ஐயத்துக்குரிய குடியேற்றக்காரர்களுடைய மை கார்டுகளை ரத்துச் செய்யுங்கள்

அந்நியக் குடியேற்றக்காரர்கள் ஐயத்துக்குரிய வழிகளில் பெற்ற அனைத்து அடையாளக் கார்டுகளையும் அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என பிபிஎஸ் எனப்படும் பார்ட்டி பெர்சத்து சபா தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் யோசனை கூறியிருக்கிறார். சபா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்புக்கள் அடிக்கடி எழுப்பி வரும் 'அடையாளக் கார்டு…

பிரதமர்: புத்தாக்க சிந்தனைகளை பின்பற்றுங்கள் அபாயங்களை ( RISK) எதிர்கொள்ள…

மலேசியர்கள் புத்தாக்க சிந்தனையாளர்களாக உருவாவதற்கு துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். புத்தாக்கர் ( innovator ) புதிய வழிகளைத் தேடுவாரே தவிர மற்றவர்கள் விட்டுச் சென்ற பாதையில் செல்ல மாட்டார் என்றார் அவர். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், வாக்மேனைக் கண்டு…

அம்னோவுக்கு ‘கம்யூனிஸ்ட்’ சீனாவுடன் உறவுகள் இல்லை

பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கமே சீன மக்கள் குடியரசுடன் உறவுகளை வைத்துக் கொண்டுள்ளது. அம்னோ அல்ல என்று வெளியுறவு அமைச்சு இன்று கூறியது. மக்களவையில் இன்று காலை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த வெளியுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் அவ்வாறு தெரிவித்தார்.…

வெளிநாட்டில் வாழும் மலேசியர்கள் இசி-க்கு எதிராக வழக்கு

வெளிநாட்டில் பணிபுரியும் ஆறு மலேசியர்கள், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய தேர்தல் ஆணைய (இசி)த்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மனுவைப் பதிவுசெய்த அவ்வறுவரும் பிரிட்டனில் வேலை செய்கின்றனர்.13வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க தங்களை நாட்டில்-இல்லா வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றவர்கள்…

மக்களவையிலிருந்து வெளியே செல்லுமாறு கோபாலா உத்தரவிடப்பட்டார்

முன்னாள் பிகேஆர் எம் பி கோபால கிருஷ்ணனை (பாடாங் சிராய்-சுயேச்சை உறுப்பினர்) மக்களவையில் குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவையிலிருந்து வெளியில் செல்லுமாறு துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி வான் ஜுனாய்டி இன்று உத்தரவிட்டார். பிஎன் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதினைக் கண்டிப்பதற்கு தாம் கொண்டு வந்த தீர்மானத்தை தமது…

கணக்கறிக்கை பிஎன் அரசுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு “சிவப்பு” அட்டை

தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை பள்ளியில் மாணவர்களுக்குக்  கொடுக்கப்படும் தேர்ச்சி அறிக்கை போன்றது என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். ஆனால், இந்த அறிக்கையில் சிவப்பு மையால் எழுதப்பட்ட குறிப்புகளும் குறைந்த மதிப்பெண்களும்தாம் நிறைய உள்ளன என்றும் அது, பிஎன் அரசின் தோல்வி பற்றிக் கதைகதையாகக் கூறுகிறது என்றும்…

யூயூசிஏ சட்டத்தின் 15வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றம்…

பொதுப் பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்யும் யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15(5) வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது. பேச்சுச் சுதந்திரத்தை மீறுகிறது என முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. யூயூசிஏ கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்புக்கு உட்பட்டது என கோலாலம்பூர்…

அவர்கள் காட்டிலே மழை…அனுபவி ராஜா அனுபவி

“இது பனிப்பாறையின் நுனிப் பகுதி மட்டுமே. அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் பெரும்பாலான குத்தகையாளர்கள் அம்னோவின் அல்லக்கைகள்.” கிழிந்த மெத்தைகளுக்கும் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது  அலன் கோ: தலைமைக் கணக்காய்வாளர் சுட்டிக்காட்டி உள்ளதுபோல் அங்கிங்கெனாதபடி நாடெங்கினும் ஊழல்கள், அத்துமீறல்கள். அப்படியிருக்க, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) எங்கிருந்து விசாரணையைத் தொடங்கப் போகிறது…

பேஜ் அமைப்புக்கு பிஎன் செவி சாய்க்குமா? அதனை நம்ப வேண்டாம்

"நூர் அஸிமா சொல்வது சரி அல்ல. பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கும் அதிகாரம் பேஸ் அமைப்புக்கு இல்லை. அந்த அதிகாரம் கூட்டாக வாக்காளர்களைச் சார்ந்துள்ளது." ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்கள்: எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தருகிறோம்…

இண்டர்லோக் விவகாரம்: பேரரசரிடம் மனு கொடுக்கப்படும்

இண்டர்லோக் எஸ்பிஎம் தேர்வுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக பயன்படுத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்நூல் பள்ளியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நியட், அதன் போராட்டத்திற்கு கடந்த பத்து மாதங்களாக எந்தத் தீர்வும் இல்லாமல் இருந்து வருவதுடன் அது கல்வி அமைச்சுக்கும் இதர அரசாங்க இலாகாகளுக்கும்…

துப்பாக்கித் தோட்டா மருட்டலைப் போலீஸ் புலனாய்வு செய்கிறது

அரசியலமைப்பு சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரிக்கு  துப்பாக்கித் தோட்டா அனுப்பப்பட்ட விவகாரத்தை போலீஸ் புலனாய்வு செய்கிறது. அடையாளம் தெரியாத தொடர்புகள் மூலம் கிரிமினல்  அச்சுறுத்தல் அல்லது குற்றவியல் சடத்தின் 507வது பிரிவின் கீழ் அந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது. அஜிஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு நேற்று ஒரு கடிதத்துடன்…

“எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்; நாங்கள் உங்களுக்கு 2/3 பெரும்பான்மையைத் தருகிறோம்”

பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை போதிப்பதற்கான தேர்வை பள்ளிக்கூடங்களுக்கு வழங்குவதில்லை என்னும் அரசாங்க முடிவால் பெற்றோர்களும் பிள்ளைகளும் 'மனமுடைந்து' போயிருப்பதாக பேஜ் எனப்படும் மலேசியக் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை அமைப்பு கூறுகிறது. "பெரும்பாலான கணித, அறிவியல் ஆசிரியர்கள், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு அந்த இரு பாடங்களையும் ஆங்கிலத்தில்…

காமன்வெல்த் புதிய சீர்திருத்தங்கள் குறித்து அகமது படாவி கருத்து

மனித உரிமைகள், எச்.ஐ.வி., பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதற்கான காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை காமான்வெல்த் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், காமன்வெல்த் கூட்டம் தோல்வியில்தான் முடிவடையும் என முன்னாள் தலைமையமைச்சர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.…

மகாதீர்: கிழக்கை நோக்கும்’ கொள்கையைத் தொடருங்கள்

மலேசியாவும் மற்ற இஸ்லாமிய நாடுகளும் தங்கள் மேம்பாட்டுக்கு மாதிரியாக மேலை நாடுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக மற்ற கிழக்கு நாடுகளைப் பார்க்க வேண்டும். இவ்வாறு முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். தாம் பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானிய, தென் கொரிய வேலை நெறிமுறைகளையும் வர்த்தக…

சுல்தான் பெயரைக் காப்பதற்கு ஒரு துப்பாக்கித் தோட்டா

எந்த ஒரு சுல்தானுடைய பெயரிலும் அத்தகைய அவமானமான மருட்டல்கள் விடுக்கப்படுவதை விட நமது அரசியலமைப்புக்கு உட்பட்ட சுல்தான்களுக்கு பெருத்த அவமானம் வேறு ஏதுமில்லை. பேராசிரியர் அஜிஸ் பேரிக்கு அஞ்சலில் துப்பாக்கித் தோட்டா கலா: அதனை அனுப்பியவருக்கு அந்த அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி…

மாணவர் விடுதிகளில் கிழிந்த மெத்தைகள் ஆனால் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது

சபாவில் அரசாங்க நிதி உதவி பெறும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கிழிந்த மெத்தைகளில் தூங்க வேண்டியுள்ளது. வெளியில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய்களில் குளிக்க வேண்டியுள்ளது. அந்தப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கிய போதிலும் அந்த சூழ்நிலை காணப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில்…

இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும்…

ஜொகூர் சுல்தான்: சட்ட விரோத பேரணிகளில் பங்கேற்றால், பதவி துறப்பேன்

நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டலாக அமையும் என்பதால் பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரிகளும் சட்ட விரோதமான பேரணிகளில் பங்கேற்கக் கூடாது என்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், இன்று ஆலோசனை கூறினார். யுனிவர்சிட்டி துன் ஹுசேன் ஓன் மலேசியாவின் (யுடிஎச்எம்) வேந்தரான சுல்தான் இப்ராகிம் அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில்…

இண்டர்லோக்: எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடையும் அபாயம்

இவ்வாண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்வில் மலாய் இலக்கிய பாடத்திற்கான பாடநூல் நிலை என்ன? எஸ்பிம் மலாய் இலக்கிய பாடநூலாக இண்டர்லோக் அறிவிக்கப்பட்டு அது பெரும் பிரச்னையான பின்னர் அந்நூலுக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்த பின்னர் திருத்தங்களுடன் கூடிய புதிய இண்டர்லோக் நூல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.…

இபிஎப் மிகப்பெரிய பொன்ஸி திட்டமாக மாறிவருகிறது

“சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டுதான் லாப ஈவு வழங்குகிறார்களா?இல்லையென்றால் இவர்களுக்கு வேறு எங்கிருந்து வந்தது  பணம்?” அரசு உத்தரவாதமின்றி இபிஎப் ரிம55பில்லியன் கடன் கொடுத்துள்ளது தைலெக்: ஊழியர் சேமநிதி (இபிஎப்)-யிடம் கடன்வாங்கிய நிறுவனங்களின் பெயர்களையும் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவை ஜிஎல்சி(அரசுதொடர்புள்ள…

அசீஸ் பேரிக்கு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டா

சட்டப் பேராசிரியர் அசீஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு ஒரு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டாவும் இன்று வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் மாதம் தேவாலயம் ஒன்றில்  மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கைமீது அவர் தெரிவித்த கருத்தின் தொடர்பில் அது அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றவர் கருதுகிறார். கடித்ததில்.…

தாம் நீக்கப்பட்டதற்கு அமைச்சருடைய நெருக்குதலே காரணம் என்கிறார் முன்னாள் சஞ்சிகை…

சீன மொழிச் செய்தி சஞ்சிகை ஒன்றின் (ஸ்பெஷல் வீக்லி) முன்னாள் ஆசிரியர் ஒருவர், தாம் கடந்த ஆண்டு அந்த சஞ்சிகையிலிருந்து நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கொடுத்த நெருக்குதலே காரணம் எனக் கூறிக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சின் சியூ டெய்லி அலுவலகத்துக்கு…

தேர்தல் சீர்திருத்தம் மீது முன்னாள் இசி தலைவர் “வெளிச்சத்தை” காண்கிறார்

கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் 'தேர்தல் மனிதராக' திகழ்ந்த  இசி என்ற  முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சூழ்நிலைகள் மாறியுள்ளதாகக் கருதுகிறார். 2008ம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் இப்போது சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருப்பதாகவும் எண்ணுகிறார். ஈராயிரத்தாவது ஆண்டு…