சிலாங்கூர் எம்பி:நாட்டின் ஜிடிபி-க்கு அதிகம் பங்களிப்பது நாங்களே

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் கிட்டதட்ட கால்பகுதி சிலாங்கூரின் பங்களிப்பாகும். நேற்றிரவு மலேசிய வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இதனைத் தெரிவித்தார். அது, புள்ளிவிபரத் துறையும் தலைமைக் கணக்காய்வாளரும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் என்று அறிவித்த அவர், 2008-இல்,…

ஆசிரியர்களின் அரசியல்சார்பைப் பதிவுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை

கல்வி அமைச்சு, ஆசிரியர்களின் அரசியல்சார்புப் பற்றித் தகவல் சேகரிக்குமாறு மாநில கல்வித் துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்ததில்லை என்கிறார் கல்வி துணை அமைச்சர் புவாட் ஸர்காஷி. தாவாவ் கல்வித் துறை அதற்கான கடிதத்தை வெளியிட்டிருப்பது பற்றி வினவியதற்கு, அப்படி ஒரு கடிதத்தைத் தாம் பார்த்ததில்லை என்றும் தமக்குத் தெரிய அப்படி…

காலணியை விட்டெறிந்த இமாமுக்கு சிறை “மித மிஞ்சிய” தண்டனையாகும்

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை நோக்கிக் காலணியை விட்டெறிந்த இமாம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்று முடிவுசெய்து கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை என்று அளித்துள்ள தீர்ப்பு மிதமிஞ்சியதும் பொருத்தமற்றதுமாகும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார். ஹொஸ்லான் ஹுசேனைத் தற்காத்துப் பேசிய சுரேந்திரன்…

எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் மசீச தலைவருக்கு ஆணை

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ( PKFZ )மீது அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் மீது எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக்-கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 68 வயதான முன்னாள் மசீச தலைவருக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு வெற்றிகரமாக…

அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்

கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார். நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து…

மாநிலத் தேர்தல்களை நடத்துவது பற்றி முடிவு செய்ய பக்காத்தான் கூடுகிறது

பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தங்கள் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். அந்தக் கூட்டம் கோலாலம்பூரில் நிகழும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார். 1.3 மில்லியன்…