தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
`கமலா ஹாரிஸ் ஒரு சட்டவிரோத குடியேறி`, என்ற கூற்றுக்கு டிவி…
அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா தேவி ஹாரிஸை, "இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவரின் மகள் " என்று கூறியதற்காக டிவி 3 மன்னிப்பு கேட்டுக்கொண்டது. டிவி 3-ன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் படித்த அந்த மன்னிப்புச் செய்தி கீச்சகத்திலும் பதிவேற்றப்பட்டது. "நேற்று ‘புலட்டின் 1.30’ செய்தி அறிக்கையில், அமெரிக்காவின்…
அன்வர் : மக்களை நம்ப வைக்க, கோவிட் -19 நேர்வுகள்…
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதைப் பொதுமக்கள் நம்பி, ஏற்றுக்கொள்ள, கோவிட் -19 பாதிப்புகள் தொடர்பான திறந்த தரவை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கருதுகிறார். தரவுகளை வெளியிடுவதில், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையைப் பொதுமக்கள் இப்போது மறுக்கத் தொடங்கியுள்ளதாக அன்வர் கூறினார். "நான்…
திருத்தம் இல்லாவிட்டால் பட்ஜெட்டை ஆதரிக்க முடியாது – அன்வர்
"மக்கள் நலனுக்காக" திருத்தங்கள் செய்யப்பட்டால் 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு மக்களவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். "நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன், ஓர் எளிய அனுமானத்தை நான் விரும்பவில்லை. நிலைமை இப்போது வேறுபட்டது. "நாங்கள் கோருவது போல் மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க…
கல்வி அமைச்சரிடம் ‘மக்கள் புலம்பல்’ தொடர்பான 7 கேள்விகள் ~…
விமர்சனம் | இது, இரண்டு முக்கிய அறிவிப்புகளான, ஜனவரி 2021 வரை பள்ளிகளை மூடுவதுடன், எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம், எஸ்.வி.எம் மற்றும் எஸ்.டி.எ.எம். போன்ற தேர்வுத் தேதிகளில் திருத்தங்கள் தொடர்பானது. இந்த முக்கிய அறிவிப்புக்கு, கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடின் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் அனைத்து ஊழியர்களுக்கும்…
போலிஸ் சோதனையைப் பதிவு செய்வது குற்றமல்ல – வழக்கறிஞர் மன்றம்
காவல்துறையினர் சோதனையிடுவதைப் பதிவு செய்வது ஒரு குற்றச்செயல் அல்ல என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் சலீம் பஷீர் கூறினார். நேற்று, பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த ஆர்வலர் ராபின் யாப் வென் குயிங்கின் வீட்டில், காவல்துறையினர் சோதனை நடத்தியதைப் பதிவு செய்த மாணவ ஆர்வலர் வோங் யான் கே…
கோவிட் 19 : இன்று 852 புதியத் தொற்றுகள், 4…
நாட்டில், இன்று 8532 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த 5 நாட்களாக 1,000-த்திற்கும் அதிகமாக இருந்த நோய்த்தொற்றின் எண்ணிக்கை இன்று இறங்கியுள்ளது. அவசரப் பிரிவில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,…
கிட் சியாங் : பி.கே.பி.பி. பகுதிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய…
இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், நாளை முதல் பல மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) அமல்படுத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தினார். உயிரைக் காப்பாற்றுவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க…
ரஸ்லான்: அரசாங்கத்தில் பி.எச்.-ஐ ஈடுபடுத்த வேண்டுமென்ற பிரதமரின் திட்டம் பேரழிவை…
தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் (பி.என்.) நம்பிக்கைக் கூட்டணியை (பி.எச்.) ஈடுபடுத்த வேண்டுமென்ற பிரதமர் முஹைதீன் யாசினின் முன்மொழிவு நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபி கூறினார். முஹைதீன் அரசாங்கத்தை நிர்வகிக்க, எதிர்க்கட்சியின் உள்ளீடு இல்லாமல், அரசாங்கத்தின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவையால் தேவையான…
எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மற்றும் எஸ்.டி.ஏ.எம். தேர்வுகள் தேதி மாற்றம்
மலேசியக் கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.), மலேசியத் தொழிற்கல்வி சான்றிதழ் (எஸ்.வி.எம்.), மலேசிய உயர்நிலைக்கல்வி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலைக்கல்வி (மதம்) சான்றிதழ் (எஸ்.டி.ஏ.எம்) ஆகியப் பொதுத் தேர்வுகளின் தேதிகள், கோவிட் -19 பிரச்சினை காரணமாக மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர், டாக்டர் ராட்ஸி ஜிடின், நாட்டின் தற்போதைய…
கல்வி அமைச்சு : ஜனவரி 2021 வரை அனைத்து பள்ளிகளும்…
மலேசியக் கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் அனைத்து பள்ளிகளும் – நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பி.கே.பி.பி) உட்படாத மாநிலங்கள் உட்பட - நாளை முதல் பள்ளியின் கடைசி நாள் வரை மூடப்படும். இதனைக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் இன்று காலை அறிவித்தார். நாளை முதல் பி.கே.பி.பி.…
கோவிட் 19 : இன்று 1,168 புதியத் தொற்றுகள், 3…
நாட்டில், இன்று 1,168 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 616 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது அவசரப் பிரிவில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,…
ம.இ.கா. : தேசிய வகைப் பள்ளிகளுக்குச் சிறப்பு மானியம் தேவை
தேசிய வகைப் பள்ளிகளை ஓரங்கட்டியதாகக் கூறப்படும் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் அதிருப்தி அடைந்த ம.இ.கா. தலைவர் ஒருவர் , உடனடியாக சிறப்பு ஒதுக்கீடுகளை அறிவிக்குமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) வலியுறுத்தியுள்ளார். கெடா ம.இ.கா. தலைவர் எஸ் ஆனந்தன், அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்ட RM800 மில்லியன் ஒதுக்கீட்டை விநியோகிப்பதில்…
நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை பெரும்பாலான மாநிலங்களில்…
கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை, பெரும்பாலான மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது. கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களிலும் பி.கே.பி.பி. அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு…
அன்வர் : பலவீனமான பட்ஜெட், பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுக்கும் என்று…
பட்ஜெட் 2021 | மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தில் மிக முக்கியமான பலவீனம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த விவரங்களை அது தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில், பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன், அவரது முகநூல்…
`வருமான வரி வசூலிப்பதன் மூலம், அரசாங்கம் எப்படி வருமானம் ஈட்டும்’
பட்ஜெட் 2021 | டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, 2021 வரவுசெலவுத் திட்டம் எவ்வாறு தனிநபர் வருமான வரியின் வருவாயை 18 விழுக்காடு உயர்த்தும் என்று ஆச்சரியப்பட்டார். ஏனென்றால், ஆண்டுக்கு RM50,001 முதல் RM70,000 வரை வரி செலுத்தக்கூடிய வருமானம் உள்ள நபர்களுக்கு, வருமான வரி விகிதம்…
2021 வரவுசெலவுத் திட்டம் ‘சிக்கலில் இருக்கும் மக்களை ஏமாற்றியது’ –…
பட்ஜெட் 2021 | நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தாக்கல் செய்த 2021 வரவுசெலவுத் திட்டம், பி40 சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகப் பல தொழிற்சங்கங்களும் தன்னார்வத்தொண்டு ஆர்வலர்களும் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். “இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, பயமுறுத்தும் ஒரு பட்ஜெட் மற்றும் பெரும்பாலான கொள்கைகள் மறுசுழற்சி…
தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு மானியங்கள் எங்கே?
பட்ஜெட் 2021 | எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் தேசிய வகைப் பள்ளிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இன்று பிற்பகல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தில் சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தேசியக் கூட்டணி அரசாங்கத்தை டிஏபி எம்.பி.க்கள் விமர்சித்தனர்.…
கோவிட் 19 : இன்று 1,755 புதியத் தொற்றுகள், 2…
நாட்டில், இன்று 1,755 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மலேசியாவில் இதுவரை பதிவான ஆக அதிக எண்ணிக்கை இதுவாகும். 1,119 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான…
குழந்தைகளைத் தடுப்பு மையங்களிலிருந்து விடுவியுங்கள், என்.ஜி.ஓ. அரசாங்கத்திற்கு வலியுறுத்து
மனித உரிமைகள் குழுவான, லோயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (Lawyers For Liberty-எல்.எஃப்.எல்) தேசியக் குடிநுழைவு தடுப்பு மையத்தில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதால், மனித உரிமைகளின் அடிப்படையில் அக்குழந்தைகளை விடுவிக்க வேண்டுமென அந்தத் தன்னார்வத்…
பி.கே.பி.ஐ.எம். கிளாந்தான் : மாநிலப் பிரதிநிதிகளின் சம்பள உயர்வு நியாயமற்றது
கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமல்லாமல், கல்வி உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மலேசிய இஸ்லாமிய மாணவர்களின் தேசியச் சங்கம் (பி.கே.பி.ஐ.எம்) கிளாந்தான் தெரிவித்துள்ளது. எனவே, கல்விச் செலவைச் சமாளிக்க முடியாத குடும்பங்களின் சிரமத்திற்கு மாநில அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று…
அன்னுவார் : மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்தை அழிக்காது
222 எம்.பி.க்களில் 80 பேரை மட்டுமே ஒரு நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா ஆதரித்தார். மற்ற எம்.பி.க்கள் மாநாட்டில் சுழல்முறையில் கலந்துகொள்ள முடியும், மேலும் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்க அனுமதிக்கப்படுவதாகவும் அன்வார் விளக்கினார். “இதில் என்ன ஜனநாயகம்…
மக்களவை புதிய விதிகளின் சூழ்ச்சி என்ன?
விமர்சனம் | கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க எம்.பி.க்கள் உட்பட நாம் அனைவரும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது உண்மையில் நல்லது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் எனக் குறைக்கப்பட்டு, உறுப்பினர்களின் வருகை 80 பேருக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருப்பது,…
தீபாவளி முதல் நாளில் கோயில்களில் கொண்டாட்டத்திற்கு அனுமதி
மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இருக்கும் இந்துக்கள் தீபாவளியின் முதல் நாளில் கோயிலில் பிரார்த்தனைகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இருப்பவர்கள் கிராமத்திற்குத் திரும்பும் நோக்கத்திற்காக மாவட்டம் அல்லது மாநிலத்தைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மூத்த…























