ள 8 பேரை தேடிவருகின்றனர். ஆண் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலிருந்து இந்தப் படகு புறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், இரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே படகில்…

இலங்கையின் வடக்கில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

இலங்கையின் வடக்கே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கென துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். இதற்கென வடமாகாண மாவட்டங்களில் நடமாடும் சேவைகள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிகளை பரவலாக்கும் வகையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்…

தமிழர்களுடைய போராட்டத்திற்கு வட மாகாணசபை தீர்வல்ல!

இவ்வளவு காலங்களும் தமிழர்கள் சிந்திய இரத்தங்கள், கண்ணீர்கள், ஏற்பட்ட சொத்து அழிவுகள் போன்ற சொல்லொணாத் துன்பங்கள் வட மாகாண சபை ஆட்சி முறைக்காக அல்ல மாறாக எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நாங்களே தீர்மனிப்பதற்காகத் தான் என்பதை தமிழர்கள் தங்கள் மனங்களில் வைத்திருக்க வேண்டும். வடமாகாண சபை என்கின்ற ஒன்றை…

வன்னி முகாம்களை நிரந்தரமாக்க வேண்டும்- இராணுவத் தளபதி

வன்னிப்பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவப் படையணிகளுக்கென சொந்தமாகக் காணிகள் வழங்கி, அமைக்கப்பட்டுள்ள முகாம்களை நிரந்தர முகாம்களாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கிளிநொச்சிக்கு வெள்ளியன்று விஜயம் செய்து அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருக்கின்றார். லெப்டினன் ஜெனரல் தரத்தில் இராணுவ தளபதியாக இருந்து…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ- ததேகூ தலைவர் சம்பந்தன் சந்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப்…

தமிழீழத்திற்கான பாதைக்கு மீண்டும் திரும்பும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், பிரான்ஸ் தமிழர்கள் மத்தியில் ஆடியிலும் ஒரு வழி பிறந்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இப்படி ஒரு முடிவை அறிவிக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின்…

எமது நிலமும் கடலும் ஆதிக்க சக்திகளால் பறி போகின்றது!

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின் தலைமையிலான குழுவினர் சமகால நிலைமைகளை ஆய்வு செய்ய முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இவ்விஜயத்தின் போது, முல்லை. மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளர்களான மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர், அருள்பணி ஜோய் பெர்ணான்டோ, தலைவர் ரவிகரன்…

கே.பியை ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது மறைமுக அச்சுறுத்தல்: ஜாதிக ஹெல…

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கே.பி.யை ஒப்படைக்குமாறு இந்தியா கோருமானால் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக செயற்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கை நாட்டின் இறையாண்மையை பறிப்பதற்கு இந்தியாவுக்கோ, சிவ்சங்கர் மேனனுக்கோ இடமளிக்க முடியாது என அதன்…

வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ?

கடந்த 20ம் திகதி, இலங்கை மற்றும் இந்தியாவுக்கான கிரிகெட் போட்டி காடிஃப் நகரில் நடைபெற்றது. இதன்போது ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள். இதில் சில கை கலப்புகள் ஏற்ப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இதேவேளை மைதானத்தில் தமிழீழ தேசிய…

13வது அரசியல் அமைப்பு தற்போதுள்ள தீர்வுகளில் சிறந்தது: ராஜித சேனாரட்ன

13 வது அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் தயாராகி வருகின்ற போதும், தாம் 13 இல் மாற்றங்கள் கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள அவர், 13வது அரசியல் அமைப்பு இலங்கையின்…

சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி வெற்றியளிக்காது: தயான் ஜயதிலக்க எச்சரிக்கை

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி வெற்றியளிக்காது என்று சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் பீபீசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: ஹெல…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஆதரவளிக்கும் தரப்பினரை இணைத்துக் கொள்ளக் கூடாது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வடக்கு தேர்தல் கண்காணிப்பு…

காணாமல் போனவர்கள் கதை முடிந்தது! முடிந்ததே!- அதைப்பற்றி பேசுவதில் பயன்…

காணாமல் போனவர்கள் கதை முடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார். வடமாகாணசபை தேர்தலில் சுதந்திரக் கட்சிசார்பில் போட்டியிடவுள்ள தயாமாஸ்டர் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாள ர்களைச் சந்தித்து உரையாடும்போதே மேற்கண்டவாறு…

13ஐத் தாண்டிய தீர்வுத் திட்டத்தை இலங்கை முன்னெடுக்க வேண்டும்

இலங்கை அரசியல் யாப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பையும் தாண்டிய அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மதித்து நடத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தவிர இலங்கையின் வட மாகாண சபைக்கு தேர்தல்கள்…

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியில்லை!– பிரிட்டன் நீதிமன்றம்

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் புலி உறுப்பினர் என…

கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா…