கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நார்வேயின் ஏவுகணை விநியோகத் தடை மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS) திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டினை வலியுறுத்தியுள்ளார். கடற்படையின் மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS)…
அரசியல் நெருக்கடியால் எஸ்பிஆர்எம் விசாரணையா?
முன்னால் நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசேச பணி அதிகாரியாக இருந்த கா உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும்…
மியான்மர் அகதிகளுக்கு ஆதரவாக காலணி போராட்டம்
முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் ஒன்று அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. மலேசியாவில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில், 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய…
பி.என். அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஜிஇ15-ஐ சேர்ந்து எதிர்கொள்ளும் –…
தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை உருவாக்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்வதில் தொடர்ந்து ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். எவ்வாறாயினும், பெர்சத்து தலைவரான அவர், எதிர் நிலைப்பாட்டை முடிவு செய்வது அந்தந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பம் என்றார்.…
ஆதரவைப் பெருக்க அரசு நிறுவனங்கள் ‘அரசியல் ஆயுதங்களாக’ பயன்படுத்தப்படுகின்றன –…
தேசியக் கூட்டணிக்கு (பி.என்.) ஆதரவளிக்க, அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் நடப்பதாக பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க நிறுவனங்களான காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் ஆகியவற்றை "அரசியல் ஆயுதங்களாகப்" பயன்படுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்,…
இன்று 2,154 புதிய நோய்த்தொற்றுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் எண்ணிக்கை குறையவில்லை
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,154 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாவட்டங்களுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு ஒரு நாள் முந்தைய நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜொகூரில், சராசரியாக 316-ஆக இருந்த பாதிப்புகள்,…
ஜாஹித்தின் அறிக்கை தவறானது, பி.என். உறுப்பு கட்சிகள் கூறுகின்றன
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி (பி.என்.) மாமன்னருக்கு வேண்டுகோள் விடுத்ததாகக் கூறும் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் அறிக்கை தவறானது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று சில பி.என். தலைவர்கள் அதை உறுதிப்படுத்த முன்வந்தனர். "விக்கி (விக்னேஸ்வரன்) கூறியது…
அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
ஓரினச் சேர்க்கை வழக்கு 2-ல் உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து, அன்வர் இப்ராஹிம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகினார். அன்வாரின் மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் இருந்து விலகுவதாக கமலுடின் முஹமட் சைட் இன்று…
ம.இ.கா. : ஜாஹித்தின் அறிக்கை தவறானது, பி.என். மக்களவையைக் கூட்ட…
தேசிய முன்னணி (பி.என்.) தலைமைக்குக், குறிப்பாக அம்னோவுக்குப் பெரும் அடியாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனும் அஹ்மத் ஜாஹித் ஹமீடியின் அறிக்கை அவதூறானது என ம.இ.கா. கூறியுள்ளது. மறுபுறம், புதன்கிழமை நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில்,…
இரண்டு முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைந்தனர்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) டிக்கெட்டுகளில் வென்ற இரண்டு பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், பால் யோங் (துரோனோ) மற்றும் எ சிவசுப்பிரமணியம் (புந்தோங்) இருவரும் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கூட்டணியை ஆதரிப்பதற்காக,…
ஆய்வாளர் : நாட்டின் அரசியல் நிலைமை தொடர்ந்து ‘கொதிநிலையில்’
சமீப காலமாக, மக்கள் பிரதிநிதிகளிடையிலான கட்சி தாவும் நிகழ்வுகள் அரசியல் போர்களின் தொடர்ச்சியான சுழற்சிக்குப் பங்களிப்பதாகத் தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பெரும்பான்மை இடங்களின் உறுதியற்ற தன்மை, கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நிலையற்றதாக இருக்கும்…
‘சந்தாரா பிரச்சினைக்குத் தெளிவு வேண்டும்’ – நியூசிலாந்து எதிர்க்கட்சி வலியுறுத்து
கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா, சிறப்பு உபசரிப்பு பெற்றாரா, இல்லையா என்பது குறித்து நியூசிலாந்து அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. இந்த விஷயத்தை வெலிங்டனைத் தளமாகக் கொண்ட ஸ்டஃப் (Stuff) செய்தி நிறுவனம், அந்நாட்டில் சாந்தாராவின் நிலை என்ன அல்லது தனிமைப்படுத்தலுக்காக அவர் எவ்வளவு காலம் காத்திருந்தார்…
இன்று 2,063 புதிய நோய்த்தொற்றுகள், 5 மரணங்கள் பதிவாகின
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,063 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பினாங்கு மற்றும் சரவாக்கில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பினாங்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று 337 புதிய பாதிப்புகளையும், சரவாக் 361…
ஜிஇ15 : பெர்சத்து – பி.என். ஒத்துழைப்பு இரகசியமாகவே உள்ளது
நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசியக் கூட்டணியுடனான தற்போதைய ஒத்துழைப்பு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டதாக அக்கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில், நேற்று நடந்த சந்திப்பின் போது அம்னோ, மசீச, ம.இ.கா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி…
அன்வர் மக்களவை சபா நாயகரைச் சந்தித்தார்
இன்று, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை பிரதிநிதிகளும் மக்களவை சபாநாயகர் அஸிஸான் ஹருனுடன் நாடாளுமன்றத்தில் சந்திப்பு ஒன்றினை நடத்தினார். "அக்கூட்டத்தின் போது, அண்மையில் இஸ்தானா நெகாரா வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு ஏற்ப, மக்களவை அமர்வை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் எழுப்பினோம்," என்று…
‘1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சமரசமின்றி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்’
1எம்டிபி ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவதில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. டெலாய்ட்டுடனான (Deloitte) சமீபத்தியத் தீர்வுகள், அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்ற நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், 1எம்டிபி மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது…
தடுப்பூசி : வரிசையை முந்திச் செல்பவர்களுக்கு RM50,000 தண்டம், 6…
கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக, "வரிசையை முந்திச் செல்லும்" நபர்களுக்கு RM50,000-க்கு மேல் போகாத் தண்டம் அல்லது அதிகபட்சம் ஆறு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மார்ச் 11 முதல் அமலுக்கு வரும் அவசரகால (நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் 2021-ன் கீழ், புதிய…
‘வெளிநாட்டில் இருந்தாலும், துணையமைச்சர் தனது பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்’
கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் நியூசிலாந்தில் இருப்பதால், கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் பணியாற்றவில்லை என்றக் கருத்தை எட்மண்ட் சந்தரா குமாரின் அதிகாரி மறுத்துள்ளார். சந்தாராவின் சிறப்பு அதிகாரி மு இராஜா, வெளிநாட்டில் இருந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது அதிகாரிகளின் கடமைகளைக் கண்காணிக்கிறார் என்று கூறினார். "ஒவ்வொரு…
பி.கே.பி.பி பகுதிகளில் படப்பிடிப்புகள், திரையரங்குகளுக்கு அனுமதி
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மற்றும் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) ஆகியப் பகுதிகளில் படப்பிடிப்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) கோடிட்டுக் காட்டிய செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அவை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின்…
ஜாஹித் : இனி பி.கே.பி. இல்லை, எப்போது நாடாளுமன்றம் கூட்டம்?
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த, பேரரசருக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கும் என அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கேள்வி எழுப்பினார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அகற்றியதாலும், வணிகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டதாலும் அவர் இந்தக் கேள்வியைத் தனது முகநூலில் எழுப்பியுள்ளார். மார்ச் 5 முதல், கோவிட் -19 பரவலைத்…
அந்த நிலம் பள்ளிக்கு ஒப்படைக்கப்பட்டது – சைபுதீன், இல்லை குத்தகை…
கூலிம், சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 0.447 ஹெக்டர் நிலத்தின் நிலை குறித்து இரண்டு முரண்பட்ட கருத்துகள் உள்ளன. பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் (பிஐபிஜி) தலைவர், கே முனியாண்டி, 47, கூற்றின்படி, தற்போது அந்நிலத்தை அதன் உரிமையாளரிடமிருந்து, அதாவது கெடா மாநில மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.கே.என்.கே.) மூன்று…
கணக்கெடுப்பு : பிரதமர் பதவியில் முஹைதீன் – 5 மலேசியர்களில்…
இன்ஸ்டிட்யூட் டாருல் ஏஹ்சான் (ஐடிஇ) நடத்திய ஓர் ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில், 19 விழுக்காட்டினர் மட்டுமே முஹைதீன் யாசின் நாடாளுமன்றம் முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி (46 விழுக்காடு) பேர் முஹைதீன் இராஜினாமா செய்ய வேண்டும், ஏனெனில் அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப்…
மார்ச் 5 முதல் சிலாங்கூர், கே.எல்., ஜொகூர் மற்றும் பினாங்கில்…
மார்ச் 5 முதல், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் அமலுக்கு வரும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். சபாவைத் தவிர - மாநில அரசின் வேண்டுகோளின்படி - அனைத்து மாநிலங்களிலும் எல்லையைக்…
முனைமுகப் பணியாளர்கள் விடுப்பெடுக்க முடியாது, ஆனால் துணையமைச்சர் முடியும் –…
இந்த நேரத்தில், வெளிநாட்டில் இருக்கும் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார், கோவிட் -19 தொற்றை நிர்வகிக்கும் தேசிய முன்னணி முனைமுகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைத் தனக்கு நினைவூட்டுவதாக புவாட் சர்காஷி கூறினார். அந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தொற்றுநோயுடன் இன்னமும் போராடி வரும் முன்னணி ஊழியர்கள் மிகுந்த…
























